சனி, 14 ஜூலை, 2012

பொற்காலம் வருகிறது...?


சுரன்
இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாதிடீரென மும்பை வியாபாரிகள் மத்தியில் ஒருதகவல் பரவியது.
 இதனையடுத்து, தங்கத்தின் விலையில்  சரிவு ஏற்பட்டது. 
ஆக இந்தியாவில் தங்கம் மட்டுமல்ல.அனைத்து பொருட்கள் விலையும் கன்னா -பின்னா என்று ஏற இந்த இணைய மோசடி விற்பனையாளர்கள்தான் [ஆன் லைன் ட்ரேடிங்] காரணம் என்பது மக்களுக்கு புரிகிறதா?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 
2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில்உலக அளவில் நான்காம் இடம் வகிக்கும் இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கிறது. 
சுரன்

பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் தங்கம் விலையை தானாகவே குறைத்துள்ளனர்.
இதனால் கையில் பொருளும் இல்லாமல்-பணமும் இல்லாமல் தினசரி கோடிக்கணக்கில் வருமானம் பார்த்த ஆன் -லைன் சூதாட்ட விற்பனையாளர்கள் கடும் கோபத்திலும் பயத்திலும் உள்ளனர்.அரசு இவர்கள் கையில்தான் உள்ளது.காரணம் இவர்கள் பெரும் பணமுதலைகள் மட்டும் அல்ல .அரசியல்வாதிகள் வாரிசுகளாகவும் உள்ளனர்,
கார்த்தி சிதம்பரம்,மன்மோகன்,பிரதிபா பாட்டீல்போன்றோர் மகன்கள்,ராபர்ட் வதேரா,சரத் பவார் வாரிசுகள் இந்த வரிசையில் வருகிறார்கள்.இவர்கள் தடை செய்ய விடுவார்களா என்ற பயம் நியாயமாகவே நமக்கு ஏற்படுகிறது.

 ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வணிக பொருளாக கருதப்பட்டு வருகிறது.
டாலரை சேர்த்து வந்தவர்கள் இப்போது தங்கள் சேமிப்பாக தங்கத்தை மாற்றி சேர்த்து வருகிறார்கள்.
 சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற விலையில்தான் இருந்தது.
இப்போது ஓராண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து வந்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. 
இந்த நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், இப்போது புதிதாக ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாஅதிக அளவு இந்தியாவில் இருந்து ஆன் லைன் வர்த்தகத்தில் தங்கத்தை வாங்குவதை கட்டுப்படுத்திடவும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் இடையே ஒருதகவல் பரவியுள்ளது. 
சுரன்


 ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
திருப்பதி போன்ற பணக்கார கோவில்களில் கூட இப்போது தங்க காணிக்கை தரும் பக்தர்கள் குறைந்து விட்டார்களாம்.அதற்காவது கடவுள் [இருந்தால்]கண் திறக்க மாட்டாரா?
அந்த பொற்காலம் விரைவில் வருமா?
வரத்தான் இந்த அரசியல் வியாபாரிகள் விடுவார்களா?அப்படியே அரிசி-கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றையும் நீக்க வேண்டும்.ஆனால் இந்த மன்மோகன் அரசு செய்யாது என்றுதான் தெரிகிறது.அவர்களுக்கு தனியார்,அந்நிய நிறுவனங்களின் நலந்தானே முக்கியம்.