செவ்வாய், 3 ஜூலை, 2012

சங்[கு]மா,,,,?

இதுவரை இல்லாத அளவு குடியரசுத்தலைவர் வேட்பு மனு பரிசீலனை சாதரண சட்டமன்ற தேர்தல் பரிசீலனை அளவு சென்று விட்டது.
காத்திருந்து குடியரசுத்தலைவர் மனுக்கள் பரிசீலனையின் போது சங்மா தரப்பு அபாய சங்கை ஊதியுள்ளது.
ஆதாயம் தரும் "இந்திய புள்ளியியல் மையத்தின் தலைவராக பிரணாப் உள்ளதால் அவருக்கு இத்தேர்தலில் நிற்க தகுதியில்லைஎன்று கூறியுள்ளார்கள்.

சங்மா சொன்ன அதிசயம் நடப்பது என்பது இதுதானோ?
ஆனால் இந்திய புள்ளியியல் மையம் பிரணாப் முகர்ஜி முன்பே தனது தலைவர் பதவியை விட்டு விலகி விட்டார் எனறுஅறிவித்துள்ளது.
  இதுவரை இது போன்ற சின்ன விவகாரங்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வந்ததில்லை.இனியும் வராது என்பதாலோ என்னவோ மற்ற தேர்தல் விதிகள் கையேடுநூலில் 'ஆதாயம் தரும் பதவியில் இருந்து குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் அவரின் மனு தள்ளுபடியாக்க வேண்டுமா?இல்லையா? என்பது பற்றிய விளக்கம் இல்லை.
அந்த மனு மீதான முடிவு தேர்தல் அலுவலரின் முடிவுதான்.
இது போன்ற குழப்பத்துக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.ஆனால் தேர்தல் அலுவலரின் முடிவு வானளாவிய அதிகார முடிவு.அதில் நீதிமன்றம் கருத்து சொல்ல இயலாது என்றே தெரிகின்றது.
சங்மா சொன்ன அதிசயம் இப்போதைக்கு நடக்க வாய்ப்பு குறைவு.
குடியரசுத்தலைவர் தேர்தல் இதுவரை கண்ணியமாக ஒரு சமரத்துடன் எதிர் கட்சிகள்-ஆளுங்கட்சிகள் செய்து கொண்டு நடந்து வந்துள்ளது.

ஆனால் இந்த முறை அதை நமது தமிழ் நாட்டு இடைத்தேர்தல் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
அது நம் உள்ளூராட்சித்தேர்தல் அளவு போய் விடக்கூடாது என்ற கவலைதான் நமக்கு.
 குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி மனு மீது குழப்பம் வந்த போது அங்கிருந்த ஒருவர் சங்கு ஊதினாராமே.அவர் என்ன சங்[கு]மா ஆதரவாளரா?
குடியரசுத்தலைவர்  தேர்தல் சங்கு ஊதுகிற நிலைக்கா போய் விட்டது.?

_________________________________________________________________________________
 
கொசு வளர்த்தவர்கள்,

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டக்கூடியதுதான்.

டெங்கு கொசுக்களை வளர்த்த குற்றத்திற்காக 10000 வீடுகளில் சோதனை செய்து 53 பேர்களை கைது செய்துள்ளனர்.


அவர்கள் என்னஈமு பண்ணை போன்று கொசுப்பண்ணை வைத்திருந்தார்களா என்று யோசிக்க வேண்டாம்.
 வீடுகளை சுகாதரமாக வைக்காமல் கழிவு நீர்களில் கொசு வளரும் அளவு சுத்தமாக இருந்த காரணத்துக்காகத் தான் கைது.
இதுவரை இலங்கையில் 11000 பேர்களுக்கு காய்ச்சல் வந்து அதில் டெங்குவினால் 76 பேர்கள் இறந்துள்ளனர்.
நம் தமிழகத்தில் எண்ணிக்கை காய்ச்சலிலும் -இறப்பிலும் அதிகம்.

இங்கு கொசு வளர்ப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றால்.

ஊராட்சி,நகராட்சி தலைவர்கள் அதிகாரிகளைத்தான் கைது செய்ய வேண்டும்.
அவர்கள்தானே பொது கழிவுநீர் கால்வாய்களை சரிவர பராமரிக்காமலும்-பன்றிகளை வளர்க்க இடம் கொடுத்தும் கொசுக்களை வளர்க்கிறார்கள்.