விஸ்வரூபங்கள்,,,,

இந்தியாவில் இரு விஸ்வரூபகங்கள் தலை எடுக்க தயாராகியுள்ளன.
இரண்டுமே தமிழ் நாட்டில் இருந்துதான் வருகின்றது.


இது அரசியலில்
__________________
இந்தியாவின் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுக்கு வரிசையாக சர்ச்சைகளில் மாட்டுவதுதான் இப்போதைய பணியாக உள்ளது.
இக்குழுதயாரித்து வெளியிட்ட பாடப்புத்தகம் ஒன்றில் அம்பேத்கார் கருத்துப்படம் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை
மக்களவை வரை ஏற்படுத்தியது.

இப்போது, அக்குழுவினர் தயாரித்து வெளியிட்டிருக்கும் புத்தகத்தில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அக்காலகட்டத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான கேலிச்சித்திரம் ஒன்று போடப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை தூண்டியிருக்கிறது.
இந்த கேலிச்சித்திரத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் பலர் ஈடுபட்டிருக்கையில், இந்தித் திணிப்பு இல்லை, ஆங்கிலக் கல்வி தொடரும் என்று கூறும் ஆங்கிலப் பதாகைகளை ராஜாஜி தாங்கிக்கொண்டிருப்பது போலவும், அதைப் பார்க்கும் வேறு சிலர், இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்று கூறுவது போலவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் கேலிச்சித்திரம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ,உயிரையும் தியாகம் செய்தவர்களை இழிவு படுத்துவதாகவும், அந்தக் கேலிச்சித்திரத்துடன், திராவிட இயக்கம் குறித்து எழுதப்பட்டிருக்கும் ஒருகட்டுரை, திராவிட இயக்கம் குறித்த ஒரு மேம்போக்கான,தவறான கருத்தை தருவதாகவும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகிறார்.
இந்த கேலிச்சித்திரம் குறித்து தமிழக முன்னாள் அமைச்சரும்1960 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு,அதன் மூலம் அரசியலுக்கு வந்த துரைமுருகன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த இந்தி எதிர்ப்பு கட்டுரை-படம் ஆகியவை கல்விக்குழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுக்கும் நிலையை உண்டாக்கிவிட்டது.
_______________________________________________________________________
இது திரையில்
______________
கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து கதநாயகனாகவும் நடித்து மிகப்பெரும் எதிர்பார்ர்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படத்தின் கதை என்ன எப்படி எடுத்திருக்கிறார்கள் போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்த சந்தேகக்ங்களுக்கு எல்லாம் விடை அளிக்கும் விதமாக கமல்ஹாஸன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
சுரன்
விஸ்வரூபம் என் மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்.
கதை இதுதான்: அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது…


இதுதான் கதையின் மையக் கரு. இதில் யாரும் எதிர்ப்பார்க்காத சில காட்சிகள் உண்டு. முழுசாக சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடுமே. அதான்.. மீதி வெள்ளித்திரையில்,” என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?