சனி, 4 பிப்ரவரி, 2012

அனைத்தும் தனியார்.ஆளுவோர் எதற்கு?

பூமியின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீர். 

குடிநீர், உணவு சமைப்பதற்கான நீர், சுகாதாரத்துடன் வாழ்வதற் கான நீர், விவசாயத்திற்கான பாசன நீர் இவை எல்லா நாட்டிலும் ஓர் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்துவது அரசாங்கங்களின் அடிப்படைக் கடமையாகும். அரசுகள் தங்களது குடிமக்களுக்கான இப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகள் எதற்கும் பொறுப்பேற்கக் கூடாது என்பதே இன்றைய பொருளாதாரக் கொள்கை களின் முழு மூலப்பொருள். தண்ணீர்ப் பிரச்ச னையிலும் இந்தக் கோட்பாடு புகுந்து விளை யாடுகிறது.

மத்திய அரசு புதிதாக ஒரு தேசிய தண்ணீர்க் கொள்கையை உருவாக்கி வருகிறது. அதற்கான முன்வரைவை இப்போது நீர் நிர்வாக வல்லுநர் களின் கருத்தறிவதற்காக சுற்றுக்கு விட்டுள் ளது. மக்களுக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னைக் கழற்றிக் கொள்ளப் பரிந்துரைக்கிறது. குடிநீரை யும் பாசன நீரையும் வழங்குகிற பொறுப்பைத் தனியாரிடம் விட்டுவிடக் கூறுகிறது.


ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநி யோகப் பொறுப்பை நிறைவேற்ற அரசு மறுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தனியார் நிறுவனங்களின் “மினரல் வாட்டர்” கேன்களும் பாட்டில்களும்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அதிலேயும், இந்தியாவில் குளிர்பானம் விற்பதற்காக வந்த இரண்டு பெரிய அமெரிக்க நிறுவனங்கள், நமது நிலத்தடி நீரை உறிஞ்சி நம்மிடமே விற்றுக்கொண்டிருக்கின் றன. உள்நாட்டுக் குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக்கட்டியது போல, உள்ளூர்க் குடிநீர் விநி யோகிப்பாளர்களும் விழுங்கப்பட்டு வருகிறார் கள். அதே நேரத்தில் பொதுக் குடிநீர் விநியோகம், பாசன நீர் நிர்வாகம் இவற்றை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நிலையும் இருக்கிறது.


அந்தப் பொறுப்பை முற்றிலுமாகக் கைவிடு வது என்ற புதிய கொள்கை, தானாக வந்துவிட வில்லை. இதன் பின்னணியில் 2005ம் ஆண்டி லிருந்து உலக வங்கி அளித்து வரும் கெடுபிடி கள் இருக்கின்றன. விவசாயத்திற்கும் வீட்டுப் பயன்பாட்டிற்குமான தண்ணீருக்கும் அளிக்கப் பட்டுவரும் நிதி மானியத்தை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். மாறாக தண்ணீர் மறு சுழற்சி, கழிவு நீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்று முன்வரைவு கூறுவது, உலகவங்கி ஆலோசனைப்படியே.

தனியார் நிறுவனங்களிடம் முற்றிலுமாக நீர் நிலைகளையும் நிலத்தடி நீர் வளத்தையும் ஒப் படைத்தால் என்ன ஆகும்? சராசரி குடிமக் களும் விவசாயிகளும் நீருக்காகப் பலமடங்கு பணம் செலவிட நேரிடும். நீர் நிலைகள் இருக் கும் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக் கள் வெளியேற்றப்படுவார்கள். அதனால் ஏற் படும் கொந்தளிப்பின் மீது நீரூற்றுவதற்காக, வெளியேற்றப்படும் மக்கள் அங்கு தொடங்கப் படுகிற நிறுவனங்களில் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும் என்று அந்த முன்வரைவு கூறுகிறது. அதற்கான செலவை, நுகர்வோரின் தலையில் கட்டவும் பரிந்துரைக்கிறது.

அனைத்தையும் தனியார்களிடம் விட்டு,விட்டு ஆட்சி என்ற பெயரில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?
தேர்தல் போன்றவற்றையும் விடுத்து 2-ஜி போல் ஏலம் னமுறையை கொண்டு வந்து விடலாமே.
இத்தனை கட்சிகள் ,இவ்வளவு வாக்குறுதிகள் எதற்கு?
அனைத்து சேவைகளும் -திட்ட0களும் தனியார் என்றால் ஆட்சியாள வெறும் பொம்மைகள் ஏன் தேவை?
வஞ்சகமான இந்தப் புதிய நீர்க் கொள்கையை எதிர்த்து ஆவேசமிகு மக்கள் இயக்கங் கள் வெடித்துக் கிளம்ப வேண்டும். உயிராதார மாகிய தண்ணீரை முழுக்க முழுக்க விற் பனைச் சரக்காக மாற்றுகிற மோசடியை, அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியின் மூலமாகவே தடுத்து நிறுத்த முடியும்.
__________________________________________________________________________________________               0 பறவை வடிவில் இது புள்ளிப் படம் என்று நினைக்காதீர்கள்.பறவைக்கூட்டம் பறந்து செல்லும் போது வந்த ஒவியம்தான் இது.
___________________________________________________________________________
மாறும் இணைய முகவரிகள்.


ணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக நெட்வொர்க் வழியே அனுப்பப்படுகின்றன.
 இவ்வாறு அனுப்ப, ஒவ்வொரு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர் நெட் சொசைட்டியினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப் பட்டது.
 இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும். 
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்திலேயே, இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஐகதி6 அமைப்பில் 340 அன்டெசிலியன் (undecillion) முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில், 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது இது 2 டு த பவர் ஆப் 128. எண் இரண்டினை, அடுத்தடுத்து, இரண்டால் 128 முறை பெருக்கி வரும் எண் இது. அந்த எண்ணிக்கையில் முகவரிகளை அமைக்க இந்த புதிய அமைப்பு வழி தருகிறது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.
________________________________________________________________________