கல்வியும் - தொழிலாகி போயிற்றா?
வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கு இந்திய இறையாண்மையை அடகு வைக்கும் வேலையில் தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியிருக்கிறது. ஏற் கனவே பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு களை அனுமதித்து இந்திய வளத்தை வெளி நாட்டிற்குத் தாரைவார்த்து வருகிறது.
இது மட் டும் போதாது, அனைத்துத் துறைகளையும் எங்க ளுக்கு திறந்து விட வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசை நிர்ப்பந்தித்து வரு கிறது.இந்த நிர்ப்பந்தத்திற்கு காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடன்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மனிதவள மேம்பாட்டுத்துறை ‘ வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அனுமதித்தல் மற்றும் செயல்படுதலை முறைப்படுத்தும் மசோதா -2010, தேசிய சட்டக்கல்வி மசோதா- 2011 உள்ளிட்ட மசோதாக்களை சட்டமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இந்தச் சட்டங்கள் அமலாக்கப்பட்டால் தற்போது கிடைக்கும் குறைந்தபட்ச கல்வியும் எட்டாக்கனியாக மாறும்.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு உற்பத்தி செய்யப்படும் இயந்தி ரங்களாக மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
அதுமட்டுமல்ல, பாடத்திட்டம், நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அதிகாரங் கள் அனைத்தும் மத்திய அமைப்பிடம் சென்று விடும். இது இந்திய நாட்டின் கூட்டாட்சித் தத்து வத்திற்கே எதிரானது ஆகும். மேலும் நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கத்தில் ஒரு அமைப்பின் கீழ் இந்திய நாட்டின் மொத்த கல்விக் கொள்கையும் செல்வது நல்லதல்ல. அது போட்டி என்ற பெயரில் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு வருமானத்தை அதிகப் படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது. இந்தியாவில் தற்போது நஷ்டமில்லாத் தொழிலாக கொடிகட்டிப் பறக்கும் கல்வி வியாபாரமும் கார்ப்பரேட் மயமாகும். அதன் பின்னர் நடுத்தர மக்களுக்கும் கல்வி என்பது கானல் நீராகிவிடும்.அரசு கொஞ்சம் கொஞ்சமாக கல்வியை தனது பொறுப்பில் இருந்து கைகழுவிவிட்டு, தனி யாரின் கையில் ஒப்படைத்து விடுவதற்கான ஏற் பாடாகத்தான் இந்தச் சட்டம் அமையும். எனவே வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதித் தல் மற்றும் செயல்படுதலை முறைப்படுத்தும் மசோதா -2010-ஐ சட்டமாக்கும் முயற்சியை மத் திய அரசு கைவிட வேண்டும். இதே போல் ‘தேசிய சட்டக்கல்வி மசோதா -2011’ சட்டமானால் தற்போது உள்ள மாநில பார்கவுன்சில் மற்றும் இந்திய பார்கவுன்சிலின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படும். அதன் பின் னர் ஆளும் வர்க்கம் தனது வசதிக்கேற்ப சட் டத்தை வளைப்பதற்கும், அதிகாரத்தை பயன் படுத்துவற்கும் வழிவகுக்கும்.
வெளிநாட்டு வழக் கறிஞர்கள், சட்டநிறுவனங்கள் மற்றும் சட்டக் கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் காலூன்றச் செய்திடும் வகையில் இந்தச் சட்ட மசோதா நுட்பமாக பின்னப்பட்டிருக்கிறது.
இதில் பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியலுக்குமிடையிலான வலைப்பின்னலும் இருப்பதை காண முடியும். தாராளமயமாக்கல் என்ற பெயரில் மக்களை வஞ்சித்து, பெருமுத லாளிகள் மற்றும் அந்நிய மூலதனத்தின் நலன் களுக்கு சேவை செய்யும் இந்த மக்கள் விரோத, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சட்ட மசோதாக்களை செயலிழக்கச் செய்திட மக்கள் தங்கள் எதிர்ப்பை பலமாக காண்பித்தால் மட்டுமே முடியும்.
இதையும் தலை எழுத்து என்று ஒதுக்கி விடக்கூடாது.நமது தலை எழுத்தை எழுதுபவர்கள் நம்மிடம் வாக்குகளை பிச்சை எடுத்து சென்ற கூட்டம்தான்.அதை எதிர்ப்பதற்கு நமக்கு திராணி வேண்டும்.