செவ்வாய், 15 மே, 2012

110 -ம்,,,,,,,,,111-ம்

சட்டமன்றம் ஒரு 110கண்ணோட்டம்,


மின் கட்டண உயர்வில் வீட்டு உபயோகத்திற்கு கட் டணக் குறைப்பு (ஏப்.3), தியாகி தீரன் சின்ன மலையை தூக் கிலிட்ட சங்ககிரியில் நினைவுச்சின்னம் (ஏப்.4), அரசு ஊழியர்களுக்கு 7 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு (ஏப்.9), தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி விரிவாக்கம், கூடு தல் கட்டடம் கட்டுதல், தரம் உயர்த்துதலுக்கு ரூ.10 கோடி (ஏப்.19), புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் (ஏப்.20) தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 ஆயிரத்து 500 (ஏப்.26). அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் துவக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு (மே 2), உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் காவல், சிறை, தீயணைப்புத் துறையினருக்கு 36 ஆயிரம் குடி யிருப்புகள் (மே 3), கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்குச் சிலை, சர்வதேச தரத்திற்கு இணையாக கும்மிடிப்பூண்டி யில் ஓட்டுநர் ஆராய்ச்சி, பயிற்சி மையம் (மே 4). அரசு ஊழி யர்களுக்கு பவானி சாகர் குடியுரிமை பயிற்சி நிலையம் விரி வாக்கம், 4.5 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற காவிரி டெல்டா பகுதிக்கு புதிய திட்டம் (மே 7). 4 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள வட்டங்களைப் பிரிக்க உத் தரவு, 9 வட்டங்கள் புதிதாக உருவாக்கம், 6ஆம் வகுப்பில் இருந்து சாதி, வருமானம், இருப் பிடச் சான்றிதழ், காஞ்சி புரத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் (மே 8). போக்குவரத்து துறையில் 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப் பப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய பாலம், புறவழிச் சாலைகள், திருச்சி-ஸ்ரீரங்கத்தை இணைக்க பாலம், கரூர் பசுபதி பாளையத்தில் உயர் மட்ட பாலம், கட்ட மைப்பு வளாகம். சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 25 விழுக் காடு சிறப்பு ஊதியம் (மே 9). மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில ஆதார வள மையம், சென்னையில் ஆசிய தடகளப் போட்டி, சிறுதொழில் வளர்ச்சி, திண்டி வனத்தில் ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு கட்டப்படும். சென்னையில் பழமையான நீதிமன்றக் கட்டிடங் கள் புதுப்பிப்பு, திரவ எரிவாயு கொண்டுவரும் திட்டம் (மே 11).இவைகள் அனைத்தும் சாதாரண அறிவிப்புகள்.இதை அந்தந்த துறை அமைச்சரே அறிவிக்க்கலாம்.
சுரன்

ஆனால் தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேரவை விதி 110ன் கீழ் இவை அனைத்தும் முத லமைச்சரால் அறிவிக்கப்பட்டன.. பேரவை விதி 110 என்பதை என்ன என்று பார்ப்போம்.
". முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.ஆனால் அந்த அறிக்கை படிக்கப் பட்டதோடு சரிஅந்த அறிக்கையின்மீது அப்போது எவ்வித விவாதமும் ,எதிர்ப்போ-பாராட்டோஇருத்தல் கூடாது .அதாவது, குடிநீர், இயற்கை இடர்பாடு, சாதி,மத,இன கலவரங்கள், துப்பாக்கிச்சூடு, கொலை, கொள்ளை போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளை அவசரமாக அவைக்கு தெரிவிகவும் ,விவாதங்கள் இல்லாமல் இருக்கவும்110வது விதியின் கீழ் அறிக்கை அளிக்கலாம் என்று விதியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ ஒவ்வொரு துறை மீதான விவா தத்திற்கு பிறகும் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை அளித்து 110 விதியை வலுவற்றதாக்க்கி விட்டார்.
தனிநபர் கழிப்பறைக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000ஐ ரூ.2 ஆயிரத்து 500ஆக உயர்த்தி வழங்குவதாக ஏப்.26ம் தேதி பேரவை விதி 110ன் கீழ் அறிவித்தார் முதலமைச்சர் . 
சுரன்

வீட்டுவசதி , மாற்றுத்திறனாளிகள், மக்கள் நல் வாழ்வு, உயர்கல்வி, விளையாட்டு, வேளாண்மை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய், போக்குவரத்து, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகிய மானியக் கோரிக் கைகள் மீது ஏப்.5 முதல் மே 9 வரைக்கும் விவாதங்கள் முடிந்து அமைச்சர்கள் பதில் கூறிய பின்னர் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பேரவை விதி 110-ன் கீழ் ஜெயலலிதாவே எல்லா துறையின் மீதும் ஏதாவது புதிய அறி விப்புகள் அறிவித்து வருகிறார்.
அம்மா... அம்மா... அம்மாதான். மற்ற அமைச்சர்களெல்லாம் சும்மாதான்.  மற்றவர்கள் எல்லாம் ஜீரோதான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
ஒரு துறையின் மானியக் கோரிக்கை முடிகிறது என்றால் அன்றைய தினம் என்ன அறிவிப்பு வெளியாகிறது என்பதை சம்பந்தப்பட்ட துறையினரும் பயனாளிகளும் எதிர் பார்ப்பது வழக்கம். ஆனால் சட்டமன்றத்தில் விவாதத்தில் பேசிய சிபிஎம் உறுப்பினர்கள், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி, மாநில அரசு மக்கள் தலையில் சுமத்தியுள்ள கட்டண உயர்வு, மோசமாக சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தீண்டாமைக் கொடுமை என மிக முக்கியமான பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.‘‘இதற்கெல்லாம் கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சி தான் காரணம். இப்போது தமிழகத்தில் எங்குமே அந்த நிலையே கிடை யாது’’ என்ற ஒரே கீறல் விழுந்தபல்லவியை மட்டும் கிளிப்பிள்ளைபதிலாக பாடும் அமைச்சர் கள், முதலமைச்சருக்கு பாராட்டு மழை பொழிவதில்மட்டும் முதலிடம் பிடிப்பது யார் என்ற போட்டியில் உள்ளனர்.
அவையை நடத்தி கட்சி சார்பில்லாமல் இருக்க வேண்டிய சபாநாயகரோ அம்மாவைப்புகழ்வதில் அமைச்சர்களுடன் தானும் போட்டியில் இறங்கி விடுகிறார்.
சுரன்
அம்மா நடந்த பாதையில் கால் படலாமோ

நாட்டில் என்னதான் நடந்து வருகிறது என்ற உண் மையை அமைச்சர்கள் தெரிந்து கொண்டாலும் அதனை மூடிமறைத்து, அம்மா என்ற வார்த்தையை மட்டும்தான் உச்சரிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்க்களும் கட்சி பேதமின்றி பேச அனுமதிக்க்கப்படுகிறார்க்கள்.ஆனால் அது அம்மாவை புகழ்ந்து பேச மட்டுமே.
மற்றபடி மக்கள் குறையை பேசினால்,எதிர்த்தால் அவை க்குறிப்பில் இருந்து அவர்கள் பேசியதும் அவையில் இருந்து அவர்களும் வெளியேற்றப்படுவார்கள்.இது தான் இன்றைய சட்டமன்ற செயல்பாட்டின் எழுதா விதி.
தனக்கு மட்டுமே வானளாவியஅதிகாரம் உள்ளது என்கிற மயக்கத்தில் விதி 110-ல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவரும் முதலமைச்சருக்கு மக்கள்  111.[இடங்கள் அல்ல] போடும் நாள் வந்து விடுமோ?
உதவி:ராமுலு-தீக்க்கதிர்
_______________________________________________________________________

சுரன்