முறையற்ற சலுகை,
"ஆந்திர மாநிலம் பிரசாந்தி நிலையத்தில் சத்திய சாய்பாபாவின் ஆசீர்வாதத்தை நாடி அங்கு செல்லும் பக்தர்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்க வேண்டும்" என்று கோரி ஸ்ரீசத்யசாய் சேவா அமைப்பு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
அதில் பிரசாந்தி நிலையத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே உங்களது துறை ரயில்வே கட்டணத்தில் 50 சதவீத சலுகையை அளித்து விட்டது. இதன் மூலம் நான் மற்றொரு கோரிக்கை வைக்கிறேன். அதாவது, 2 வது வகுப்பு மற்றும் தூங்கும் வகுப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்களிலும் 50 சதவீத சலுகையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, பண்டிகை நாட்களில் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்றும் சாய்பாபா அமைப்பின் கம்பேகர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய ரயில்வே இணையமைச்சரையும் அவர் சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.
என்ன இது புது கோரிக்கை?புது சலுகை?
என்ன காரணத்தால் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டும் 50% ரெயில் கட்டண சலுகை.
அவ்ர்கள் அடித்து சேர்த்துவைத்துள்ள சொத்துக்கள் பல்லாயிரம் கோடிக்கு கணக்கு இல்லை.அதற்கு சரியான வாரிசுதார்கள் கிடையாது.அந்த பனத்தையும் பல வாகனங்களில் ஏற்றி கடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சாய்பாபா பக்தர்களுக்கு ரெயில் கட்டண சலுகை என்பது ஏற்க முடியாதது.அவர்களுக்கு ஏற்கனவே பிரசாந்தி நிலையம் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகையையும் நிறுத்த வேண்டும்.அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கையில் செல்பவர்கள்.அவ்வளவு தூரம் வருபவர்கள் ஏழை மக்களும் அல்ல.அவர்களுக்கு எதற்கு ரெயில்வே துறை சலுகை வழங்கியது?
சாய்பாபா இறந்தவுடன் அவரது ரகசிய ,தனிப்பட்ட அறைகளில் குவித்து வைக்கப்பட்ட வைரங்கள்,தங்கக் கட்டிகள்,மற்றும் பணக்கட்டு குவியல்கள் மதிப்பு ஆயிரக்கணக்கான கோடிகளை தாண்டும் என்று செய்திகள் வந்தன.அவைகள் கடத்தப்பட்டதாக சில வாகனங்களும் பிடிபட்டன.அவைகள் எல்லாம் என்ன ஆயிற்ரு.யார் வசம் உள்ளது? கணக்கு என்ன?
இவ்வளவு பத்மநாப சுவாமி கோவில் புதையலுக்கு சற்றும் குறையா சொத்துள்ள சாய்பாபா பக்தர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சலுகை வழங்க யார் அதிகாரம் கொடுத்தது.அந்தசலுகை பணத்தில் பயணிக்கும் அந்த மனிதர்கள் தங்களின் சொந்த பணத்தை ஆயிரக்கணக்கிலும்,லட்சக்கணக்கிலும் அங்கு உண்டியலில் போட்டு வர நாம் எதற்கு சலுகை வழங்க வேண்டும்.அந்த சலுகையை ரெயில் பயணச்சீட்டு வாங்க இயலா ஏழைகளுக்கு சலுகை விலையில் கட்டணங்களை வழங்கலாமே?
ஆனால் நமது மத்திய அரசு அரசை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு மேலும்,மேலும் சலுகைகளையும்-வரி செலுத்தும் மக்களுக்கு மேலும் சலுகைகளை பறிப்பும் செய்வதையே வழக்கமாக,கொள்கையாகக் கொண்டது.இந்த சலுகையையும் வழ்ங்கும் என்றே நினைக்கிறேன்.
___________________________________________________________________________________________________________
சூறாவளியால்சேதமான வீட்டின் முன் பொருட்களை சேகரிக்கும் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்.
____________________________________________________________________________________________________________