உடலும், -பயிற்சியும்..,
இன்றைய கால கட்டத்தில் இளமையாக என்றும் பதினாறாக கட்சியளிக்க ஐம்பது பக்கம் போனவர்களுக்கும் ஆசைதான்.
அதற்கு நிச்சயத்தேவை உடல் ஆரோக்கியம்.
அதற்கு மிகவும் தேவை உடற்பயிற்சி.இதை உடலை வருத்திதான் செய்யவேண்டும் என்பது இல்லை.
நமது பள்ளிகூட காலத்தில் டிரில் வாத்தியார் சொல்லித்தந்த மாதிரி கையை காலை ஆடி செய்தால் கூட போதும். ஆனால், பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி செய்வதில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்றைய உலகில் ஏராளமான நவீன வசதிகள் வந்துவிட்டன.
இன்றைய கணினி காலத்தில் அதிகமானோர் நாற்காலியை விட்டு எழாமலேயே தங்கள் பணியை செய்கிறார்கள்.
அலுவலகம் விட்டு வந்ததும் மீண்டும் நாற்காலி தொலைக்காட்சி அல்லது கணினி இதனால், பெரும்பாலானோர் தங்களது உடல் உழைப்பைச் செலுத்துவதில் பின் தங்கியுள்ளனர்.
உதாரணத்திற்கு ஒரு காலத்தில் பல கிலோமீட்டர் வரை நடந்து சென்ற மனிதன், தற்போது அலுவலகத்துக்கு மட்டுமின்றி பக்கத்து தெருவிற்குக் கூட வாகனத்தில் தான் செல்கின்றான். இதனால், உடல் உறுப்புகள் அனைத்தும். இயங்காமல்ஓய்விலேயே இருக்கின்றன.
இயங்காமல் இருக்கும் எந்திரம் துருவேறிப்போய் சிறிது காலத்துக்குப்பின் இயக்கமுடியாமல் போய்விடுகிறது அல்லவா?அதே போல் இயக்கப்படாத நம் உடல் உறுப்புகள் நோய் பிடித்து போகிறது.
இப்படி பட்ட ஓய்வு மனிதனுக்கு மிகுந்த நோய்களை அளிக்கிறது என்பதே உண்மையாகும்.
உலகம் முழுவதும் நடைபெற்ற ஒரு ஆய்வில், ஆண்டிற்கு 53 லட்சம் இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமல், தங்களது சோம்பேறித் தனத்தால் இறக்கிறார்கள் என்பதுதான் இப்போதைய அதிர்ச்சிதரும் தவலாகக தெரியவந்துள்ளது.அதாவது 10 ல் ஒரு மரணம் உடல் செயற்பாடின்மையால் ஏற்படுகின்றன. அதீத சோம்பேறித்தனம், நீண்டகால நோய்க்கு வழிவக்கிறது எனவும் எச்சரிக்கின்றனர். உடற்பயிற்சியின் அவசியம் குறித்தே பெரும்பாலும் விழிப்புணர்வுகள் வழங்கப்படுகிறது. ஆனால், சோம்பேறித்தனத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வுகள் வழங்கப்படுவதில்லை.
இதுவே, இளைஞர்களிடம் சோம்பேறித்தனம் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், உடற்பயிற்சிகளை அனைவரும் பெறும் வகையில், அதனை எளிதாகவும், பெறத்தக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு உடற்பயிற்சியை அரசு பொதுசுகாதாரத்தில் சேர்க்க வேண்டும் என்றனர். அதேசமயம், வாரத்திற்கு குறைந்தது இரண்டரை மணிநேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு தரும் வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
ஆண்டில் அதிகம் ஏற்படும் மரணங்கள் புகைப்பிடித்தல், கேன்சர், நீரிழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படுவதாக நாம் கருதுகிறோம். உண்மையில், பெரும்பாலான மரணங்கள் உடற்பயிற்சியின்மையாலே ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி என்பது சுமையல்ல சுகம் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம்.
புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்க்கு சமாந்திரமாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்று கண்டறிந்திருக்கிறது.
"தெ லான்செட்" இதழில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.
இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கான்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த உடற்பயிற்சியின்மை என்ற பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் இந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டனில், மூன்றில் இரண்டு வயது வந்தோர், பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை செய்யத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்..