வழக்குரைஞர்களா?



.
பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் செய்தியாளர்கள் மீது வழக்குரைஞர்கள்  தாக்குதலுக்கு நடத்தினார்கள். ஜனார்த்தன ரெட்டி வந்ததை படம் எடுக்க சென்ற செய்தியர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.  வக்கீல்கள் தாக்குதலில் காவலர் ஒருவர் இறந்தார்.மற்றோருவர் கவலைக்கிடமாக உள்ளார். பத்திரிக்கையாளர்கள், காவலர்கள்,அருகே உள்ள கல்லூரி மாணவர்கள் உட்பட 50 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில்வன்முறையில் ஈடுபட்ட 3 வழக்குரைஞர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை தொடர்பாக 25 வழக்குரைஞர்கள் மீது பெங்களூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது வன்முறை, கொலை முயிற்சி உள்ளிட்ட 35 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல ஆரம்பம்.இப்படி கூறும் அளவு வழக்குரைஞர்களின் சட்டமீறல் நடவடிக்கைகள் உள்ளது.
சமீப காலமாகவே வழக்குரைஞர்களும்,சட்டகல்லூரி மாணவர்களும் நடந்து கொள்ளும் முறைகள் வன்முறைத்தனமாகவே உள்ளது.அவர்கள் மீது காவ்ல்துறையினர் நடவடிக்கை எடுக்கப் பயப்படுவதும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் சமாதானப் படுத்தி விடுவதுமே வழக்குரைஞர்கள் சட்டத்தை மீறுவதும் வன்முறையை கையில் எடுப்பதும் அதிகரிக்கக் காரணம்.
எதற்கெடுத்தாலும் நீதிமன்ற புறக்கணிப்பு,சாலை மறியல் என்று இறங்கிவிடுகிறார்கள்.அவர்களை மற்றவர்கள் சாலை மறியல் செய்தால் ஓட,ஓட விரட்டும் காவல்துறை கணுகொள்வதில்லை.மாறாக அமைதி படுத்தி கெஞ்சுகிறார்கள்.வழக்குரைஞர்கள் நீதி மருக்கப்படுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் வழி காட்டுபவர்களே தவிர சட்டத்தின் தலைவர்களோ-சட்டங்களை உறுவாக்கியவர்களோ அல்ல.

சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே அவர்கள் வரும் வரத்து சரி அல்ல.அவர்களைக் கண்டும்காவல்துறையினர் பயப்படுவதும் உள்ளது.
குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்து கொள்வது,சாப்பிட்ட கடையில் பணம் கொடுக்காமல் தகராறு செய்வது.கலவரம் செய்வதும் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பற்றி வரும் செய்திகள்.சென்னை சட்டக்கல்லூரியில் ஏற்பட்ட மாணவர்கள் மோதல் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்த செய்தி.
அதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட வழக்குரைஞர்கள்-காவலர் மோதல் படு பயங்கரம்.காவல் நிலையமே சூறையாடப்பட்டு கோப்புகள் தீவைக்கப்பட்டது.
அதிலும் வழக்குரைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.ஆனால் காவ்ல்துறையினர் இடைநீக்கம் செய்யப்படடனர்.இன்னும் உயர் அதிகாரிகளையும் பத்வி நீக்கம் செய்ய வழக்குரைஞர்கள் வாதாடிக்கொண்டிருக்கின்றனர்.
தூத்துக்குடியில் நில மோசடி,பயிர் நிவாரண மோசடியில் ஈடுபட்ட வழக்குரைஞர் செல்வம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போதும் அங்கு சென்றே வழக்குரைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அது அனைவருக்கும் தெரிந்த பின்னரும் பத்திரிகைகளில் செய்தி வந்த பின்னரும் எந்த வழக்குரைஞர் மீதும் நடவடிக்கை இல்லை.மேலும் அவர்கள் சாலை மறியல் செய்தனர்.அவர்களை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.வழக்குரைஞர்கள் சாலை மறியல் உயர் அதிகாரி வந்து கெஞ்சி கைவிடப்பட்டது.யாரும் கைது செய்யவும் படவில்லை.நமது சட்டகாவலர்கள் வழக்குறைஞர்கள் என்றால் கையைக்கட்டிக்கொண்டு இருப்பதால்தான் இன்று காவலர் கொலை அளவு சென்றுள்ளது.
தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்கவே வழக்குரைஞர்கள் என்றால் என்ன,என்ன சட்ட மீறல்கள் உண்டோ அனைத்தும் செய்யலாம் என்றாகி விட்டது.அது இந்திய சட்ட துறைக்கு ஆபத்து.அவர்கள பணம் வாங்கிக்கொண்டு சட்ட சேவை வழங்குபவர்கள்தான்.சட்டத்தின் தலைவர்கள் அல்ல.

காவல்துறையும் ,நீதிபதிகளும் அவர்கள் பொறுப்பை உணர்த்த வேண்டும் .அவர்களும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான் என்பதை காவல்துறையும் அரசும் வழக்குரைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
கட்சிக்காரர்களிடம் பணம் பெற்று சேவைதர வேண்டிய அவர்கள் தங்களின் சின்ன்ச்,சின்ன விடயங்களுக்கெல்லாம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதை தடுக்க வேண்டும்அதனால் பாதிக்கப்படும்கட்சிக்காரர்கள் பணம் பெற்றுக்கொண்டு சேவை வழங்காத அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வர வேண்டும்.
வழக்குரைஞர்களின் தொடர்ந்த பொதுவான சட்டமீறல்களுக்கு இப்போவாவது கடும் நடவடிக்கை எடுத்து ஒரு முடிவு கட்டுங்கள்.
-----------------------------------------------------------------------------
கிரகாம்பெல் பிறந்தநாள்.

ன்று உலகை சுருக்கியது தொலைபேசி என்ற அறிவியல் கருவிதான்.இன்று கையடக்கமாகப் போய்விட்ட இக்கருவியை முதன்முதலில் கண்டு பிடித்த,தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகாம்பெல். 

இன்று இவரது பிறந்ததினம்.
கிரகாம்பெல் 1847 மார்ச் 3ல், ஸ்காட்லாந்து எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர்.கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 14ம் வயதில் பட்டம் பெற்றார். பின் எல்ஜினில் உள்ள வெஸ்டன் ஹவுஸ் அகாடமி கல்லூரியில் ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தார். 1870ல் இவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. அப்போது தொடர்பு இயந்திரங்கள் பற்றி படிக்க தொடங்கினார். முதலில் மின்சாரத்தை பயன்படுத்தி அதிக தூரம் கேட்கும் வகையில் பியானோவை உருவாக்கியது இவர்தான்.


டெலிபோனை உருவாக்கியது எப்படி:கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம்தான் டெலிபோனை உருவாக்க பயன்பட்டது. இவர் 1874ல் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார். இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். இதற்காக தனி நிறுவனத்தை ஆரம்பித்தார்.
_____________________________________________________________________________
  • 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.
  • 1877ல் "பெல் டெலிபோன்' கம்பெனியை உருவாக்கினார்.
  • 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.
  • 1880ல் "அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி' என மாற்றப்பட்டது.
  • 1881 ஜன., 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
  • 1922ல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் இறந்தார்.
_____________________________________________________________________________
கிரகாம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்தார். டெலிபோன் தவிர, தந்தி கருவி, போட்டோபோன், போனோகிராப், செலினியம் செல் போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவைகள் ஆகும்.
=======================================================================
84வது ஆஸ்கர் விருதுகள் .

84th Oscar Award
   சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். விருதுகள் விபரம்
 ஹூகோ படத்திற்கு 5 விருதுஹூகோ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, கலை, விஷூவல் எபக்ட்ஸ், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்தது.
 தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கு5 விருதுஹூகோ படத்தை போன்று தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்ததுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர், இசையமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்காக மைக்கேல் ஹசானாவிசியஸ்க்கு கிடைத்தது.
 சிறந்த படத்திற்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்கு கிடைத்துள்ளது.
 சிறந்த நடிகருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் நடித்த ஜீன் துஜார்தினுக்கு கிடைத்தது.
 சிறந்த நடிகைக்கான விருது, "தி அயன் லேடி" என்ற படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்க்கு கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது ஈரானின், "ஏ ஷெப்ரேஷன்" என்ற படத்திற்கு கிடைத்தது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை, "பிகினர்ஸ்" படத்தில் நடித்த 82வயதான கிறிஸ்டோபர் பிளம்பர் பெற்றார். இவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
 சிறந்த துணை நடிகைக்கான விருது, "தி ஹெல்ப்" படத்தில் நடித்த ஆக்டிவா ஸ்பென்சருக்கு கிடைத்தது.
 சிறந்த விஷூவல் ‌எபெக்ட்ஸ் விருதுக்கான விருது ஹூகோ படத்திற்கு கிடைத்தது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது, "ராங்கோ" படத்திற்கு கிடைத்தது.
 சிறந்த ஆவணப்படத்திற்கான விருது, "அன்டிபிட்டடு" படத்திற்கு கிடைத்தது. சிறந்த படத்தொகுப்புக்கான விருது,  "தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ" என்ற படத்திற்காக கிரிக் பாக்ஸ்டர் மற்றும் அங்கூஸ் வால் ஆகி‌யோருக்கு கிடைத்ததுள்ளது.
 சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் இசையமைத்த லூடுவிக்கிற்கு கிடைத்தது. சிறந்த திரைக்கதைக்கான விருது, "மிட்நைட் இன் பாரிஸ்" என்ற படத்திற்காக உட்டி ஆலனுக்கும், "தி டிஸடண்டன்ஸ்" என்ற படத்திற்காக அலெக்ஸாண்டர் பயினி ஆகிய இருவருக்கும் கிடைத்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?