தா.பா அரசியல்.....,

தா.பாண்டியன் குழப்பம் உச்சத்தில் இருக்கிறது . தனது கட்சியான இந்திய கம்யூனீஸ்ட் கட்சியை தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவின் குறிப்பாக ஜெயலலிதாவின் துதி பாடும் கட்சியாக மாற்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்.
சுரன்
ஜெயலலிதா இவரை தோட்டத்துக்குள்ளேயே அனுமதிக்காமல் இருந்தாலும் இவர் அவர் மீது கொண்டுள்ள மட்டற்ற மதிப்பு கொஞ்சம் புல்லரிக்கத்தான் வைக்கிறது.

மதுபானக்கடைகளை மூடுவது இப்போதைக்கு சாத்திய மானது அல்ல.அரசே குடிமகன்கள் தரும் பணத்தில்தான் காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறது.
இது தெரிந்தும் வருங்கால இளையோரை எண்ணி  மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று பலர் வற்புறுத்திக்கொண்டிருக்கும் போது ஜெ க்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காகவே மதுபானக்கடைகளை மூடக்கூடாது என்று அறிக்கை விடுகிறார் தா.பா,
சொல்லப் போனால் பாட்டாளி வர்க்கத்திற்காக,ஏழை எளியோருக்காக பாடு படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் அவர்கள் குடும்பத்தையே சீரழிக்கும் மதுக்கடைகளை மூட சொல்லுவதில் முன்னணியில் இருக்க வேண்டும்.
சுரன்

ஆனால் தா.பாண்டியன் கருத்தோ ஜெயலலிதா மனம் புண்படக்கூடாது என்பதில் மட்டுமே முன்னணீயில் இருக்கிறது.
  இவரின் அரசியல் போக்கு பிடிக்காமல் பல கட்சியினர் இ.கம்யூ.கட்சியை விட்டு விலகி இவரை விட பரவாயில்லாமல் அரசியல் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.அதில் பலர் சேர்ந்து விட்டதால் தா.பா ,தன் நிலையை மறுபரிசீலனை செய்யாமல் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது கோபத்தைக் காட்டுகிறார்.
சுரன்

மார்க்சிஸ்ட் கட்சியினர் கேரளாவில் கொலை வெறியுடன் அலைகிறார்கள் அவர்களால் கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கே கெட்ட பெயர் என்று புலம்பியுள்ளார்.
இவரின் நடவடிக்கைகளால் தான் கம்யூனிஸ்ட கட்சிக்கே பெயர் போய் விட்டது.இவர் போய் கூச்சமே இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சியை குறை சொல்லுகிறார்.கேரள அரசியலில் பாஜக வினர்,காங்கிரஸ்.முஸ்லீம் லீக்,மார்க்சிஸ்ட் கட்சியினர் அடிக்கடி ஒருவர் மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்வதும்-கொல்லுவதும் அடிக்கடி நடக்கும் செயல்.இதில் குறிப்பிட்டு மார்க்சிஸ்டை மட்டும் குற்றம் சாட்ட இயலாது.கண்ணனூர் மாவட்டம் இப்படியான அரசியல் படு கொலைகளுக்கு  பரவலாக பெயர் வாங்கி விட்டது.
சுரன்

 தா.பா .மார்க்சிஸ்டால் பெயர் கெட்டுப்போனதாகக் கூறுவது எப்போது தெரியுமா?
பெரியார் தி.க கட்சிக்காரரை ஓசூர் அருகே தா.பா.கட்சி சட்டமன்ற உறுப்பினரே கொலை செய்து விட்டு தலை மறைவாக ஓடிப்போன பிறகு.
தா.பாண்டியன் கொஞ்சம் தனது முதுகு அழுக்கையும் பார்த்து விட்டு அரசியல் அறிக்கைகள் விடட்டும்.

முன்பு ஆளுங்கட்சி தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கருணாநிதியை தாக்கி அறிக்கை விட்டார்.
கருணாநிதி நாற்காலியை காலி செய்து ஓராண்டாகியும் இன்னமும் தா.பா.கருணாநிதிய தாக்கி தான் அரசியல் செய்கிறார்.அவருக்கு இன்னமும் கருணாநிதிதான் முதல்வராக த் தெரிகிறாரோ என்னவோ.
சுரன்

அவருக்கு மட்டுமல்ல மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்,தினமலர்-தினமணி கருத்துப்படக் காரர்களுக்கு கருணாநிதிதான் இன்னமும் தாக்குதல் குறியாக இருக்கிறார்.மதிக்கும்-தின மலருக்கும் கருத்துப்படம் வரைய கருணாநிதியை விட்டால் வேறு மனிதர்களே தெரியாது போல்  இருக்கிறது.ஜெ அரசை கேலி செய்ய பிடி கிடைக்கவில்லையா?அல்லது அடிக்கு பயமா? அல்லது இவைகள் நமது எம்ஜிஆர் பத்திரிகை நிறுவனத்தின் பிற  வெளியீடுகளா?
இன்னமும் ஈழ இறுதிப்போரில் கருணாநிதி ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறி விட்டார் என்ற பழைய பாடலையே பாடி டெசோ நடத்த அவருக்கு அருகதை இல்லை என்று அறிக்கை விடுகிறார் தா.பா.
இவராலும்-அப்போது போராடியவர்களாலும்  ஏன் காப்பாற்ற முடியவில்லை. முத்துக்குமரன் போன்றவர்கள் தங்கள் உயிரை இழந்தது மட்டுமே நம்மால் செய்ய முடிந்த செயலாக அப்போது இருந்தது.இவரின் தலைவி எதிர்கட்சி தலைவியாக இருந்தாரே போராடி மத்திய அரசுக்கு ஏன்நெருக்கடி தரவில்லை.ஜெ போராடினால் போட்டிக்கு கருணாநிதியும் தீவிரமாக  இரங்கியிருப்பார் அல்லவா?
சுரன்

கொஞ்சம் நாள்களுக்கு முன்னர் தானே தா.பாவின் தங்கத்தலைவி கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது .அவரஐ சிறையில் தேச பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றார்.
அவரின் அன்பு சகோதரர் வைகோவை அதே காரணத்துக்காகத்தானே பொடா,தடாவில் உள்ளே போடா என்று அடைத்தார்.
பிரபாகரனை கைவிலங்கிட்டு கொண்டு வருவேன் என்று வீரமாக பேசினாரே.
அப்போது தா.பா எங்கே சென்றிருந்தார் என்றுதான் தெரிய வில்லை?
மொத்தத்தில் தா.பாண்டியன் அரசியல் மட்டும் அல்ல.தமிழ் நாட்டின் அரசியலே கருணாநிதியை தாக்குவதில் மட்டுமே பொதுவானதாக இருக்கிறது.ஆளுங்கட்சியின் தவறுகளை அமுக்கி விடவும்,ஜெயலலிதாவை பற்றி தவறாக செய்தி வெளியிடாமல் இருக்கவுமே கருத்தாக இருப்பதாக தெரிகிறது.நக்கீரன் பட்ட பாடுதான் பாடமாக உள்ளதோ?
சுரன்

\

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?