முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

32 -பேர்கள்


உயிரை பலி வாங்கிய தீ
டெல்லியில் இருந்து சென்னை வந்த கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துதுள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை4.20 மணிக்கு, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்தைக் கடந்து வந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுரன்
 விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் கோளாறு விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டாலும் பெட்டியில் வெடிமருந்து வாடை காணப்பட்டதால் யாரேனும்  வெடிமருந்து பொருளை மறைவாகக் கொண்டு வந்தபோது மின்கசிவால் பெரும் சேதம்  ஏற்பட்டிருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விபத்தால்நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே,பயத்தில் ஓடும் ரயிலில் இருந்து சில பயணிகள் குதித்துவிட்டார்கள்.
 மேலும், விபத்துக்குள்ளான எஸ் 11 பெட்டியில் இருந்து 28 பயணிகள் காயங்களுடன் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுரன்
விபத்தில் சிக்கிய பெட்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. அந்தப் பெட்டியை உடைக்க  கடுமையாக முயற்சித்துதான்உடைக்க முடிந்ததது.
விபத்தில் காயமடைந்தவர்களைக் காணவும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும் சென்னையில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் மருந்துகளையும் ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் இன்று காலை சென்னையில் இருந்து நெல்லூர் சென்றுள்ளது.
_______________________________________________________________

இப்போதைய ஒலிம்பிக் பதக்க விபரம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.
சுரன்

துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
லண்டனின் புறநகர் பகுதியான வுல்லிச்சில் இருக்கும் துப்பாக்கிச் சுடும் அரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் ககன் நரங் 701.1 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடம் பெற்றார்.
முன்னதாக தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர் 600 க்கு 598 புள்ளிகளைப் பெற்றார்.
இந்தப் பிரிவில் ருமேனியாவின் மொல்டோவியனோ 702.1 புள்ளிகள் பெற்றுத் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் இத்தாலியின் நிக்கோலோ கம்பிரியானிக்கு கிடைத்தது
இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளவர் என்று கருதப்பட்ட இந்தியாவின் துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தகுதிச் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். 47 பேர் போட்டியிட்ட தகுதிச் சுற்றுப் போட்டியில் பிந்த்ராவால் 16 ஆவது இடத்தையே பெற முடிந்தது.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தகுந்தது.
சுரன்
இன்றைய நிலவரப்படி சீனா-அமெரிக்கா மொத்தப்பதக்கப்பட்டியலில் சரிசமமாக இருந்தாலும் சீனாதான் தங்கம் அதிகம் வென்றுள்ளது.அதில் பாதியைத்தான் அமெரிக்கா தொட்டிருக்கிறது.இந்தியா ஒரு வெண்கலம்மட்டுமே.

RankCountryGoldSilverBronzeTotal
1China64212
2United States35412
3Italy2428
4South Korea2125
5France2114
6North Korea2013
7Kazakhstan2002
8Australia1113
8Brazil1113
8Hungary1113
11Netherlands1102
11Romania1102
13Russian Federation1034
14South Africa1001
14Georgia1001
16Japan0235
17Great Britain & N. Ireland0112
18Colombia0101
18Cuba0101
18Chinese Taipei0101
18Poland0101
22Moldova0011
22India0011
22Ukraine0011
22Canada0011
22Azerbaijan0011
22Belgium0011
22Norway0011
22Uzbekistan0011
22Serbia0011
22Slovakia0011
_________________________________________________________________
சுரன்
என்ன? இன்னும் இந்தியா தங்கம் வாங்கலியா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?