திங்கள், 19 டிசம்பர், 2011

பாலை ஆகுமா தமிழகம்?


முல்லைபெரியாறு அணையின் நீர்த்தேக்க மட்டத்தினை உடனடியாக 120 அடியாக குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில், கம்பம் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் வேகம் சற்றே தணிந்துள்ளன.
கேரள அரசியல் கட்சிகளும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஆர்ப்பாட்டங்களை ஒத்திவைக்க இசைந்துள்ளன.

ஆயினும் இரு தரப்பினருமே தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள்.இருமாநில மக்களிடையே பெரிதாக மோதல்கள் ஏதும் நிகழ்ந்துவிடாது என்பதே இன்றைய கவலைதரும் நிலை.

தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும் என்று அஞ்சி கலவரமடைந்து நாள்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், தமிழ்நாடே சகாரா பாலைவனமாகிவிடக் கூடும் என திமுக தலைவர் கருணாநிதி அச்சம் வெளியிட்டிருந்தார்.

அப்படி ஏதேனும் நடந்துவிடக் கூடும் என உண்மையிலேயே மக்களும் நம்பினர்.
ஆனால் இப்படியாக எழுந்த அச்சங்களுக்கு அப்பால் இன்றைய நிலையில் கம்பம் பகுதி செழிப்பாகவே இருக்கிறது. முல்லைபெரியாறு பாசனத்தால் முழுப்பயனைப் பெறுகிறது அப்பகுதி.
அணை பலவீனமாகிவிட்டது எனக் காரணங்கள் கூறி நீர்த்தேக்கத்தின் அளவினை குறைக்க வேண்டுமென்று கேரள அரசு வற்புறுத்தியன் பின்னணியில் 155 அடியிலிருந்து 136 அடியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் குறைத்து அணை பழுதுபார்க்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவுற்று பத்தாண்டுகள் கடந்தும், நீர்த்தேக்க அளவை உயர்த்த கேரள அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
முல்லைபெரியாறு அணைல் நீட்மட்டத்தின் அளவை 155 அடியிலிருந்து தற்போது 136ஆக குறைத்ததால் கம்பம் பகுதியில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாறாக மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அண்டையிலுள்ள சிவகங்கை பகுதிதான் பாதிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________________________________________
சில வாரங்களில் அணுமின் உற்பத்தி?
தமிழகத்தின் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது உலை அடுத்த சில வாரங்களில் செயற்படத் துவங்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள மன்மோகன் சிங், அந்நாட்டு் அதிபர் டிமிட்ரி மெத்வதேவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அணு உலை பாதுகாப்புத் தொடர்பாக, சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அது தாற்காலிகப் பிரச்சினை என்றும், அவர்களது கவலைகளைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியும் என்றும் மன்மோகன் தெரிவித்தார்.கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது உலையை அடுத்த சில வாரங்களிலும்,


 அதைத் தொடர்ந்து 6 மாதங்களில் இரண்டாவது உலையையும் செயற்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சிங் தெரிவித்தார்.

பாதுகாப்பானது

அந்த அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும், அங்குள்ள மக்கள் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும், இது இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து அளிக்கும் உறுதிமொழி என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.
மன்மோகன் – மெத்வதேவ் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கூடங்குளத்தில் முதல் இரு அணு உலைகளும் விரைவில் செயற்பாட்டுக்கு வரும் என்று இருதரப்பும் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளைக் கட்டும் பணியைப் பொருத்தவரை, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக அம்சங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், முன்னேற்றமான கட்டத்தை அடைந்துள்ளதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.
மேலும், 42 சுகோய் – எம்கேஐ 30 ஜெட் ரக விமானங்கள் தயாரிப்புக்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்பட ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
__________________________________________________________________________________________________________