சைதை துரைசாமிக்கு வந்த காபரா

வாந்தி, பேதியால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குள்ளம்மாள் என்ற பெண், கடந்த 21ம் தேதி இறந்தார். அவர், காலராவால் இறக்கவில்லை, சிறுநீரக பாதிப்பால் இறந்தார் என, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து உள்ளது. 


அதே மருத்துவமனையில் வாந்தி, பேதியால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பாஞ்சாலி என்ற பெண் சிகிச்சை முடிந்து, கடந்த 21 ம் தேதி வீடு திரும்பினார். 
ஆனால் பேதி தொடர்ந்த நிலையில் அவர், 24 ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அவரும் சிறுநீரகக் கோளாறால் இறந்ததாக மாநகராட்சி தெரிவித்தது.
ஆக சென்னையில் சிறு நீரகம் திடீரென பலருக்கு பழுதாகியுள்ளது தெரிய வருகிறதா?அதுவும் சைதையார்நிர்வாகம் ஆரம்பமானது முதல் இவ்வாறு நடப்பதற்கு திமுக வின் சதி வேலை தான் காரணமா?

சென்றநான்கு வாரங்களாக, சென்னையில், வாந்தி, பேதி பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட, 300 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர்களில், நான்கு பேருக்கு காலரா என,வேண்டா வெறுப்பாக அல்லது வேறு வழியின்றி மருத்துவமனை  உறுதி செய்துள்ளது.
காலராவை மறைப்பது மாநகராட்சி வேலையா?
அதை பற்றி எச்ச்சரிக்கை செய்வதும் -தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதும்தான் மாநகராட்சி வேலையாக அல்லது பணியாக இருக்க வேண்டும்.மாநகராட்சிக் கூட்டத்தில் இது பற்றி கூறிய எதிர்கட்சிகளை ஆண்மையற்றவர்கள்-தோற்று போன கட்சியினர் என நக்கல் செய்து வெளியே பற்றி விட்டனர்.
தேர்தலில் வெற்றி தோல்வி வாடிக்கைதானே.அதிமுக தலைவர் ஜெயலலிதா பர்கூரில் தோற்றவர்தானே.எதற்கு தற்போதைய மேயர் சைதையாரே கொளத்தூரில் தோற்றவர்தானே?
சென்ற மாநகராட்சி தேர்தலில் இப்போதைய அதிமுக உறுப்பினரகள் அனைவரும் தோற்றவர்கள்தானே?
சுரன்



 மாநகராட்சி மரண பதிவேட்டில் உள்ள விவரங்கள்  படி,
 இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் இறுதி வரை, 29 பேர் காலராவால் பலியானதாக பதிவு செய்யப் பட்டு உள்ளது. 
இதே விவரம் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப் பட்டு இருந்தது.
இந்த தகவலையும்  மேயர் சைதை துரைசாமி மறுத்து பொய்யான தகவல் என்கிறார்.மாநகராட்சி பதிவுகளில் வந்து யார் காலரா இறப்புகளை பதிய முடியும்?
,  ""புதிதாக இணைந்த மண்டலங்களிருந்து, மூன்று மாதங்களில் பிறப்பு, இறப்பு பதிவேடுகள் மாநகராட்சி இணைய தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. புது மண்டலங்களில் தனியார் டாக்டர்கள் அளித்த இறப்பு சான்றிதழில்,"கார்டியாக் அரெஸ்ட்" என்று இருந்ததை, கணினி பதிவாளர்கள்  தப்பாக, "காலரா" என, பதிவு செய்து விட்டனர். கவன குறைவால் பதிவில் குளறுபடி நடந்து விட்டது.காலராவால் யாரும் இறக்கவில்லை,'' என்று அவர் விளக்கியுள்ளார். மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதைஅப்படியே திருப்பி ஒப்பிக்கின்றனர்.
                                                          
ஒரு பெரிய மாநகரில் வியாதிகள் பரவுவது வழக்கமான ஒன்றுதான் .அதற்கு சுகாதாரப் பணிகள் சரியாக இல்லாததுதான் காரணம்.அதை சரி செய்வதை விட்டு-மக்களுக்கு காலரா பரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடுப்பதை விட்டு,விட்டு மேயர் நாற்காலியை விட்டு எழாமல் அப்படி ஒன்றும் இல்லை.எதி கட்சிகள் சதி எனபது பதவியில் உள்ளவர்களுக்கு தகுதி அல்ல.
உடனே நடவடிக்கையில் இறங்குங்கள்.
காலரா ஆரம்ப இடத்தி கண்டுபிடித்து மேலும் பரவாமல் தடுங்கள்.அதை விட்டு .விட்டு சோற்றில் பூசணிக்காயை மறைக்க பார்க்காதீர்கள்.அதனால் நட்டம் உங்களுக்கும்,உங்கள் நிர்வாகத்திற்கும்-கட்சிக்கும்தான்.
இப்போதே பழைய மேயர் ம.சுப்பிரமணியம் எவ்வளவோநன்றாக செயல்பட்டார். சைதை துரைசாமி வெறும் டம்மி பீசு என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.காலராவை பார்த்து காபரா அடையாமல் அதை விரட்டப்பாருங்கள்.
இனி உங்க கவலை.
________________________________________________________________________


இப்போதைய ஒலிம்பிக் பதக்க நிலவரம்


தகுதி நிலைநாடுதங்கப் பதக்கம்வெள்ளிப் பதக்கம்வென்கலப் பதக்கம்மொத்தம்
1சீனாசீனா95317
2அமெரிக்காஅமெரிக்கா57517
3பிரான்ஸ்பிரான்ஸ்3137
4வட கொரியாவட கொரியா3014
5இத்தாலிஇத்தாலி2428
6தென் கொரியாதென் கொரியா2226
7ரஷ்யக் கூட்டமைப்புரஷ்யக் கூட்டமைப்பு2035
8கஸகஸ்தான்கஸகஸ்தான்2002
9ஜப்பான்ஜப்பான்14611
11ருமேனியாருமேனியா1203
12ஹங்கேரிஹங்கேரி1113
12பிரேசில்பிரேசில்1113
14நெதர்லாந்துநெதர்லாந்து1102
15உக்ரைன்உக்ரைன்1023
16லித்துவேனியாலித்துவேனியா1001
16ஜார்ஜியாஜார்ஜியா1001
16தென் ஆப்பிரிக்காதென் ஆப்பிரிக்கா1001
19கொலம்பியாகொலம்பியா0202
20பிரிட்டிஷ் அணிபிரிட்டிஷ் அணி0123
21கியூபாகியூபா0101
21போலந்துபோலந்து0101
21தாய்லாந்துதாய்லாந்து0101
21சீன தாய்பேய்சீன தாய்பேய்0101
21ஜெர்மனிஜெர்மனி0101
21மெக்ஸிகோமெக்ஸிகோ0101
27மங்கோலியாமங்கோலியா0011
27மால்டாவோமால்டாவோ0011
27கனடாகனடா0011
27அசர்பைஜான்அசர்பைஜான்0011
27பெல்ஜியம்பெல்ஜியம்0011
27நார்வேநார்வே0011
27செர்பியாசெர்பியா0011
27ஸ்லோவாக்கியாஸ்லோவாக்கியா0011
27உஸ்பெகிஸ்தான்உஸ்பெகிஸ்தான்0011
27இந்தோனீசியாஇந்தோனீசியா0011
27இந்தியாஇந்தியா0011



சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?