வியாழன், 26 ஜூலை, 2012

ஓட்டை பேருந்தில் அல்ல..

சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளி பேருந்துக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் எப்.சி. (தகுதிச்சான்று) வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் விபத்துக்கு முக்கிய காரணம், போக்குவரத்து துறை அதிகாரிகள்தான். 
சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பேருந்து சென்றது.


 இந்த பேருந்தில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை ரொம்ப நாட்களாகவேசரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். 
நேற்று மாலை முடிச்சூர் பேருந்து நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பேருந்தை நிறுத்தினார். சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து  புறப்பட்ட  நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, அதே பேருந்தின்பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார். 
ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் வேகமாக சென்றதால்பேருந்து அரை கி.மீ., தூரம் சென்று விட்டது.
சுரன்
 மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த ஒரு போலீசால், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முடியவில்லை
, பொதுமக்கள் விடவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்கள், கம்பி, கல்லால் பேருந்தை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முடிச்சூர் சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 சிறுமி உடல் கிடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாவகாசமாக 40 நிமிடங்கள் கழித்து பின்னரேஅங்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
 போலீசாருடன் பேச்சு வார்த்தையால்மேலும் கோபமான பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்தனர். 

அது கொழுந்து விட்டு எரிந்தது, 
 நீண்ட நேரம் கழித்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், போராடி தீயை அணைந்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. 
ஆனால் ஆத்திரம் குறையாக பொதுமக்கள், சீயோன் பள்ளி உரிமையாளரையும், பஸ்சிற்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி மீண்டும் சாலை மறியல் செய்தனர்.

புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்தையும் தினசரி சோதனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு பள்ளியில் கூட, வாகனத்தை முறையாக பராமரிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறவேண்டும். அதுபோன்ற நேரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகனங்களை முறையாக சோதனை செய்யாமல் பணத்தை வாங்கிக் கொண்டுசான்றிதழ் கொடுத்து விடுகின்றனர்.

 பள்ளி ப்பேருந்தில் ஓட்டை இருந்தது குறித்து சீயோன் பள்ளி முதல்வர் விஜயன் கேட்டபோது
" சம்பவத்திற்கு உள்ளான பஸ், சீயோன் பள்ளிக்கு சொந்தமான பஸ் இல்லை. தனியார் டிராவல்ஸ் பஸ். தனியார் டிராவல்ஸ் பஸ்கள், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, கொண்டு போய் விடுகின்றன. இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த பஸ்களை பராமரிக்க வேண்டியது அவர்களுடைய பணி. பத்து நாட்களுக்கு முன்பு தான், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்களை அழைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தினோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் டிராவல்ஸ் பஸ்களை ரத்து செய்வது குறித்த முடிவு செய்யப்படும்."என்றார்.
அது சரி பணம் கொடுத்து தனியாரிடம் பேருந்து வாங்குபவர்கள் நல்ல பேருந்தா என்று பார்க்க வேண்டமா?
பள்ளிக்குழந்தைகள் பேருந்து விடயத்தில் கவனமாக இருக்க வேண்டாமா?
அரசு விதித்துள்ள விதிகளை சரியாக வழிப்படுத்த வேண்டாமா?ஒப்பந்த தொகை குறைவு என்பதால் நான்கு சக்கரம் உள்ள எதிலும் குழந்திகளை ஏற்றி விடலாமா?
பள்ளி பேருந்தில் குழந்தைகளை கொண்டு செல்ல மாதாமாதம் பணத்தை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கத்தானே செய்கிறீர்கள்.
இப்போது உங்கள் அலட்சியத்தால் குழந்தை பலியாகியுள்ள்தே அதற்கு என்ன செய்தாலும் உயிருக்கு ஈடாகுமா?பெற்றோர் கண்ணீருக்கு பதில் சொல்லுமா?
பள்ளிக்குழந்தைகள் பேருந்து-சிற்றுந்து விடயத்தில் பல குழந்தைகள் பலியாகியுள்ள போதும்,பள்ளி பேருந்துகள் பராமரிப்பு சரியாக இருப்பதில்லை,வாகனங்களின் வேகத்தையும் குறைத்ததாக தெரியவில்லை.இதை கவனிக்க அரசு ஊழியர்களான போக்குவரத்து அலுவலர்கள்,காவல்துறையினர் தமிழ் நாட்டில் இருப்பதாகவும் தெரியவில்லை.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாப்பப்பசாமியோ
, "தனியார் பள்ளி பஸ் ஒன்று, தகுதிச் சான்றிதழ் பெற வந்தால் பிளாட்பார்ம், புட்போர்ட், மர்காட் சரியாக இருக்க வேண்டும். இரண்டு கதவுகள் போடப்பட்டிருக்க வேண்டும். இடது, வலது ஜன்னல்களில் கம்பிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி, டயர் மற்றும் மெக்கானிக்கல் நிலைமை சரியாக இருக்க வேண்டும். இதில், ஒன்று கூட சரியில்லை எனில் சான்றிதழ் தரப்படாது. குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்று அரசு விதிகளை பற்றி ஓதுகிறாரே ஒழிய இந்த பேருந்துக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது.அதை வழங்கியவர் மீது என்ன நடவடிக்கை என்று சொல்லவே இல்லை.
இதைகூட அடிக்கடி ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் என்ன வெட்டி முறிக்கிறார்கள்.
இவர்கள் தெரிந்தே இந்த தவறுகளை பணத்துக்காக செய்து வருகின்றனர்.பணத்தின் மீதான இவர்களின் மோகம் இன்னும் எத்தனை பேர்கள் உயிரை பலி கொள்ளப் போகிறதோ?
அதில் இவர்கள் உயிர் சொந்தங்கள்.இல்லாமல் இருப்பதால்தான் பலி கொடுத்த  மற்றவர்கள் வேதனை-சோகம் இவர்களுக்கு புரியவில்லையோ என்னவோ.
இவர்களுக்காவே இந்தியன் தாத்தா உருவானால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
இனி மக்கள்தான் இது போன்ற பேருந்து-லாரி விபத்துகளின் போது நடந்து கொள்ள வேண்டும்.
பேருந்தை எரித்தது மட்டும் போதாது,இடு போன்ற பேருந்தை தனது பள்ளிக்குழந்தைகள் ஏற்றி செல்ல ஒப்பந்தம் செய்த பள்ளி நிர்வாகி,இப்பேருந்து எப்.சி.அனுமதித்த வட்டார போக்குவரத்து அலுவலர் ,பேருந்து உரிமையாளர் ,ஓட்டுநர் இவர்கள் மீது திட்டமிட்டு கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தால்தான் - பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்க்கும்  மற்ற பள்ளி தாளாளர்களுக்கும் உணர்வு-பொறுப்பு வரும்.
இப்போதைய  செய்தி:
முதல்வர் ஜெயலலிதா" பழுதுள்ள பேருந்தை இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டிருப்பதாகவும் சுருதியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியிருப்பதாகவும்"அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பள்ளி தாளாளர் எம் விஜயன், பேருந்து உரிமையாளர், பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து பராமரிக்கும் பொறுப்பிலிருந்த சிறுவன் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுரன்

பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே முன் வந்து நீதிமன்றம் சம்பவத்தை வழக்காக்கி விசாரிக்க தொடங்கியிருக்கிறது.சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.
"சரியாக பராமரிக்கப்படாத ஒரு பேருந்திற்கு தகுதி சான்றிதழ் எப்படி கொடுக்கப்பட்டது என்பதை நாளையே வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இன்று பெருமளவில் அப்பகுதி மக்கள் குழுமி, இறந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.கடைகளும் அடைக்கப்பட்டன.
_________________________________________________________________________________
சுரன்