கடவுளும் -குட்டிச்சுவரும்
கல்லில் கலை வண்ணம் கான்பது தமிழருக்கு மட்டுமே உரித்தானது அல்ல.
அதே போல் கல்லை மட்டும் கணடால் கடவுள் தெரியாது-கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதும் சரிதான்.
ஆனால் உலகமெங்கும் இதே நிலைதான்.
கிறிஸ்து தெரிகிறாரா? |
அதிலும் பக்தி மேலோங்கிய மனிதனுக்கு காணுமிடமெல்லாம் கடவுள்தான்.
முன்பு நாயின் பின் புறம் ஏசு உருவம் என்ற படம் உலகை ஒருமுறை வலம் வந்தது.
இப்போது கடவுள் குட்டிச்சுவரில் ஏசு வடிவில் தெரிவதாக பீதியை கிளப்பி விட்டுள்ளார்கள்.
sunderland பகுதியில் ஒரு சீனக்காரர் நடத்தும்"மரியோ டேக் அவே"என்ற கடையின் சுவரில் சிதைந்த பாகத்தில்தான் இப்போது கிறிஸ்து முகம் தெரிகிறதாம்.
இதுவரை 25000 பேர்கள்'தரிசனம்"பெற்று சென்றுள்ளார்களாம்.
அருகில் உள்ள அமெரிக்க மருத்துவமனையினர் அங்கு கோவில் கட்ட விண்ணப்பம் செய்துள்ளார்களாம்.
கடவுளைக்கண்டுபிடித்தவருடன் சுவர் |
இந்தியாவில்தான் சாலையை ஆக்கிரமித்து கடவுளர்கள் தோன்றுகிறார்கள் என்றால் அமெரிக்காவிலும் இதேநிலைதானா?
ஆனால் ஒன்றை யோசித்தீர்களா?
அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் நம்ம ஊர் பிள்ளையார்,முனியசாமிகள் முக தரிசனம் தெரிய மாட்டேன் என்கிறது.ஏசு மட்டும்தான்.
நம்ம ஊர் சாமிகளுக்கு விசா கிடைப்பதில் தொந்தரவாக இருக்கலாம்.
ஆனால் இங்கு கிட்ட தட்ட எல்லா சாமிகளும் தரிசனம் தருகிறார்கள்.
சமீபத்தில் மும்பையில் கூட ஏசு பாதத்தில் நீர் வடிந்தது[கழிப்பறை நீர் என கண்டு பிடிக்கப்பட்டதும்]ஞாபகம் இருக்கிறதா?
நீங்களும் உங்கள் பகுதி குட்டிச்சுவர்,மரக்கிளைகள்-முண்டுகளில் ஏதாவது உருவம் தெரிகிறதா என்ரு கன்டு பிடித்து பேரும்-புகழும் பெற முயற்சிக்கலாமே.
உங்களுக்கு அந்த கடவுள் துணை இருந்தால் சீக்கிரமாக வீரத்துறவி நித்தியானந்தா அளவுக்கு உலகப்புகழ் கிடைக்க வழியுண்டு.
-----------------------------------------------------------------------------------------------------------