ஞாயிறு, 25 மார்ச், 2012

ஓரு அலசல்:


சூன்யத்திலிருந்து வந்ததல்ல மத்திய பட்ஜெட்

_______________________________________________________________________________________________________

பொருளாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா

சந்திப்பு: அ. குமரேசன்ஆத்ரேயா

பட்ஜெட் என்றால் டிவி விலை உயர்கிறது, கார் விலை விலை குறைகிறது என்ற தகவல்களோடு மட்டும் பொதுவாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் அரசின் வர்க்கக் குணம், மக்கள் மீது சுமைகளை ஏற்றும் சாமர்த்தியம் என ஆழமான பல அம்சங்கள் அதனுள் இருக்கின்றன.
உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறை வேற்றப்படும் வரவு - செலவு அறிக்கையின் அடிப்படையில் தான் ஆண்டு முழுவதும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப் படுகின்றனவா? மாநில அரசுகளை மத்திய பட்ஜெட் எந்த அளவுக்கு பாதிக்கும்? பட்ஜெட் பற்றிய மேலோட்டமான தகவல்களுக்கு அப்பால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மைகள் என்ன? நிதி மூலதனத்தை ஊக்குவிக்கிற கொள்கைதான் செயல்படுத்தப்படுகிறது என்றாலும், அந்த நிதி மூலதனம் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், சுற்றி வளைத்து ஏதோ ஒரு வகையில் பொருள் உற்பத்தி சார்ந்த முதலீடாகத்தானே போய்ச்சேர்கிறது? இந்த கேள்வி களுடன் அணுகியபோது பொருளாதார ஆய்வாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான வெங்கடேஷ் ஆத்ரேயா அளித்த விளக்கங்கள் ஆழ்ந்த சிந்தனைகளைக் கிளறுகின்றன.

சூன்யத்திலிருந்து வருவதல்ல
மத்திய அரசின் பட்ஜெட் ஒன்றும் சூன்யத்தில் இருந்து வருவதல்ல. ஏற் கெனவே நிலவுகிற பொருளாதார நிலை மைகளுக்கு உட்பட்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் யார் வலுவானவர்களாக இருக்கிறார் களோ, உற்பத்திக் கருவிகளை யார் தங் கள் பிடியில் வைத்திருக்கிறார்களோ, அவர் களுடைய நலன்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது. எல்லோருக் கும் வாக்குரிமை இருக்கிறது. இருந்தா லும் செல்வாக்கு யாருக்கு இருக்கிற தென்றால் பெருமுதலாளிகள், நிலப் பிரபுக்கள், உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் அதிபர்கள் ஆகியோருக்குத் தான்.

உற்பத்திக்கு உதவாதஉலக நிதி
முன்பும் வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட அளவுக்கு வந்தன என்றாலும் கூட, அவை வெறும் பணமாக மட்டும் வர அனுமதிக்கவில்லை. இங்குள்ள தொழில் களுக்கான முதலீடுகளாகவும், உற் பத்தியைப் பெருக்குவதற்கான நிதியாக வுமே வர அனுமதிக்கப்பட்டன. ஆனால், உலக மயக்கொள்கைகள் நடை முறைக்கு வரத்தொடங்கிய பிறகு, தொழில் உற்பத்திக்கு சம்பந்தமில்லாத பங்குச் சந்தைகளுக்கான முதலீடாக மட்டுமே வெளிநாட்டுப் பணம் வர அனுமதிக்கப்படுகிறது.அவ்வாறு பங்குச் சந்தைக்காக வரு கிற நிதி மறைமுகமாக சம்பந்தப்பட்ட தொழில்களின் முதலீடுகளாகத்தானே மாறுகின்றன என்று ஒரு கருத்து இருக் கிறது.
ஆனால், குறிப்பிட்ட நிறுவனத் தின் உற்பத்தி சிறப்பாக இருந்து, அதனு டைய விற்பனை - லாபம் மேலோங்கி யிருந்தால் தானே யாரும் விலை கொடுத்து வாங்குவார்கள் என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் செயற்கையான முறை யில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் திடீரென ஒரு வெளிநாட்டு நிறுவனத் தால் வாங்கப்படுகின்றன. அதைப்பார்த்து இங்கே இருக்கிற பலரும் அதே பங்கு களை வாங்குகிறார்கள். அந்த நிறுவனம் உற்பத்தியில் ஈடுபட்டு அதன் பொருள் விற்பனையாகி லாபம் வரும் வரையில் இவர்கள் காத்திருப்பதில்லை. விலை குறைவாக இருக்கும்போது வாங்கிப் போட்டு பிறகு விலை உயரும்போது கூடுதல் விலை வைத்து விற்கப்படு கிறது. செயற்கையாக பங்குகளின் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது அல்லது குறைக் கப்படுகிறது. மந்தைப் பொருளாதாரம் என்பார்கள் - அதாவது, குறிப்பிட்ட நிறு வனத்தின் உற்பத்தி, சந்தை பலம் ஆகிய வற்றைக் கணக்கிடாமல் அதன் பங்கு களை திடீரென வேறொரு நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்குவது, அதைப்பார்த்து மற்றவர்கள் அதே நிறுவனத்தின் பங்குகளை தாங்களும் வாங்கிப்போடுவது, அவர்கள் கூடுதல் விலை வைத்து விற்கிறபோது மற்றவர் களும் விற்றுத் தள்ளுவது என்பதுதான் நடக்கிறது.

இது எந்த வகையிலும் தொழில் வளர்ச்சிக்கோ, நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்கோ உதவாது. ஆனால், இதைப்பற்றிய எந்த யோசனையுமின் றியே மத்திய அரசு ஊக பேர பங்குச் சந் தையில் உள்நாட்டு - வெளிநாட்டு முத லீடுகளை மேலும் மேலும் ஊக்குவிக் கிறது. இது நாட்டுக்கு பெரிய ஆபத்து. ராஜீவ்காந்தியின் பெயரால் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதலீடுகளுக்கு 50 விழுக்காடு வரிச் சலுகை அளிக்கிற அந்தத் திட்டம், வங்கி களில் சேமிப்புகளை வளர்ப்பதற்கு மாறாக, ஊக பேரத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. முன்பு அமெரிக்காவில் குளிரடித் தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். இப் போதோ அமெரிக்காவில் குளிரடித்தால் இந்தியாவில் காய்ச்சலே வரும் என்ற அளவிற்கு ஏற்றுமதிப் பொருளாதாரம் அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா உள் ளிட்ட மற்ற நாடுகளின் சந்தையை சார்ந் திருக்கிற நிலைமையும் அதிகரித்திருக் கிறது. அதற்கேற்ப பட்ஜெட் கொள்கை கள் உருவாக்கப்படுகின்றன.
பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் படுகிற பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் இரண்டுமே திட்டவட்டமான தாக இல்லாமல் ஊகத்தின் அடிப்படை யிலான மதிப்பீடுகளாகவே இருக்கின் றன. அடுத்த ஆண்டு அவர் இதேபோல் மதிப்பீடுகளை வைக்கிறபோது, சென்ற ஆண்டு அவர் என்ன மதிப்பீடுகள் வைத் தார் என்பது மக்கள் நினைவுக்கு வரு வது இல்லை. முதலாளித்துவ கட்சி களும் அதை சொல்வதில்லை. ஊடகங் களும் அதை வெளிப்படுத்துவதில்லை.

ஜனநாயகத்தில் மக்களின் வரிப்பணத் தில்தான் அரசு இயங்குகிறது, மக்களின் வரிப்பணம்தான் அரசின் திட்டங் களுக்கு செலவிடப்படுகிறது, மக்களின் வரிப்பணம்தான் பெரும் நிறுவனங்க ளுக்கு சலுகையாகப் போகிறது. எனவே பட்ஜெட் குறித்து பொதுமக்களும் ஆழ மான அக்கறையோடு விவாதிக்கிற சூழல் உருவாக வேண்டும். பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை நிதியமைச்சர் போகிறபோக்கில் சொல்லி யிருக்கிறார். அவையெல்லாம் பட்ஜெட் டில் கிடையாது. உதாரணமாக விவசாயத் திற்கு ஐந்தே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன்கொடுக்க விரும்புகிறோம் என்பது போன்ற விருப்பங்களை அவர் அறிவித்திருக்கிறார். அவையெல்லாம் விருப்பங்கள்தான் - நடவடிக்கைகள் அல்ல! ஆகவே என்ன வேண்டுமானா லும் சொல்லிக்கொள்ளலாம். சென்ற ஆண்டுகூட விவசாய மேம்பாட்டிற்காக 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்போவ தாக அறிவித்தார். அந்த 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதா என்பதைப் பற்றியெல் லாம் அவர் எதுவும் சொல்லவில்லை.
ஓய்வூதிய சட்டத் திருத்தம், காப் பீட்டு சட்டத் திருத்தம் போன்ற கவலைக் குரிய சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். இவற்றுக்கான சட்ட முன்வரைவுகள் எதையும் அவர் தாக் கல் செய்யவில்லை என்றாலும், அவை கொண்டுவரப்பட உள்ளன என்று அறி வித்திருக்கிறார். உழைப்பாளி மக்களின் பணத்தை சூறையாடக்கூடிய இந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் வருகிறபோது, நாடாளுமன்ற உறுப் பினர்கள் மட்டுமல்லாமல், நாடாளுமன் றத்திற்கு வெளியே பொதுமக்களும் விழிப் போடு இருந்து தங்கள் எதிர்ப்பை அழுத்த மாக வெளிப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொழிலாளர் ஈட்டுறுதி நிதி (இபிஎஃப்) வட்டியை 8.25 விழுக்காடாகக் குறைத்துவிட்டார்கள். ஆக தொடர்ந்து மக்களைத் தாக்குவது என்பதுதான் அறிவிப்புகளுடைய சாராம்சம். அமைச்சர் தனது மதிப்பீடாக, நேர் முக வரிகளில் சலுகை அளிப்பதால் அரசுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறினார். அதே நேரத்தில் உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற மறைமுக வரிகள் மூலம் அர சுக்கு 47,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். இது ஒரு மோசமான ஏற்பாடு.

நேர்மையில்லா நேர்முக வரி
நேர்முக வரி என்பது ஏகபோக முத லாளிகள் உள்பட செல்வந்தர்களின் வரு மானத்திற்கு விதிக்கப்படும் வரியாகும். அதிலே 5,000 கோடி ரூபாய்க்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே கூட ஒரு சமத்துவமற்ற நிலை இருக் கிறது. அனைத்து விதமான வருமானங் களுக்கும் ஒரே விகிதத்தில் நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது.உதாரணமாக பரம்பரைச் சொத்து உள்ளிட்ட காரணங்களால் எந்த உழைப் பிலும் ஈடுபடாமல் உட்கார்ந்து கொண்டே கோடிகோடியாய் வருமானம் ஈட்டுகிற வருக்கும், கடுமையாக உழைத்து, தொழில் நடத்தி, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, நேர்முக வரி விதிக்கத் தக்க அளவிற்கு வருமானம் ஈட்டத் தொடங்கியவருக்கும் ஒரே விகிதத்தில் வரி என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? வருமானத்தின் தன்மைக் கேற்ப வரிவிகிதமும் மாறுபட்டதாக இருக்கவேண்டும்.
மக்களைத் தாக்கும் மறைமுக வரி
மறைமுக வரி என்பதும்கூட எளிய மக்களைத் தாக்குவதாகவே இருக்கிறது. ஒரு பொருளுக்கான விற்பனை வரி, அந்தப் பொருளின் விலையோடு அடங்கி விடுகிறது. அந்த விலையைக் கொடுத்து தான் பணக்காரர்களும் ஏழைகளும் அந்தப் பொருளை வாங்குகிறார்கள். வரி உயர்த்தப்படும்போது பணக்காரர்களை அது பாதிப்பதில்லை. ஏனென்றால், தங்களது வருமானத்தில் 10 முதல் 15 விழுக்காடு வரை மட்டுமே உணவுக்காக செலவிடுகிற அளவிற்கு பணக்காரர் களுக்கு வருமானம் இருக்கிறது. உணவுப் பொருள் விலை உயர்வது அவர்களை பாதிக்கப்போவதில்லை.ஆனால், தங்கள் வருமானத்தில் 40 முதல் 60 விழுக்காடு வரை உணவிற்கு மட்டுமே செலவிடவேண்டிய நிலை யில் குறைந்த வருமானம் உள்ள மக்கள் தான் நம் நாட்டில் பெரும்பகுதியினராக இருக்கிறார்கள். உணவுப் பொருள் விலை யேற்றம், அவர்கள் அதற்காக செலவிட வேண்டிய தொகையை மேலும் அதி கரித்து, அவர்களது வாழ்வை நெருக் கடிக்கு உள்ளாக்கும்.

சுகுமாரன்
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத் தோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டி ருக்கிறது. அதன் விளைவாக இந்தியா வின் பொருளாதாரம் பெருமளவுக்கு ஏற்றுமதி - இறக்குமதி வருவாயைச் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்று மதி விகிதத்தையும் இறக்குமதி விகிதத் தையும் கூட்டி மொத்த உற்பத்தி விகிதத் தால் வகுக்கும்போது வருகிற விடை தான் உலகப் பொருளாதாரத்துடனான இந்தியாவின் பங்காக எடுத்துக்கொள்ளப் படுகிறது. 1990க்கு முன் அது 14 விழுக் காடாக இருந்தது. இப்போது அது 50 விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது. அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதா ரம் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏற்று மதி - இறக்குமதி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியைக் குறிப்ப தாகத் தெரியும்.

ஆனால், எந்த நாட்டிற்கு இந்தியா அதிகமாக தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறதோ அதேபோல், எந்த நாட்டிலிருந்து இறக்கு மதி செய்கிறதோ அந்த நாடுகளில் பொருளாதாரச் சரிவுகள் கடுமையாக ஏற்படுமானால், அது இந்தியாவின் பொரு ளாதாரத்தையும்

சீர்குலைத்துவிடும். குறிப்பிட்ட பொருளை மிகுதியாக வாங்கு கிற ஒரு நாடு, தனது பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்தப் பொருளை வேண்டாம் என்று சொன்னால், அதே போல் குறிப்பிட்ட பொருளை, உதாரண மாக பெட்ரோலிய எண்ணெய்யை மிகுதி யாக இந்தியாவிற்கு அனுப்புகிற நாடு திடீரென விலையை உயர்த்தினால் இந் தியாவின் பொருளாதாரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும். உள்நாட்டுத் தேவைகளையும், உள்நாட்டு உற்பத்தி களையும் ஈடுகட்டும் வகையில் பொரு ளாதார வளர்ச்சி அமைவதுதான் ஆரோக் கியமானது, நம்பகமானது. மத்திய அர சின் பட்ஜெட் அந்த வழியில் செல்ல வில்லை என்பதுதான் பிரச்சனை.
நன்றி:தீக்கதிர்.
______________________________________________________________________
சுரன்சுகுமாரன்