நடவடிக்கைகள் தேவை?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டலோக்பால் வரைவு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

70 பக்கங்கள் கொண்ட இவ்வரைவில் உள்ள முக்கிய கூறுகள்:-

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அங்கீகா ரம் அளிக்கப்படும். 9 பேர் கொண்ட ஒரு தனி தலை மை அமைப்பு, அரசு அதிகாரிகளின் ஊழல்-லஞ்சம் குறித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும். இந்த அமைப்பு பரிந்துரை செய்தால் தான் இந்தப் புகார் குறித்து லோக்பால் அமைப்பால் விசாரிக்க முடியும். தானாக எந்த அதிகாரி மீதும் லோக்பால் அமைப்பால் விசாரணை நடத்த முடியாது.

*மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

*லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும்.

லோக்பால் அமைப்பு சிபிஐ அமைப்பைக் கட்டுப் படுத்த முடியாது, அதன் கட்டுப்பாடு தொடர்ந்து மத்திய அரசிடமே இருக்கும்.

சி.பி.ஐயின் புதிய இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்யும். அதிகாரிகளை விசா ரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. லோக் பால் பரிந்துரைக்கும் வழக்குக ளின் விவரத்தை மட் டுமே சிபிஐ, லோக்பாலிடம் வழங்கும்.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டு வரப் படுவார். ஆனால், முழுமையாக அல்ல. சர்வதேச உறவு, பொது ஒழுங்கு, அணு சக்தி, விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகள் பற்றி லோக்பால் விசாரிக்க முடியாது. மற்ற விவகாரங்களில் மட்டுமே பிரதமரை லோக்பால் கேள்வி கேட்க முடியும்.
அதே போல எடுத்த எடுப்பில் பிரதமருக்கு எதிரான விசாரணையை லோக்பால் நடத்த முடியாது. இது குறித்து லோக்பால் சட்ட அமர்வாயம் முதலில் கூடி விவாதித்து முடிவெடுக்கும். இந்த பெஞ்சின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு பேர் ஒப்புதல் தந்தால் மட்டுமே பிரதமரை விசாரிக்க முடியும். விசாரணை பகி ரங்கமாக நடைபெறாது. ஒருவேளை புகார் தள்ளுபடி செய்யப்பட்டால், அதனை பகிரங்கப்படுத்தக் கூடாது.
*லோக்பால் சட்ட அமர்வாயங்களில் 50 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். தாழ்த் தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* லோக்பால் அமைப்பின் பதவிகாலம் 5 ஆண்டு களாக இருக்கும்.

*லோக்பால் அமைப்பில் உள்ள உறுப்பினர்களை, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை சபா நாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு பரிந் துரைந்த சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட குழு, தேர்வு செய்யும்.

*லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்தான் கொண்டு வர முடியும். அதற்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு தர வேண்டும்.

*ஊழல் புகார் மீதான முதல்கட்ட விசாரணையை நடத்த இயக்குனர் (விசாரணை) நியமிக்கப்படுவார். வழக்கு களைத் தொடர தனியாக ஒரு இயக்குனரும் இருப்பார்.

இவ்வாறு லோக்பால் மசோதாவில் கூறப்பட் டுள்ளது.
இதெல்லாம் சரி.ஒரு விசாரணை அமர்வில் கூட இட ஒதுக்கீடு என்ற பெயரில் குட்டையைக் குளப்புவது தேவையா?
தகுதியானவரா என்று மட்டும் தேர்வு செய்தால் போதாதா?
இங்குமா சாதி,மதப்பிரச்னகளுக்கு அடித்தளம் போடுவது? 
____________________________________________________________________________

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது ஏன்

நடவடிக்கையே எடுக்கப்படவில்லை?

சென்னையை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில் கூறி இருப்பதாவது:- 

”நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.14 ஆயி ரம் கோடி மதிப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் செயல்பாடுகள் தொடங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அணுமின் நிலைய செயல்பாடுகள் முடங்கி உள்ளது. அங்கு செல்லும் ஊழியர்களை போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்துகிறார்கள். 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் உதயகுமார், அவரது ஆதரவாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்”
                                        என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
_____________________________________________________________________
இராக்கியத் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில்  63 பேர் கொல்லப்பட்டனர்,  200 பேர்கள் காயமடைந்தனர்.
நகரின் ஷியா மற்றும் சன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில், 14 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்று இராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுபேற்கவில்லை.

துணை அதிபர் தாரிக் அல் ஹஷ்மி

அந்நாட்டின் மிக மூத்த சன்னி அரபு அரசியல்வாதியும், நாட்டின் துணை அதிபருமான தாரிக் அல் ஹஷ்மி அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஷியாப் பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல் மலிக்கி, அவரை கைது செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.
இராக்கில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய ஒற்றுமை அரசாங்கம் தமக்குள் ஏற்பட்டுள்ள விரிசல்களை எதிர்கொண்டுவரும் நிலையிலும், இனமோதல்கள் அதிகரிக்கக் கூடும் என்று அச்சங்கள் எழுந்துள்ள நிலையிலும்,இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பார்க்கும் போது, சன்னி இன மக்களின் அமைப்பான அல் கொய்தா இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் நெரிசல் மிகுந்த காலை நேரத்தில், பலர் வேலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஷியாப் பிரிவைச் சேர்ந்த இராகியப் பிரதமர் நூரி அல் மலிக்கி

எனினும் இந்தத் தாக்குதல் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து நடத்தப்படவில்லை என்று, பாதுகாப்பு படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் காசிம் அத்தா தெரிவித்துள்ளார்.
சிறார் பாடசாலைகள், தினக்கூலிகள் மற்றும் ஊழல் தடுப்பு அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்தே தாக்குதல் இடம்பெற்றது எனவும் அவர் கூறுகிறார்.
 இராக்கில் உள்ளப்பெரிய சன்னி பழங்குடி இனத்தின் தலைவரான அலி ஹடேம் சுலைமான், நாட்டின் பிரதமர் நூரி அல் மலிக்கியை சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அவர் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
______________________________________________________________________________________________________
  சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், "ட்விட்டரில்' 300 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக, அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் "ட்விட்டர்' மற்றும் "பேஸ்புக்' சமூக வலைத் தளங்கள் குறிப்பிடத் தக்க பங்காற்றின. சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத் தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில்,"இந்த சமூக வலைத் தளங்கள் வரும் ஆண்டுகளில், ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம்' என்றார்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையின் சந்தை மதிப்பு, வரும் 2012ல், 13.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 30 ஆயிரத்து 376 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனதெரிகிறது. 2011ல், 14.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்.
பொருளாதார மந்த நிலை மற்றும் அரசியல் சூழ்நிலைகளால், ஐ.டி., துறையில் செலவிடும் தொகை வெகுவாக குறைந்துள்ளது.இருப்பினும், வரும் 2012ல், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவை இவற்றிற்கான பயன்பாடு, 19 சதவீதத்திற்கு உயரும்.இதையடுத்து, அடிப்படை மற்றும் கட்டமைப்பு துறை (16.8 சதவீதம்), மருத்துவமனை மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு (16.5 சதவீதம்) மற்றும் சில்லரை விற்பனை துறை (15.6 சதவீதம்) இடம் பெறுகின்றன.
____________________________________________________________________
கைகளால் ஆன ஓவியம்,
கைவிடப்பாட்ட டிஸ்னி விந்தைஉலகம்.
சீனாவில் பீகிங் அருகே கட்டப்பட்ட டிஸ்னி உலகம் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
________________________________________________________________________
அலங்கரிக்கப்படும் ரஷ்ய பாராளுமன்றம்?
ரஷ்யாவைச் சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான மரியா கொசெவின்கோவா அந்நாட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரியாவை அந்நாட்டுப் பிரதமர் புடினே தேர்வுசெய்துள்ளார். இவர் பிரபல 'பிளேபாய்' இதழ் ரஷ்யத் தொகுப்பில் நிர்வாணமாகத் தோன்றியவர்.

அந்நாட்டுப் பாராளுமன்றம் அங்கு இடம்பெற்ற மோசடி மிக்க தேர்தலுக்குப் பின்னர் அடுத்த வாரம் கூடவுள்ளது. இதில் மரியாவும் பங்குபற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யப் பிரதமர் புடினுக்கு நெருக்கமாக இருந்தமையே இவர் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணமெனக் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் புடினால் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அலினா கபாஹீவாவும் ரஷ்ய சஞ்சிகையொன்றுக்கு அரை நிர்வாணமாகக் காட்சி கொடுத்தவர்.
இவரும் புடினுடன் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ பாராளுமன்றத்திற்கு அனைவரும் தவராமல் கலந்து கொள்வார்கள்.
__________________________________________________________________--


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?