வியாழன், 5 ஜூலை, 2012

கண்டோம் கடவுளை...?பிரபஞ்ச ரகசியமஅல்லது கடவுள் ரகசியத்தை அறிந்து கொள்ள அறிவியல் கொஞ்ச நாளாக முயன்று வந்தது.

சுருக்கமாக இந்த உலகில் உயிரினங்கள் உருவாக முக்கிய அணு எது என்று கண்டு பிடிப்பதுதான் அந்த ஆய்வின் நோக்கம்.
கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று மதங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஆனால் அறிவியல் அணுக்களால் ஆனதுதான் உலகம் என்று உறுதியாகசொல்லுகிறது.
13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவாகியுள்ளது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி,நீர், நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் இப்படி எல்லாமேஇந்த அணுக்களின் வெவ்வெறு அளவிலான அணு சேர்க்கையினால் உருவானவைதான்.
இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.


இந்தஅணுக்களை ஒன்று சேர்க்கும் மூலப்பொருள் எது என்ற கேள்விக்குத்தான் விடை கண்டு பிடிக்க வேண்டியதிருந்தது,.
அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். 
இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும்,அந்த ஆய்வில் முக்கிய செயல் பாடுகள் புரிந்த இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் பெயரில் போஸையும் இணைத்து ஹிக்ஸ் போஸான் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது. 
இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ஹிக்ஸ் போஸான் துகள் கண்டறியப்பட்டு விட்டது. அதாவது கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
இந்த அறிவிப்பை ஜெனீவாவில் பெருந்திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா அறிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் போஸான் துகள்தானா என்பதை இறுதி செய்வதற்கு இன்னும் மேலும் சில ஆய்வுகள் செய்யப்பட்டுவருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே ஒளியை விட வேகமாக செல்லும் பொருளைக் கண்டு பிடித்து விட்டதாக கூறி வாங்கிக்கட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.
செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர்: 
"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் போஸான் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும் "என்றார்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் துகள் என்று ஒன்று இல்லாமல், அணுக்களின் சேர்க்கையாக பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியாது.எனவே கடவுளை கிட்ட தட்ட நெருங்கி விட்ட மாதிரிதான் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சுரன்
சத்யேந்திர நாத் போஸ்


#தோழர் ஜெயதேவ் தாஸ் சில விடயங்களை தெளிவு படுத்தியுள்ளார் இந்த துகளின் சரியான பெயர்"ஹிக்ஸ் போஸான்"
பீட்டர் ஹிக்ஸ்
இத்துகளை கண்டு பிடிக்க முதல் காரணமாக அமைந்த அறிவியளார்கள் பீட்டர் ஹிக்ஸ் பெயரின் ஹிக்ஸ் சும்,அடுத்து நமது இந்தியாவைச்சார்ந்த அறிவியளார் சத்யேந்திர நாத் போஸ் பெயரில் போஸ்சை எடுத்து போஸான் என்றும் 


சேர்த்துதான்"ஹிக்ஸ் போஸான்" என்று இக்கடவுள் துகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதை மீண்டும் குறிப்பிட காரணியான ஜெயதேவ் தாசுக்கு நன்றிகள்.

_______________________________________________________________________________________________________________________
சுரன்