வெற்றிகள் ,,,,,,,
இன்று ஐ.நாவில் என்ன நடக்கும்?
ஜெனீவா[ஐ.நா] மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு (இந்திய-இலங்கை நேரப்படி 12.30க்கு) இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுமென தெரிகிறது.
47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஆரம்பமானது. நாளை 23 ஆம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
47 நாடுகளில் லிபியா தவிர்ந்த ஏனைய 46 நாடுகளுக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்குகொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி குறித்த 46 நாடுகளில் 23 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தன.
ஆனாலும் இலங்கை ராஜபக்ஷேக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை தனது நட்புநாடுகளின் உதவியுடன் சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது.
அது அதிகமாக இந்தியா இத்தீர்மானத்தை எதிர்க்கும் அல்லது நடுநிலையுடன் ஒதுங்கிவிடும் என கொண்டிருந்த நம்பிக்கை தமிழக மக்களின் போராட்டம்-வற்புறுத்தல் காரணமாக பொய்த்து இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டுகள் அடங்கியதீர்மானத்தை கண்டித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிங்களவர்கள் சில காட்டிக்கொடுக்கும் துரோகி கருணா பிள்ளையான்,டக்ளஸ் கூட்டத்தினரும்,வலுக்கட்டாயமாக சிங்கள படையினரால் திரட்டப்பட்ட தமிழர்களும் ஆர்ப்பாட்டம்டத்தி வருகின்றனர்.
இது அந்தக்கூட்டத்தினரின் பதாகைகளில் ஒன்று.இது எப்படி இருக்கு?
________________________________________________________________________
இது பெருமை தரும் வெற்றியாகுமா?
==========================================
கொண்டாடி மகிழுப் படியானதா சங்கரன் கோவிலில் அதிமுக வெற்றி?
அங்கு திமுக,மதிமுக,தேமுதிக போன்ற கட்சிகள் வென்றிருந்தால் அதன் வெற்றி கொண்டாட்டங்கள் ஒரு அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கும்.
பணபலம், படைபலம்,அதிகார பலத்துடன் வெல்வது ஒரு வெற்றியே அல்ல.
ஏற்கனவே நான்கு தேர்தல்களில் வென்ற அதிமுக வுக்கு வாக்களிக்கும் மக்கள் நிறைந்த தொகுதி.இரண்டு மாதமாக தேர்தல் அறிவிக்கும் முன்பிருந்தே 32 அமைச்சர்கள் வலம் வந்து இருக்கின்ற இலவசங்களை எல்லாம் கொடுத்து சரிக்கட்டி வைத்துள்ள தொகுதி.
எதிர்கட்சிக்காரர்கள் அதிமுகவினர் பணம் கொடுக்கும்போது கையும்-களவுமாக பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை விட்டு விட்டு பிடித்துவந்தவர்கள் மீதே தாக்கிய தாக வழக்குகள் போடுமளவு விசுவாச தேர்தல் அலுவலர்கள் உள்ள தொகுதி.
அதிமுகவினர் சாலையை மறைத்து மேடை போட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தாலும் அதை அனுமதித்துவிட்டு ,மற்றவர்களின் சாலையோர மேடைகளை மக்களுக்கு இடைஞ்சல் என அகற்றும்-தொகுதியில் எங்குமே பணம் கொடுக்கப்படவில்லை என செவ்வியளிக்கும்தேர்தல் பார்வையாளர்கள் வலம் வந்த தொகுதி.
இதில் வெல்வது பெரிய காரியமா?
அதை விட இப்படி வென்று விட்டு நடிகர் விஜய்காந்தை நக்கலடிப்பது ரொம்பக் கொடுமை.
சென்ற முறை திமுக ஆட்சிகாலத்தில் 11 இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது.அதில் அனைத்திலும் அதுதான் வென்றிருக்கிறது.அப்போது இந்த அதிமுக அம்மையார் என்ன கூறினார்?
இவரின் கட்சி பென்னாகரத்தில் பாமகவுக்கும் பின்னால் வந்ததுடன் காப்புத்தொகையையும் இழந்ததே .அதெற்கெல்லாம் இப்போது விளக்கம் சொல்வாரா ?
ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு வெற்றி பெறாவிட்டால்தான் அசிங்கம்.
இத்தேர்தலில் அனைத்து விடயங்களிலும் விதிமுறைகளை மீறி வென்று விட்டு வாய் வீச்சு வீசுவது நியாயமாகாது...
------------------------------------------------------------------------------------------------------------