10337 கோடிகள்,
தன்னார்வ நிறுவனங்கள் பெற்ற அந்நிய "நிதி", ____________________________________________________________________________ |
இந்தியத் தன்னார்வ நிறுவனங்கள் (என்ஜிஓ) ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி நிதியை அயல்நாடுகளி லிருந்து பெறுகின்றன. அயல்நாட்டு நிதியை முறைகேடான வழியில் பெறும் தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அரசு ஆவணத் தகவல்படி 22 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை கள் பணிக்காக 2009-10ம் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடியை அயல்நாட்டு உதவியாக பெற்றுள்ளன. இதில் தமிழ கத்தில் உள்ள 3218 தொண்டு நிறுவனங் கள் ஒட்டுமொத்தமாக ரூ.1663.31 கோடியை பெற்றுள்ளன. இந்த நிதி உதவியை பெரும்பாலும், அமெ ரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத் தாலி, ஹாலந்து நாடுகளில் இருந்து பெற்றுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகை யில், கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப்போராட்டத்தை தூண்ட அயல்நாட்டு நிதி பயன்படுத்தப்படு கிறது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தொண்டு நிறுவனங்களின் நடவடிக் கையை ஆய்வு செய்து, ஜனவரி 11ம் தேதி அறிக்கை தயார் செய்தது. 12 தொண்டு நிறுவனங்கள் அயல்நாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றன என்பதை கண்டறிந்து அதனை அமைச்சகம் கண்காணிப்புப் பட்டியலில் வைத்தது. நாட்டில் உள்ள 21 ஆயிரத்து 508 தொண்டு நிறுவனங் கள் ரூ.10 ஆயிரத்து 337 கோடியை உத வியாக அயல்நாடுகளில் இருந்து பெற் றுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்கள் என்ற அளவில் மிக அதிக அளவில் நிதி பெற்ற இடமாக தில்லி உள்ளது. அந்த யூனியன் பிரதேச தொண்டு நிறுவனங்கள் ரூ.1815.91 கோடியை நிதி உதவியாகப் பெற்றுள்ளன. இதை யடுத்து மிக அதிக அயல்நாட்டு நிதி யை பெற்ற மாநில தொண்டு நிறுவ னங்கள் என்ற நிலையை தமிழக தொண்டு நிறுவனங்கள் பெற்றுள் ளன. இம்மாநிலத்தில் ரூ.1663.31 கோடி அயல்நாட்டு நிதி பெறப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திர மாநில தொண்டு நிறுவனங்கள் ரூ.1324.87 கோடியை பெற்றுள்ளன. நாட்டில் மிக அதிக அயல்நாட்டு நிதியை பெற்ற மாவட்டமாக சென் னை உள்ளது. இங்கு ரூ.871.60 கோடி பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பெங்களூர் உள்ளது. அந்த மாவட் டம் ரூ.702.43 கோடி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை (ரூ.606.63 கோடி) உள்ளது. 2007-08ம் ஆண்டு முதல் 2009-10ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளை ஆய்வு செய்த புள்ளி விவரப்படி மிக அதிக அளவு நன் கொடை அமெரிக்காவில் இருந்து கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனம் மிக அதிகபட்சமாக 2009-10ம் ஆண் டில் ரூ.208.94 கோடி அயல்நாட்டு நிதியைப் பெற்றுள்ளது. ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டம் ஊரக மேம் பாட்டு டிரஸ்ட் ரூ.151.31 கோடியையும் ஸ்ரீ சேவா சுப்பிரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை (தமிழ்நாடு) ரூ.94.28 கோடியையும் அயல்நாட்டு நிதியாக 2009-10ல் பெற்றுள்ளன. நாட்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி பதிவுசட் டம், டிரஸ்ட் சட்டத்தில் பதிவு செய் யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு நிதியை தவறான வழிகளில் பயன்படுத்தும், 12 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு நிறுவனங்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தான், அதிகமாக நிதியுதவி பெற்றுள்ளன.இதே நிதியாண்டில், ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள, கிராம வளர்ச்சி அறக்கட்டளை 151 கோடியும், தமிழகத்தில் உள்ள ஸ்ரீசிவ சுப்ரமணிய நாடார் கல்வி அறக்கட்டளை, 94 கோடியே 28 லட்ச ரூபாயும் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள, "காஸ்பல்பார் ஆசியா' என்ற நிறுவனம் அதிகபட்சமாக, 232.71 கோடியும், ஸ்பெயின் நாட்டின் "பண்ட் ஆக்ஷன் வின்சென்ட் பெரரர்' என்ற நிறுவனம் 228.60 கோடியும், அமெரிக்காவின் "வேர்ல்டு விஷன் குளோபல் சென்டர்' 197.62 கோடியும் வழங்கியுள்ளன.நிதியுதவி அதிகரிப்பு :ஒவ்வொரு ஆண்டும், இந்த தொண்டு நிறுவனங்கள் பெறும்நிதியுதவி அதிகரித்து வருகிறது.சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், வெளிநாட்டு நிதி வினியோக ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், 2 சதவீத தொண்டு நிறுவனங்களே பதிவு செய்துள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சக செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னைக்கு ரூ.871 கோடி: சென்னையில் அமைந்த தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டில், 871 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருக்கு 702 கோடியும், மும்பைக்கு 606 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.மேலும், 2009-10ம் ஆண்டில், தமிழகத்தில் உள்ள "வேர்ல்டு விஷன் இண்டியா' என்ற அமைப்பு தான், அதிகபட்சமாக, 208 கோடியே 94 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தேசிய தலைவர் ஜெயக்குமார் கிறிஸ்டியன். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி புரியும் தொண்டுகளை மேற்கொள்ளும் அமைப்பு என்று இந்த அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தன்னார்வ நிறுவனங்கள்.ஆண்டுக்கு 10000 கோடிகளுக்கு அதிகமாக பணத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றாலும் இந்தியாவில் இதை தாங்கள் கூறும் தொண்டுகளுக்கு செலவிட்டதாக தெரியவில்லை.
சுனாமி வீடுகள் கட்ட பல கோடிகள் பெற்ற தொண்டு நிறுவனங்கள் 1350 வீடுகள் கட்டிக்கொடுத்ததாகக் கூறினாலும் உண்மையில் கட்டப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டாது.
அப்படி கட்டப்பட்ட வீடுகளும் ஒற்றை செங்கலில் ஆடிக்காற்றிலேயே இடிந்து பறந்து விடும் ந்நிலையில்தான் உள்ளது.இது சுனாமியை எப்படி தாக்கு பிடிக்கும்?
சுனாமியின் வரவால் மக்கள் பலத்த இழப்புகளை சந்தித்தாலும் வரவை பெற்று நலம் பெற்றவை தொண்டு நிறுவனங்கள் எனக் கூறிக்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் மட்டும்தான்.அதில் பெறப்பட்ட பணம்தான் இன்று கூடங்குளம் போராட்டத்திற்கு பயன் படுத்தப்படுகிறது என்கிறது மத்திய அரசு.
இவ்வளவு நாட்கள் இப்படி 10000 கோடிக்கணக்கில் வரும் அந்நிய பணவரவை மத்திய வருவாய்த்துறையும்,வருமானவரித்துறையும் கண்டுகொள்ளாமல்,கணக்கு-வழக்கு கேட்காமல் இருந்தது ஏன்?
மொத்தத்தில் இவ்வளவு பணமும் உண்மையான நோக்கில் தன்னார்வ[?]நிறுவனங்கள் செலவிட்டிருந்தால் இந்தியாவில் இருக்கும் வறுமை-அநாதைகள்-நோய்கள் என்றோ ஓடிபோயிருக்கும்.
இந்த தொண்டு நிறுவனங்கள் முழுக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கத்தோலிக்கர்கள் நிர்வாகத்தில் இருப்பது தெரிகிறது.இவர்கள் ஆயர்கள்,பாதிரிமார்களும்தான் போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். அது உண்மைதான் என்றால் கேரளாவுக்கு எதிரான, மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும்,ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான போராட்டங்களிலும் ,இத்தாலி கப்பல்காரர்கள் மீனவர்களை சுட்டுக்கொன்றதற்கு எதிராகவும் இந்தஆயர்கள் போராடாததுஏன்?அவர்கள் -அவைகள் போராட்டங்கள் இல்லையா? அல்லது அவர்கள் மக்களாகத்தெரியவில்லையா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
__________________________________________________________________
|