செவ்வாய், 31 ஜூலை, 2012

மீண்டும் நிதி,


உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகிவிட்டார்.இதனால் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சில அமைச்சர்களை மாற்றியமைத்திருக்கிறார்.
சுரன்
உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஷி்ண்டே வகித்து வந்த மின்சாரத்துறை, பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் மூன்றரை ஆண்டுக்குப்பின் மீண்டும் நிதியமைச்சராகியுள்ளார்.  2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலக்குப்பின் உள்துறை அமைச்சராக்கப்பட்டார்.
நாட்டின்  பொருளாதார வளர்ச்சி பயப்படும் நிலையில் அதை சரி செய்யும் சவால் அவருக்குக் காத்திருக்கிறது.
சிதம்பரம் சவாலை சரி செய்வாரா?
தற்போது, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
_________________________________________________________________________________
சுரன்