புதிய [குடி] அரசு



நாட்டின் 13வது குடியரசுத்தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று [25ம் தேதி]பதவியேற்கிறார். கடந்த 19ம் தேதி நடைபெற்ற  தேர்தலில் பிரணாப் முகர்ஜி வென்றார். இதையடுத்து, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை 11.30க்கு நடக்கும்  விழாவில்  அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா பதவியேற்பு செய்து வைக்கிறார். இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
, பதவியேற்பு விழாவின் போது  டெல்லி வானத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 போர் விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எதிரி ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணையும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
 காலை ஜனாதிபதி மாளிகைக்கு பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியின் பாதுகாப்பு செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கு அவரை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வரவேற்பார். 
 அங்கிருந்து இருவரும் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு ஒன்றாக வருவர். பதவியேற்பு விழா முடிந்து, பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டதும் பிரதிபா தனது நாற்காலியை பிரணாப்புக்கு கொடுத்து விட்டு முன்னாள் நாற்காலியில் அமர பதவியேற்பு முடிகிறது.. பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரணாபுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.புதிய குடியரசுத்தலைவர் பட்டம் கட்டப்பட்டு விட்டாயிற்று.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?