எப்போ இடைத்தேர்தல்?

தமிழகத்தில் நிலவும் கடும் மின் வெட்டால் பாதிக்கப்பட்டவர்களில் வலைப்பதிவர்களும் அடங்குவர்.ஆனால் அவர்கள் யாரிடம் போய் முறையிடுவார்கள்.?
இன்று ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் மின் வெட்டு ஆரம்பம்.
பின் வந்த பிறகு ஆரம்ப தகராறு. அதை சரிக்கட்டி எழுது மனப்பாவத்தை உண்டாக்கி மீண்டும் விசைப்பலகையில் கையை வைத்தவுடன் சொல்லி வைத்தாற்போல் மின்தடை.
வரும் கோபத்தை அடக்கி கொண்டு எழுந்து செல்வதைத்தவிர வேறு என்ன செய்ய இயலும்?

நம் பதிவர்களில் பலர் சென்ற ஆட்சியின் மின் தடையை கடுமையாக சாடி மாற்றாக அம்மாவிற்கு வாக்கை சேகரித்த கொடுமையை செய்தவர்கள்தான்.அவர் வந்தவுடன் மந்திரத்தில் மின் வெட்டை ஒரே வெட்டாக வெட்டித்தள்ளிவிடுவார் என்ற கனவை விதைத்தவர்கள்தான்.
\முந்தைய ஆட்சியிலாவது இரண்டு மணி நேரம்தான் மின் வெட்டு.அதுவும் எத்தனை மணிக்கு போய் வரும் என்ற நேரம் கூட தெரிந்தது.
ஆனால் இப்போது பத்துக்கு பத்தாகிவிட்டது இந்த வெட்டு.அதுவும் நேரம் காலம் தெரிவதில்லை.சரியாக அலுவலகத்திற்கு போக பறந்து,பறந்து சமைக்கும்போது மிக்சியில் தேங்காயை போட்டு விட்டு கையை விசையில் வைக்கும் போது மின் உயிரை இழந்துவிடும்.நமக்கும்தான்.
அதன் பின் மனதில் எழும் கெட்ட வார்த்தை பாராட்டுகள் வெளியே கேட்டால் நம்மை அரசாள்வார்களை அவதூறாக பேசியதாக உள்ளே ஆறு மாசம் ராசாவுக்கு போட்டியாக வைத்துவிடுவார்கள்.
நல்ல வேளைநமக்கு வடிவேலு மாதிரி எண்ணுவது வெளியே கேட்காத மனசு.
 கருணாநிதி மத்திய அரசு,வெளி மாநிலம் என்று மின்சாரத்தை விலை,கடன்.கைமாற்று என்று வாங்கி தமிழ்நாட்டை கொஞ்சம் ஒளிய்டன் வைத்தார்.

அம்மாவோ ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் மின் வெட்டை நீக்கி விடுவேன்.2012 மார்ச்சில் தமிழ் நாடு மின் உபரி மாநிலமாகிவிடும் என்றார்.ஆனால் மின் வெட்டை பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்வதாகவே தெரியவில்லை.
எங்கோ மின்வெட்டு நடந்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்.அல்லது இன்னமும் கருணாநிதிதான் முதலமைச்சர் என்ற நினைப்பில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.மத்திய அரசிடமும் கேட்டது போல் தெரியவில்லை.மற்றைய மாநிலங்களில் வாங்கும் முயற்சியு செய்யவில்லை.கட்சிக்கு ஆள் எடுக்கவும், அரசு அலுவலர்களை பத்து நாட்கள்களுக்கு ஒருமுறை மாற்றுவதிலும்தான் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
நம்மவூரு பத்திரிக்கைகளும் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கண்டு கொண்டு கிழித்ததுபோல் இப்போது மின் வெட்டைக்கண்டு கொள்ளவில்லை.
காரணமும் தெரியவில்லை.
அவர்களைப்பொறுத்தவரை கருணாநிதி போட்டால் வரி,விலை ஏற்றம்.அதையே ஜெயலலிதா செய்தால் நிதி திரட்டல் என்ற கண்ணோட்டம்தான் காரணமா?
மக்களும் கூட முன்பு வெளியிடங்களில் மின்வெட்டையும் ஆற்காடு வீராசாமியையும் ,கருணாநிதியையும் மின் வெட்டுக்காக திட்டியதுபோல் இப்போது திட்டுவதில்லையே/?
நாம்தானே வாக்களித்தோம் என்ற குற்ற உணர்வா?
அல்லது மின் தடையே பழகி போய் விட்டதா?

இதை தட்டச்சு செய்வதற்குள் இரு முறை போய் வந்து விட்டது மின்சாரம்.
ஆனால் 27 அமைச்சர்கள் இப்போது குடி போய் உள்ள சங்கரன் கோவில் தொகுதியை மின் வெட்டில்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றி விட்டார்களாமே?

உண்மையா?

அப்போ நம்ம தொகுதியிலும் எப்போ இடைத்தேர்தல் வரும் என்று கேட்டு சொல்லுங்களேன்.!
[சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகினாலும்தான் இடைத்தேர்தல் வருமுல்லா?]

_________________________________________________________________________________
நம்ம சட்டப்பேரவையில் நடிகர் விஜய்காந்த் கோபமாக நாக்கைக்கடித்து நடித்ததற்கே மன்னிக்கவும் பேசியதற்கே தண்டனை கொடுத்து விட்டார்கள்.
இது துருக்கி நாட்டு மக்களவையில் நடந்த சண்"டை'
_________________________________________________________________________________




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?