இதிலாவது

ஈழ மக்களுக்கு உதவுமா இந்தியா,
ஐ.நா.வில் அமெரிக்க தீர்மானத்தில் மவுன குருவாக -மண்குதிரையாக இந்தியா,


 இலங்கையில் கடந்த 2009- ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது சிங்கள ராணுவம் ரசாயன கொத்துக் குண்டுகளை வீசி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது. 

இந்தக் கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் தப்பவில்லை. மனித உரிமைகளை மீறும் வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். 


சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது. 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தாங்கள் ஒருபோதும் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று மறுத்தது. போரின் போது தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்த ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவை நாடியது. 

இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை அய்.நா. மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தது. இந்தத் தீர்மான நகல் அய்.நா. மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நாடுகளின் கருத்துக்களுடன் இந்த தீர்மானத்தின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் விவாதமும் பின்னர் வாக்கெடுப்பும் நடைபெறும். அமெரிக்கா அய்.நா. மனித உரிமைகள் குழுவில் திடீரென இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ததால் இலங்கை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

அதிபர் ராஜபக்சே போரின்போது தங்களுக்கு ஆயுத உதவிகள் செய்த சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாட்டு தலைவர்களை அவசரமாக தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அவரிடம் சீனா, ரஷ்யா நாட்டு தலைவர்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆனால் இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை தனது கருத்தை வெளியிடாததால் ஈழத் தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
     

அய்.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு பிரான்ஸ், நார்வே, கனடா உள்பட 22 நாடுகள் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளன. 


தாங்கள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவு திரட்டி வருகிறது. இதில் ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன. 

24 நாடுகளின் ஆதரவு இருந்தால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என நம்பப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை'' என்றார்.


மன்மோகன் சிங் அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை என்று உடனே முடிவெடுத்து நிறைவேற்றியிருக்கிறது.மக்களுக்கு விரோதமானது என்றால் உடனடி-தடாலடி முடிவு எடுக்கும்.
____________________________________________________________
இதில்தான் இந்தியா முன்னேறுகிறது.


லகப்பணக்காரர்களில் 4 % பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதில் இந்தியாவின் பெரும் பணக்காரராக இந்தியாவின் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். இத்தகவலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

உலகின் பெரும் 1226 பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் 69 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 61 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் இருக்கிறார். 

அந்த பட்டியல் வரிசையில்[இந்தியா யாவைப் பொறுத்தவரை முதல் இடம்]முகேஷ் அம்பானி 22.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 19வது இடத்திலும், லக்ஷ்மி மிட்டல் 20.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 21வது இடத்திலும், விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி 15.9பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 41வது இடத்திலும், ஜிந்தல் குரூப் சாவித்ரி 10.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 80வது இடத்திலும், 8.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் மிட்டல் 113வது இடத்திலும், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 118வது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் தவிர இந்தியாவின் டி.எல்.எப்., கே.பி.சிங், ஹெச்.சி.எல் ஷிவ் நாடார், கோத்ரேஜ் - ஆதி கேத்ரேஜ், பஜாஜ் குரூப் தலைவர் ராகுல் பஜாஜ், இன்போசிஸ் நாராயண மூர்த்தி உள்ளிட்டவர்களும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 425 பேர் அமெரிக்கர்கள். இதில் 11 பேர் டாப்-20 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யர்கள் 98 பேரும், சீனர்கள் 55 பேரும், இந்தியர்கள் 48பேரும், ப்ரிட்டிஷ் நாட்டவர் 37பேரும், பிரேசிலியர்கள் 36பேரும், கனடா நாட்டினர் 25 பேரும் போர்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுள்ளனர.
____________________________________________________________________________________________________________
இது சூரியப்புயல் பூமியை தாக்கும் புகைப்படம்.[நாசா]
சூரியப்புயலின்  ஏற்படும் மின்காந்த அலைகளின் சீற்றம் இது போல் உலகைத்தாக்கும் போது தொலைத்தொடர்பு மற்றும் மின் சாதனப்பொருட்கள் வேலை செய்யும் முறையில் மாற்றமோ அல்லது பழுதோ ஏற்படும்.தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு பயமில்லை என நாசா அறிவித்துள்ளது.அங்கு மின்சாரம் போன்ற பொருட்கள் கிடையாததால் அவர்கள் பயப்பட வேண்டாம் என அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது[?]
___________________________________________________________________________________________________________
பறி போன தங்க பூமி
-----------------------------

கொலம்பியாவிததங்கம் செழிக்கும் அரசாங்க நிலத்தை ஹெக்டேர் கணக்கில் தனியார் நிறுவனங்களுக்கு உரிமைகளை கொடுத்துள்ளது.ஆனால் பாரம்பரியமாக இங்கு வாழ்ந்து தங்கம் சேகரிக்கும் சுரங்க தொழிலாளர்கள்,  பல தலைமுறைகளாக இங்கு தொழில் செய்யும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று போராடுகிறார்கள்.
A woman sifts rocks to find traces of gold
அப்ஸ்ட்ரீம் ஆறு வடகிழக்கு கொலம்பியாவில் Nechi என்ற நகரத்தருகேஆறு இயற்கையான தனது மணற்படுகையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மணற்படுகையைத்தான் இன்றைய கொலம்பியாவின் மிக பெரிய தனியார் நிறுவனம் தன்ககு உரிமையானது என எச்சரிக்கை செய்துள்ளது.தங்க panners ஒரு முரட்டு சுரங்க அலங்காரத்தில் சேர்ந்த excavators இணைந்து வேலை, யாரை அனைத்து கொலம்பியா தொலை Guamaco பகுதியில் தங்க வைப்பு பின் இருக்கிறாய்
தங்க அளியுங்கள் ஒரு மனிதன் புள்ளிகள் மட்டும் பூர்டோ Guamo என்ற குக்கிராமம் ஒரு கைவிளக்குடன் உருக்கி
பல்லாண்டுகளாக இந்த ஆற்றின் படுகையான 4000 ஹெக்டர் நிலத்தில் ஆற்றோரமாக
 மணலை சேகரித்து அதை நீரில் அலசி தங்கற் துகள்களை கண்டுபிடித்து அரசு நிறுவனங்களுக்கு 
விற்பனை செய்து காலம் தள்ளிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை இந்த இடத்தை விட்டு 
வெளியேறச்சொல்வதுடன் ,அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் தர மறுப்பதால் போராட்டம் 
ஏற்பட்டுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அளவில் பல வெளிநாட்டு சிறிய -நடுத்தர அளவிலான சுரங்க சங்கங்கள் சுரங்க நிறுவனங்களுக்கு இந்தஉரிமை தாரை வார்த்து கொடுக்கும் அரசாங்கம் குற்றம். என அவர்கள் கூறுகிறார்கள்.
=================================================================

_______________________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?