ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மய்ய [மான] அரசு..?


                 புடினின் கள்ள வாக்குகளை எதிர்த்து மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரிரஷ்யாவில்நடக்கும் போராட்டம்.
 மூன்றாண்டுகளுக்கு பின் 10.12.2011 அன்று நடந்த சந்திர கிரகணம்.இந்த நூற்றாண்டின் கடைசி சந்திர கிரகணம் இது.
---------------------------------------------------------------------------------------------------------
 பதட்டத்தை தணியுங்கள்,,,,,,,,.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, தேவன்பட்டி, நாராயணசேவல்பட்டி, சுருளிபட்டி, தேனிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கம்பத்திலிருந்து குமுளி நோக்கி பேரணியாக நேற்று
புறப்பட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேரணியில் இப்போதும்ஏராளமான மக்கள் வந்து கலந்து கொண்டேஇருக்கின்றனர். இதனால் பேரணியில் ஒரு லட்சம் மக்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆனால் எல்லை தாண்டிவருபவர்களை சுட கேரள மாநில போலீசாருக்குகேரளாஅரசு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவுபிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு் துப்பாக்கி ஏந்திய கேரளா காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கபப்ட்டுள்ளனர். கேரளா அரசும்,அரச்சியல்வாதிகளும் -தமிழக எல்லையோர பாதிக்கப்படட மக்களும் இப்படி பதட்டத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.தமிழக அரசும்,மத்திய அரசும் என்னதான் முக்கிய அவசர வேலையில் உள்ளனர்.
அமைச்சர்களை,அலுவலர்களை மாற்றிக்கொண்டு முக்கிய வேலையில் உள்ள தமிழக முதல்வர் இம்மக்களை தொடர்புகொண்டு பதட்டத்தை தணிக்காமல் இருப்பது தவறானது.முதல்வர் உடனே செயலில் இறங்க வேண்டும்.

மத்திய அரசை இனியும் நம்பி பயனில்லை.அவர்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கே உலைவைக்கும் இக்காரியத்தை விட அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் கொண்டுவருவதுதான் முக்கியம்.இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் சோனியா காங்கிரசின் முக்கிய நோக்கம் என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டு விட்டது.அவர்களின் செயல்பாடுகள் அவ்வாறுதான் உள்ளது.
மய்ய அரசு இப்பிரச்னையை பொறுத்த அளவில் மய்யமாகிவிட்ட அரசாகத்தான் உள்ளது.
=================================================================