அரசு தொலைக்காட்சி அவலம்,




2011 சட்டமன்ற தேர்தலின் போது அஇஅதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்று அறி வித்திருந்தது. இதற்கு சன் தொலைக்காட்சியால் அவதி பட்ட கேபிள் ஆப்ரேட்டர்கள் மத்தியில் பலத்தவரவேற்பு கிடைத்தது. ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே ஜெய லலிதா அரசு கேபிள் தொலைக்காட்சி அரசுடைமையாக்கப்பட்டுவிட்ட தாக ஆணை வெளியிட்டது.
 அதில் பல்வேறு வகையான சேனல்கள் இடம் பெறும் என்ற அறிவிப்போடு மாதம் 70 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்தது. அத்துடன் இல்லாமல் இதனை மீறி கூடுதல் கட்ட ணம் வசூலிப்பவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது.அரசு அறிவித்த நாளில் இருந்தே 70 ரூபாய் கட்டணம் என்பது இதுவரை எங்குமே நடைமுறையில் இல்லை.
ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்தி வந்தவர்கள், அவர்கள் வசூலித்த தொகையான ரூ. 100 லிருந்து 200 ரூபாய் வரை பல்வேறு இடங்களில் இன்றும் வசூலித்து வருகின்றனர். இதனை கட் டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.சில தனியார் தொலைக்காட்சிகளின் தொடர்களில் மயங்கிப்போன மக்கள், குறிப்பாக பெண்கள் அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அரசு டிவி யில் இடம்பெற வில்லை என்பதால் மிகுந்த சலிப்படைந்தனர்.
 இதனால் கேபிள் டிவி இயக்குநர்கள், அரசு டிவியில் நீங்கள் விரும்பும் சேனல் வராது; நாங்கள் நேரடி யாக பெற்று வழங்குகிறோம். எனவே நாங்கள் கேட்கும் தொகையை நீங்கள் தரவேண்டும் என வற்புறுத்தி பெற்றுச் செல்கின்றனர்.
இதனால் ஜெயலலிதாஅரசு அறிவித்த கேபிள் டிவிஎவ்வித மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.சில குறிப்பிட்ட கேபிள் டி.வி. இயக்கு நர்கள், அரசு தொலைக்காட்சியில் தங் களை இணைத்துக்கொள்ளாமல் தனியா கவே இயங்கி வருகின்றனர். அரசுத் தொலைக்காட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட ஆப்ரேட்டர் களோ அரசுக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அரசு, கேபிள் டி.வி.யை தனது உடமையாக்கிய பிறகு ஒளிபரப்பில் தரம் என்பது குறைந் திருக்கிறது. செயற்கையாகவும் ஒளிபரப் பில் குளறுபடிகள் செய்யப்படுகிறது. போதாக்குறைக்கு தற்போதுள்ள மின் வெட்டின் காரணமாகவும் பல மணிநேரம் தொலைக்காட்சிகள் இயங்குவதில்லை. ஆனால் மாதம் தொடங்கியதும் முதலில் வீட்டு வாசலில் கதவைத் தட்டுவது கேபிள் டி.வி.க்கு பணம் வசூலிப்பவர் களாகத்தான் உள்ளார்கள். அதிக கட்டணம்ஒளிபரப்பின் பயனை முழுமையாக நுகராத மக்கள் வேறு வழியின்றி முணு முணுத்துக்கொண்டே பணத்தைக் கட்டி வருகின்றனர். பொதுவாக ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் கேளிக் கைக்காக 5 ரூபாய் வீதம் மாதம் 150 ரூபாய் வழங்குவது என்பது மக்களுக்கு பெரும் சுமை அல்ல.


 ஆனால் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்பட்டதால் ஏக போகமாக லாபத்தை அனுபவித்து வந்த நிலைக்கு மாறாக ஒரு பகுதி வருவாய் அரசின் கருவூலத்திற்கு திருப்பிவிடப் பட்டுள்ளது என்பது நல்ல அம்சமாகும். எனவே அரசு கேபிள் டி.வி. இயக்கு நர்களை அழைத்துப்பேசி அரசின் கட் டுப்பாட்டில் வராத தனியார் தொலைக் காட்சிகளையும் அதற்குள் இணைத்து இரண்டு பக்கமும் பாதிப்பில்லாத வகையில் ஒரு கட்டணத்தை வரை யறுத்து அறிவித்து, அதனை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து, அதனை மட்டுமே மக்களிடம் வசூல் செய்கின்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். சில உபயோகிப்பாளர்கள் எங்க ளுக்கு அரசு வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டும் போதும். 70 ரூபாய் தருகிறோம் என்றால் கேபிள் ஆப்ரேட்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வலுக்கட்டாயமாக அரசின் அறிவிப்புக்கு மாறாக கூடுதல் பணத் தை பறித்துச் செல்கின்றனர். எனவே அரசு ஆணையை மதிக்காத கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,
அரசு அறிவித்துள்ள கேபிள் டிவி நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கீனமான நடவடிக்கைகள் முன்பிருந்த சுமங்கலி  கேபிள் நிர்வாகமே பரவாயில்லை என்றாக்கிவிட்டது.

ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தனியார் தொலைக்காட்சிகளை எடுத்து நடத்தி வந்தனர். உள்ளூர் தொலைக் காட்சிகளையும் நடத்தி வந்தனர்.
 தற்போ தைய அரசின் அறிவிப்பின் மூலமாக எம்எஸ்ஓ என்று சொல்லப்படுகின்ற தலைமைக் கட்டுப்பாட்டு அறைகளைஎல்லா மாவட்டங்களிலும்அதிமுகவினர்தான் கைப்பற்றி நடத்துகின்றனர்.
 அரசு கேபிள் டிவியை நிர்வகிப்பவர் களும் அதிமுக நிர்வாகிகளாகவே உள்ள னர். இந்த லட்சணத்தில் இவர்களைக் கண்காணிப்பதற்கென்றும் அரசின் சார்பில் தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு என்ன வேலை என்று அவர்களுக்கே தெரிய வில்லை.
அவர்களை உள்ளூரெமெஸ் ஓக்கள் அறையில் நுழையக்கூட விடுவதில்லையாம்.அதன் உள்ளே எப்படி இருக்கும் என்று கூட தெரியாது என ஒரு மாவட்ட அரசு கேபிள் தனி வட்டாட்சியர் கூறிவருகிறார்.
அதேபோல உள்ளூர் தொலைக் காட்சிகளை ஏலம் விட்டதில் பல லட்சம் கட்டுவதாக ஏலம் எடுத்தவர்களுக்கு அரசு இன்னமும் உள்ளூர் தொலைக்காட்சி நடத்த பல இடங்களில் உரிமம் முறைப்ப்படி வழங்கவில்லையாம்.அதிமுகவினர்அல்லாதவர்கள் உரிமம் இருந்தாளும்  அவர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட மறுக்கப்படுகிறது.இதனால் ஏலம் எடுத்தவர்கள் மாத ஒப்பந்த தொகையை செலுத்த மறுத்துவருகின்றனராம்.அதில் தனி வட்டாட்சியரும்,மாவட்ட நிருவாகமும் தலையைப்பிய்த்துக்கொண்டு அலைகின்றனர்.

அ.திமுக வினர் மட்டும் உள்ளூர் தொலைக்காட்சிகளை ஏலமும்-உரிமமும் இல்லாமல் அரசுக்கு பணமும் செலுத்தாமல் நடத்தி லாபம் சம்பாதித்துவருகின்றனர்..இதனால் தமிழ நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுவருகிறது.
மக்கள் விரும்பும் சானல்களை க்காட்டாததுடன் தற்போது காட்டிவரும் சானல்களையும் மாற்றி-மாற்றி காட்டுவதால் மக்கள் சலிப்பின் எல்லைக்கே சென்று முந்தைய முறையில் சன் குழுமம் கைக்கே கேபிள் டி.வி.போகாதா என்று ஏங்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

சன்னின் சுமங்கலியின் கொட்டத்தை அடக்க ஜெயலலிதா கொண்டுவந்த அரசு தொலைக்காட்சி இப்போது ஜெயா டி.வி.கையில் போயும் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு  ஏமாற்றத்தையே தருகிறது.சன் தற்போது எச்.டி தரத்தில் மக்களின் மனம் விரும்பும் சானல்களை மாதம் 99 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.பலரை சன் டைரக்ட் பக்கம் கொண்டு போய் கொண்டிருக்கிறது.
_________________________________________________________________________________
காவிப்படை "ஆர்.எஸ்.எஸ்" அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில்
வெளியான செய்தி.
 

ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை இந்தியா ஆதரிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் பூகோள ரீதியான இருப்பிட நிலையை கணக்கில் கொண்டு உறுதியான நிலைப்பாட்டை இந்த விஷயத்தில் எடுக்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில் அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களை அமைதியானவர்கள் என்றோ ஆயுதமற்றவர்கள் என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என முழுமையான படைக் கலம் அவர்களிடம் இருந்தது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் இலங்கை அரசு ஏதுமறியா தமிழர்களை கொன்று குவித்தது சரிதான் என்கிறதா "சோ" வின் ஆர்.எஸ்.எஸ்.?
கோத்ரா சம்பவங்கள்வைத்து முஸ்லீம்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்துக்கு உலகில் கொன்று அப்பாவிகளைக் கொன்று குவிப்பவர்கள மகான்களாகத்தெரிகிறார்கள்.அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது இந்த தேங்காய் குடிமி வக்கீல் ஆர்,எஸ்.எஸ்.  

இப்போதைய தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்.கூறுவது போல் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்படும் தீர்மானமே அல்ல.
விடுதலைப்புலிகளை ஒழிப்ப்பதாகக்கூறிக்கொண்டு ஒன்றும் அறியா மழலைகள் முதல் வயோதிகர்கள் வரையிலானநிராயுதபானியான ஆயுதம் இல்லாத பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை ராஜ பக்‌ஷே படையினர் சுட்டு கொன்று குவித்ததை எதிர்த்து கொலைக்குற்றத்துக்கான எதிர்ப்பு தீரமானம்தான் இது.
இந்த அடிப்படை கூட தெரியாமல் அரசியல் முடிவுகளை எடுக்கும் காவிக்கும்பல் திராவிடன இனம் என்ற ஒரே காரணத்தல்தால் இப்படி எழுதியுள்ளது.


காவிப்படை களின் உள்மனசு தமிழினத்துக்கு எதிராகவே உள்ளது.
இலங்கையில் உள்ளஅமைதி போதிக்கும்புத்தர் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கும்  சிங்கள போர் வெறியர்களான புத்த பிக்குகளுக்கு இந்திய காவிப்படை ஆர்.எஸ்.எஸ்.எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
இந்தக் காவிப்படையில் உள்ள தமிழர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
தமிழினத்துக்கு காங்கிரசுக்காரன் மட்டுமல்ல.பா.ஜ.க.வை முகமூடியாகக் கொண்ட ராஷ்ட்ரீய சுயம் சேவக் [rss]கும் எதிரிகளாக உள்ளன.
____________________________________________________________________________________________
சிலந்தி வலை நட்சத்திரக்கூட்டம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?