ஞாயிறு, 4 மார்ச், 2012

வரவு தொழிலதிபர்களுக்கு,

இழப்பு  முழுக்க மக்கள் தலையில்
2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு முடிவு செய்திருந்தது. முதலாளித் துவக் கொள்கைகள் அதன் குருபீடமான அமெ ரிக்காவில் உருவாக்கிய நெருக்கடியால் பங்குச் சந்தைகளின் தலைக்கு மேல் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கில் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் 1,145 கோடி ரூபாயை மட்டுமே திரட்டியிருந்தது. 


பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் பங்கு களை விற்றதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட் டிருந்தது. வரும் மத்திய நிதிநிலை அறிக்கை யின்போது பெரும் முதலாளிகளுக்கு சலுகை கள் வழங்குவதற்கு நிதியிருப்பை உத்தரவாதம் செய்து கொள்ளவும் அவசரகதியில் எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் லாபம் தரும் ஓ.என். ஜி.சியின்(எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுக்கழகம்) பங்குகளை சூறையாட முடிவு செய்தனர். 42.80 கோடி பங்குகளை ஒரு பங் குக்கு ரூ.290 என்ற விலைக்கு விற்பதாகவும் அறி வித்தனர். இதன்மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரும் என்பது அவர்கள் திட்டம்

ஆனால் பங்குகள் விற்பனைக்கு வந்த மார்ச் 1 அன்று மந்த நிலை நிலவியதால் 29.22 கோடி பங்குகளுக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. குறுக்கு வழியில் இறங்கிய மத்திய அரசு, மிகவும் பாதுகாப்பான நிதி நிறுவனங்கள் என்று மக்க ளால் அழைக்கப்படும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டையும் இறக்கிவிட் டது. எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் வாங்கியாக வேண்டும் என்ற உத்தரவுகள் பறந் தன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 


திரைமறைவில் வேலைகள் நடந்தன. 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்தான் திரளும் என்ற நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தை யும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகி யவை வாங்கியுள்ளன. எல்.ஐ.சி. மட்டும் 12 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற வில்லை என்றாலும் ஓ.என்.ஜி.சி. பங்குகளை சூதாட்டத்தில் இறக்கியதோடு, மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள இரண்டு பெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தையும் அதில் போட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நடைமுறையில் இருக் கும் சலுகைசார் முதலாளித்துவக் கொள்கை யைத்தான் மறைமுகமாக இங்கு அரங்கேற்றுகி றார்கள். சட்ட ரீதியான சலுகைகள், அரசு நிதி யுதவி மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் போன்ற வற்றையே சலுகைசார் முதலாளித்துவக் கொள் கையின் அம்சங்களாகச் சொல்கிறார்கள். பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு பங்குச்சந்தை கேந்திரமானதாக இருந்து வருகிறது. அதில் நிலவும் மந்தத்தைப் போக்க கொழிக்கும் பொதுத் துறை நிறுவனங்களைப் பணயம் வைக்கிறார் கள். வந்தால் பெரும் முதலாளிகளுக்கு, போனால் மக்கள் தலையில் என்பதுதான் ஆட்சியாளர் களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தத் தாரக மந்திரங்களுக்கு எதிராக வலுவான முழக்கங் கள் எழுந்து வருகின்றன. நாட்டின் வரலாற்றி லேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் என்று சொல்லுமளவுக்கு பிப்ரவரி 28 அன்று அனைத் துப்பகுதியினரும் இணைந்து போராடியிருக்கி றார்கள். ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை போன்ற ஏமாற்று வேலை அரசு சொத்துக்களையும் பணம்.---------------------------------------------------------------------------------------------------
அடிக்கடி எடுத்து காதில் வைக்க வேண்டாம் .இது நல்ல யோசனைதான்.

------------------------------------------------------------------------------------------------------------
கர்த்தர் காப்பாற்றட்டும்?

2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போது பிரிட்டனில் ஏனைய மதங்களைச் சேர்ந்தோரின்  எண்ணிக்கை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக உள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.


கிறிஸ்தவ மதம்ஒவ்வொரு வருடமு; அதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐந்து லட்சம் பேரை இழந்துவருகிறது. நாத்திகர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் எண்ணிக்கமஆண்டுக்கு750,000 ஆக அதிகரித்து வருவதாக தெரிகிறது.
பிரித்தானிய நாடாளுமன்றஉறுப்பினர்கள் நூலகம் மேற்கொண்ட ஆய்வொன்றின்படி கிறிஸ்தவ சமயத்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அதேவேளை இஸ்லாமியர்கள், இந்துக்கள, பௌத்தர்கள் முதலான ஏனயை சமயத்தவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களில் முஸ்லிம்களின் தொகை 37 சதவீதத்தாலும் இந்துக்களின் தொகை 43 சதவீததத்தாலும் பௌத்தர்களின் தொகை 74 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளணஆனால் சீக்கியர்கள், யூதர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது.
அரசாங்க கொள்கையானது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றுக்கொள்ளதக்க முடியாதவகையில் பாரபட்சத்தை ஊக்குவிப்பதாக  கடந்தவாரம், 'நாடாளுமன்றத்திலுள்ள கிறிஸ்தவர்கள்' எனும் பிரித்தானிய எம்.பிகள் குழுவொன்று கூறியிருந்தது.
2010 ஆம் ஆண்டில் பிரிட்டனில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 41.1 மில்லியனாக இருந்ததாக அதாவது, கடந்த 6 வருடகாலத்தில் 7.6 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சமயத்தில் விசுவாசமற்றறவர்களின் எண்ணிக்கை 13.4 மில்லியனாக இருந்தது. இவர்களின் தொகை 6 வருடகாலத்தில் 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

____________________________________________________________________________________________________________