கழிப்பான விடயம்
இந்தியாவில் கழிப்பிடங்கள் அமைக்க கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வெளியிடங்களில் மலம் கழிக்கும் இடங்களின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் வெளியிடங்களில் மலம் கழிக்கப்படுவதில் அறுபது சதவீதம் இந்தியாவில் இடம்பெறுகிறது என்பது ஒரு பெரும் வெட்கக்கேடு என்று இந்தியாவின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் வருந்தியுள்ளார்.
இந்தியாவில் பரவலாக கிடக்கும் ரயில் இருப்புப் பாதைகளே உலகின் மிகப்பெரும் கழிப்பிடமாக உள்ளது என்று தெரிவித்ததுடன், அவற்றை சுத்தம் செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் வரைவையும் முன்வைத்துள்ளார்.
இந்தியா ஒரு போர் விமானம் வாங்க செலவிடும் பணத்தை மட்டும் கொடுத்தால் ஆயிரம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்த திட்டங்களை செயல் படுத்திடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அதை செய்யுங்கள்.வெறும் வருத்தப்படலுடனோ-பேச்சுடனோ நிறுத்தி விடாதீர்கள்.
இப்போது கூட ஊராட்சிகள் மூலம் கழிப்பறை கட்ட நிதி வழங்கப்பட்டாலும் அதனால் பயன் உண்டானதாக தெரிய வில்லை.
என்னவோ சுதந்திர உணர்வுமிக்க இந்தியர்களுக்கு சுதந்திரமாக கழிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி நான்கு சுவர்களுக்குள் வருவதில்லையோ என்னவோ?
வெறும் பேச்சுடன் இதை விடாமல் நடமுறை படுத்த வேண்டும்.
அதோடு நகரங்களில் கழிப்பறைகளை வெளிநாடுகளில் உள்ளதுபோல் சுகாதாரமாக நடமாடும் அறை போல் வைப்பது நல்லது.
பொது கழிப்பறைகளை கட்டி விட்டு அதை மக்கள் அவசரத்துக்கு உபயோகிக்க விடாமல் கட்டணக் கழிப்பறையாக்கி அதையும் ஏலம் விட்டு ஆளுங்கட்சிக்காரர்கள் எடுத்து ஒண்ணுக்கு போக கூட 5 ரூபாய் என்று அடம்பிடித்தால் எங்களைப்போல் சில்லறை அவசரத்துக்கு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அப்படியே சாலை ஓரங்களில் மக்கள் போவதை கூட கண்டுகொள்ளாமல் சுமையை இறக்கிவிடும் அவலத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
பொது சுகாரத்துக்கு என்று அரசு ஆண்டுக்கு செலவிடும் கோடிக்கணக்கான பணத்தில் இது போன்று முக்கிய இடங்களில் இலவச கழிப்பறைக்களை கட்டுவதன் மூலமும்,அதை சுத்தமாக பேணுவதற்கு ஆட்களை நியமிப்பதன் மூலமும் சுகாதாரத்தை அடிப்படையில் இருந்தே வளர்க்கலாம்.
ஆனால் இங்கோ டாஸ்மாக் பார்களுக்கு போட்டியாக அல்லவா கட்டணக்கழிப்பறை ஏல அலப்பறை உள்ளது.
இந்நிலையில் ஜெயராம் ரமேஷ் சொன்னது போல் போர் விமானம் வாங்குவதை நிறுத்தி போர்க் காலநடவடிக்கையாக கழிப்பறைகள் கட்டினால் அதுவே கழிப்பான விடயம்தானே?
சுகாதார குறிப்பு:
தொழுநோயாளிகள் இல்லாத நாடாக இந்தியா, சென்ற 2005-ம்
_________________________________________________________________________________
குடிசைத் தொழில்
கேரளாவில் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் தனது மனைவி ரெமா ,நண்பர் சீனிவாசனோடு சேர்ந்து தனது வீட்டிலேயே கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
வீட்டை சோதனை செய்த காவல்துறையினர், கள்ள நோட்டை அச்சடிக்கும் இயந்திரம், ஸ்கேனர் மிஷின், 100, 500, 1000 ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஸ்டீபன், அவரது மனைவி ரெமா, சீனிவாசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணம் கொழிக்கும் குடிசைத் தொழில் என்பது இதுதானோ?
________________________________________________________________________________