ஈமு வாங்கலையா மாமு.



ஈமு கோழி .
கொஞ்ச நாட்களாகவே தமிழக தொலைக்காட்சிகளிலும்-பத்திரிகைகளிலும் பரபரப்பாக விளம்பரம் வரும்  கோழி.
முட்டையில் இருந்து அதில் உள்ள கழிவுகள் வரை அனைத்தும் காசுதான்,
முதலீடு செய்தால் எங்கோ போய் விடுவீர்கள் .
ஆனால் அதில் பலர் முதலீடு செய்த பின்னர் ஈமு பண்ணை உரிமையாளர்கள்தான் எங்கேயோ போய் விட்டார்கள்.தலை மறைவாகத்தான்.

ஈமு விளம்பரங்கள் வரும் போதே சில இதழ்கள் அதை நம்ப வேண்டாம் என்றுதான் எழுதி தள்ளினர்.
ஆனால் முட்டை தரும் பணக்குவியலை நம்பி இன்று முட்டையின் ஓடு கூட கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
அதில் ஒரு ஈமு கோழி முதலீட்டாளர் தான்திருப்பூர் மாவட்டம் கே.என்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம்.

அவர் தனது சொந்த கதையை -அல்லது ஏமாந்த கதையை கூறுகிறார்.
 ''ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு ஈமு கோழி வளர்ப்புப் பத்தி பேசுறதுக்காக, கோபி செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. பிரைட் லைவ்ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் சங்கர் என்பவர் வந்திருந்தார். அவரோட பத்து விரலிலும் பத்து மோதிரங்களைப் போட்டுவந்து, 'இது அத்தனையும் ஈமு கொடுத்தது.
சுரன்

இதுபோல நீங்களும் மோதிரம் போடணும்னா, ஈமு வளருங்க. ஈமுவின் கறி, இறகு, தோல் என்று அத்தனையும் பணம்தான். ஈமுவில் முதலீடு செய்தால் உங்களை கோடீஸ்வரனாக்கிக் காட்டுறேன்’ என்று சொன்னார். விவசாயம் நொடிந்துபோய் இருந்த எங்களுக்கு இவருடைய வார்த்தை நம்பிக்கையைத் தந்தது. திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, திண்டுக்கல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்டவங்க பல கோடி ரூபாய் பணத்தைப் போட்டிருக்காங்க. கோழி வளர்ப்புக்கு மாதம் ஏழாயிரம், வருட போனஸ் இருபது ஆயிரம் என்று சலுகைகளை அவர் அறிவிக்க எங்களுக்கு சந்தோஷம் தாங்கலை. சொன்னதுபோலவே முதல் ஏழு மாசம் பணத்தை ஒழுங்காகக் கொடுக்கவும் ஆரம்பிச்சார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து பணம் வரவில்லை. அவரை நேரில் சந்தித்து பணம் கேட்டேன். ரெண்டு மாசம் பொறுத்துக்கோங்கன்னு சொன்னார்.  


நாங்க நாலு மாசம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு விவசாயிகள் எல்லாம் ஒன்று திரண்டு போய் அவரிம் கேட்டோம். உடனே ஒன்பது லட்சத்துக்கு ஒரு செக் கொடுத்தார். அதுலயும் பணம் இல்லை. மறுபடி யும் நாங்க ஆபீஸுக்குப் போனபோது, அவரோட மனைவி காயத்ரி எங்களை மிரட்டினாங்க. வீட்டுல இருக்கும் நகை நட்டை எல்லாம் வித்து நானும் என் மனைவியும் சேர்ந்து 12 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தோம். அனுபவப்பட்ட நான் சொல்றேன்.. ஈமுவை நம்பி இனியும் யாரும் ஏமாறாதீங்க'' என்று கலங்கினார்.
சுரன்

அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் நம்மிடம், ''என் வீட்டுக்காரர் பேரு வையாபுரி. விவசாயம்தான் பார்த்துட்டு இருந்தோம். ஈமு கோழியில நல்ல வருமானம் வரும்னு சொல்லி ரெண்டு லட்சம் கடன் வாங்கி ஈமு கோழியில் முதலீடு செஞ்சாரு. ஆறு மாசமா பணம் வரவே இல்லை. கடன்காரங்க வட்டி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கொடுத்த பணமும் போச்சேன்னு உட்கார்ந்தவரு, மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. இப்போது நான் அநாதையா நிக்கிறேன்'' என்கி றார்.
கார்த்திக் சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதால், ஈமு கோழிப் பண்ணையை இழுத்து மூடிவிட்டு, தலைமறைவாகி விட்டார். அவரது அனைத்து செல்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
save image

சுரன்

திருப்பூர் எஸ்.பி. விடுப்பில் இருப்பதால் ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஈரோடு மாவட்ட எஸ்.பி. பொன்னி 
''ஈமு கோழி விவகாரம்தானே... இன்ஸ்பெக்டர் செல்வத்தைத்தான் அதை விசாரிக்க சொன்னேன். அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அவருகிட்ட கேளுங்க'' என்று சொல்லி செல்வத்தின் நம்பரைக் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டோம். ''புகாரின் அடிப்படையில் கார்த்திக் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அவர் தலைமறைவாகி விட்டதால் தனிப் படை அமைத்துத் தேடி வருகிறோம். ஈமு கோழியை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரும், காவல் துறையும் முன்பே  பல முறை எச்சரித்து இருக்கிறோம். ஆனாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு மக்கள் ஏமாந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
 ஈமு கோழியை நம்பி ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று உறுதியாக சொன்னார்.

இதை படித்த பின்னரும் முதலீடுசெய்ய ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
இன்னமும் அதிக வட்டிக்கு ஆசை பட்டு பாசி,போரக்ஸ்,ஆவ்ரோ நிறுவனங்களில் பணம் செலுத்தியவர்கள் உள்ள  வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்தானே இது,
சுரன்

சில நிறுவனங்கள் ஓடிப் போனவர்கள் வேறு எதற்காகவோ ஓடி போயிருக்கலாம் .உண்மயிலேயே ஈமு கோழி வளம் தரும் கோழி இனம்.பயப்படாமல் முதலீடு செய்யலாம் என்கிறார்கள்.
1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 7,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்; ஊக்கத்தொகை, தங்க நாணயங்கள், இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னமும், விளம்பரங்கள் வருகின்றன.
ஈமு கோழி பண்ணை நிறுவனங்கள், அவற்றின் லாபம்எப்படி வருகிறது என்பது குறித்தோ, முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் பங்குவிபரங்கள் குறித்தோ வெளிப்படையாக கூறுவதில்லை.

சுரன்

 ஈமு கோழி, பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியில் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்தும் எவ்வித விவரத்தையும் தெளிவாக தெரிவிப்பதில்லை.
இறைச்சியை யார் வாங்குகிறார்கள்.முட்டையை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்குவது யார்,எந்த நாட்டுக்கு எப்படி ஏற்றுமதியாகிறது என்ற விபரங்கள் மூடு மந்திரமாகவே உள்ளது.
எனவே, பொதுமக்கள், தங்கள் பணத்தை ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்வதற்கு முன், அத்தொழில் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, அதன்பின், முதலீடு செய்யுங்கள். கவர்ச்சியான விளம்பரங்களையும் ,பேச்சுக்களையும் மட்டும் நம்பி ஏமாற வேண்டாம். 
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?