வந்து விட்டது வறட்சி அல்லது எல் நினோ
இப்போது கோடை காலம் முடிவடைந்து தமிழ் நாட்டில் காற்றடி காலம் ஆரம்பமாகி விட்டது.
ஆனால் தென் மேற்கு பருவ மழை இன்னும் சரியாக ஆரம்பமாகவில்லை.அதை விட கோடை காலம் போல் வெப்பம் மக்களை தாக்குகிறது.அரிசி உற்பத்தி வழக்கத்தை விட40% குறைவாகவே உற்பத்தியாகியிருக்கிறது.
இதுதான் சாக்கு என்று வியாபாரிகள் அரிசி விலையை அதிரடியாக 10 ரூபாய் முதல் கிலோவுக்கு அதிகரித்து மக்களை அலற வைத்துள்ளனர்.
இது போன்ற நிலைக்கு காரணம் என்ன?
விலை வாசி உயர்வுக்கு பேராசை வியாபாரிகள்தான் காரணம்.
வறட்சிக்கு இப்போது உருவாகியுள்ள எல் நினோ தான் காரணம்.
அது என்ன எல் நினோ?
எல் நினோ என்பது ஸ்பானிஷ் மொழி வார்த்தை.' சின்னப் பையன்' என்று இதற்கு பொருள். உலகில் பெரிய கடலானவெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது.
இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய நீரை மேற்கு நோக்கி கொண்டு சேர்க்கிறது. இதற்கிடையே, கிழக்கு பசிபிக் பகுதியிலிருக்கும் குளிர்ந்த நீர், மேற்பரப்பிற்கு வரும். இது பூமத்திய ரேகை பகுதியில் சேர்ந்து கிழக்கு மேற்கு பகுதியில் வெப்பநிலை மாறுபாட்டை உருவாக்கும்.
பசிபிக் காற்று, வடதுருவத்தில் வசந்த காலம் துவங்கியதும், தனது வலிமையை இழக்கும். குறைந்த அளவிலான தண்ணீர் மேற்கு நோக்கி தள்ளப்பட, மத்திய, கிழக்கு பசிபிக் பகுதியிலுள்ள நீர் வெப்பமேற துவங்கும். ஆசியாவில் கோடை மழை ஏற்படும் போது, இந்த காற்று மீண்டும் வலிமை பெறும். இதனால் வெப்பச் சமநிலை மீண்டும் பராமரிக்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹம்போல்ட் நீரோட்டம், தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாக, வடக்கு திசையில் நகர்ந்து பூமத்திய ரேகை பகுதிக்கு சென்று விடும். இதனால், வெதுவெதுப்பான வறண்ட காற்று பெரு, ஈக்வேடார் போன்ற நாடுகளின் கரையோரத்தை அடையும்.
இந்த வெப்ப நீரோட்டம் கடலின் அடியில் இருக்கும் குளிர்ந்த நீரை மேலே கிளப்பிவிடும். இது தான் எல் நினோ என அழைக்கப்படுகிறது.
பொதுவாக 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்த வெப்பநிலை மாற்றம்சுழல் முறையிலுருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தோன்றும் இந்த எல் நினோ, காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது செப்டம்பர் மாதமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு, மேற்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாறுபாட்டை கணக்கில் கொண்டு, எல் நினோவின் தாக்கம் அளவிடப்படுகிறது. எல் நினோவால், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் 0.5 டிகிரி செல்சியஸ், வெப்பநிலை மாறுகிறது.
எல் நினோ ஏற்படும் போது, கிழக்கு மேற்காக வீசும் காற்றின் திசை நேர்மாறாக மாறி, மேற்கு கிழக்காக வீசுகிறது. இதனால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக் பகுதிகளின் வெப்பநிலை தலைகீழாக மாறுகின்றன. மேற்கத்திய பகுதிகள், வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டிருக்கும். ஆனால், எல் நினோ தாக்கத்திற்கு பின் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா பகுதிகள் ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையையும் வறண்ட நிலையையும் அடையும்.
கடந்த 1998-ம் ஆண்டில் எல்-நினோ வானிலை மாற்றம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் மழை குறைந்து கடும் வறட்சி நிலவியது.
2002-03 மற்றும் 1997-98, 1982-83-ம் ஆண்டுகளில் எல்-நினோ ஏற்பட்ட
போதும் ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகாமை நாடுகளில் வறட்சி உண்டானது.
1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 இவை எல் நினோ உண்டான காலங்களாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையானது எல் நினோவின் முக்கிய நிகழ்வுகளை விளக்கியுள்ளது
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையானது எல் நினோவின் முக்கிய நிகழ்வுகளை விளக்கியுள்ளது
தாக்கம் |
|
லா நினா
எல்நினோவிற்கு நேர் எதிரானது லா நினா ஆகும்.
எல்நினோவிற்கு நேர் எதிரானது லா நினா ஆகும்.
இது கிழக்கத்திய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும். இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில் எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.
'லா நினா' என்றால் “சின்ன பெண்” ஆகும். எல் நினோவிற்கு நேர்எதிராகும்.
'லா நினா' என்றால் “சின்ன பெண்” ஆகும். எல் நினோவிற்கு நேர்எதிராகும்.
________________________________________________________________________