தள்ளுபடி -------------------ரூ .1,30,000 கோடிகள்
சிதம்பர ரகசியம்
சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் பொறுப்பிலி ருந்து ப.சிதம்பரத்தை நிதி அமைச்சர் பொறுப் புக்கு கொண்டு வரும்போதே நாட்டுமக்களுக்கு ஒரு விசயம் நன்கு தெரியும். ஏதோ பெரிய காரி யங்களை நடத்துவதற்குத்தான் என்று .இப் போது அவரின் திருவிளையாடல் வெளியே வந்துவிட்டது.
ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் வரு மான வரி பாக்கிகளை மத்திய அரசின் நிதி யமைச்சகம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப் பித்துள்ளது.
இதில் நிதி மோசடிகள் ,வரி ஏய்ப்பு ,வங்கிகளில் கடனை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய பணமுதலைகள் , பாதுகாப்பு ஊழல் நிதிகள் உட்பட பல விதி மீறல்களும் அடங்கு ம்.
நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு விவகாரத்தில் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு -வாக்கெடுப்பில் கேவலமான முறையில் மன்மோகனுக்கு ஆ தரவாக வாக்களித்த ஊழல் வழக்குகளில் சிக்கி யுள்ள மாயாவதி, முலாயம் சிங், திமுக உள் ளிட்ட கட்சிகளால் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மன்மோகன்சிங் அரசு தப்பி யுள்ளது.
எனினும் அடுத்து வரும் நாடாளு மன்றத்தேர்தலில் காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பலத்த அடி தரு வதற்கு மக்கள் தயாராகி வருவதும் அவர்க ளுக்குத் தெரியும், அதற்குள் அடுத்துவரும் அரசு தங்கள் மீது பாய்ந்து விடாமல் எல்லாத் தப்பிக்கும் வழிகளையும் திட்டமிட்டு செயல் படுத்தி வருகிறார்கள்.
பல லட்சம் மோசடி ரூபாய் ஊழல்களையும் மறைக்கப் பெரு முயற்சி செய்து வருகிறார்கள். மறுபுறம் மக் களுக்கு அரசு தரும் உணவு தானிய மானி யங்களை ரொக்கமாகக் கொடுத்து அதை ஓட்டு வாங்குவதற்கான பணமாகத் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த முயற்சிகள் செய்கி றார்கள். இதன்மூலம் ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் வாங்கிச் சாப்பிடும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற் றிலடிக்க களமிறங்கிவிட்டனர்.
நிதித்துறை குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு நிதியமைச்சகம் அளித்த பதிலில் ஹசன் அலிகான் ஸ்விஸ் வங்கியில் ஏராள மாய் பணம் போட்ட விசயத்தில் 92 ஆயிரம் கோடி வருமான வரியும், பாதுகாப்பு ஊழல் களான (போபர்ஸ் பீரங்கி ஊழல் உள்ளிட் டவை) பணங்களுக்கான வருமான வரிகளை வசூலிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள் ளது. அதேபோல் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா குரூப் கம்பெனி தர வேண்டிய 20 ஆயிரம் கோடி, கேதான் குரூப் பாக்கி 4 ஆயிரம் கோடி, தலால் குரூப் 14 ஆயி ரம் கோடிகளும்கூட வசூலிக்க முடியாதாம்.
இந்த வருமானவரி பாக்கிகளை வசூலிக்க அந்த சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்யவும், அவர்கள் ஈடு வைத்த சொத்துக்களையும் எடுத்தால் ஒன் றும் தேறாது என்றும் நிதிஅமைச்சகம் கூறி யுள்ளது. மொத்தமுள்ள 2.49 லட்சம் கோடி நிலுவையில் இப்படி 1.33 லட்சம் கோடி வசூ லிக்க முடியாத பாக்கியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு 60 ஆயிரம் கோடி பாக்கியும் ரெவின்யூ இலாகாவால் வசூலிக்க முடியாது என்று அறிவித்துள்ளனர். மேலும் 2.49 லட்சம் கோடி பாக்கியில் வெறும் 7 ஆயி ரம் கோடிதான் வசூலிக்கமுடியும் என்றும் கூறி விட்டனர்.
மத்திய அரசின் வருமானவரித்துறை ஏழை, நடுத்தர மக்களை மட்டும் கசக்கிப் பிழி கிறது. ஆண்டுக்கு இரண்டுலட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோரிடம் அவர்களது ஊதியத்தி லேயே பிடித்தம் செய்து பறித்துக்கொள்கிறது. பணி ஓய்வுபெற்றவர்களும் வயதான காலத் தில் தங்கள் சேமிப்பை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் வட்டிபெற முதலீடு செய்கி றார்கள். அந்த வட்டியை வாங்கி வயதான காலத்தில் வாழ்வோரைக்கூட வருமானவரித் துறை வாட்டி வதைக்கிறது. நடுத்தர மக்கள், சிறுவணிகர்கள், சிறுதொழிலதிபர்கள் இவர் களிடம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.
ஆனால் ஊழல் பேர்வழிகளும், வரி ஏய்ப் பாளர்களும் லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கி ஏப்பம் விடுகிறார்கள். இதில் ஆளு வோரும் கவனிக்கப்பட்டுவிடுவதால் இந்திய சமூகத்தில் சர்வ சாதாரணப் பிரச்சனையாகி விடுகிறது.
சாதாரண மக்கள் வரிகளை பிழிந்து வாங்கிக்கொண்டு அரசு செய்ய வெண்டிய சேவைகளுக்கு கூட சேவை வரி போட்டு கல்லா நிரப்பும் மத்திய அரசு பண முதலைகளுக்கு மட்டும் கருணை பார்வை வீசுகிறது.அவர்கள் இந்த காங்கிரசுக் கட்சிக்கு மட்டுமல்ல யாருக்கும் ஆதரவாக வாக்களிக்க வாக்குச்சாவடி அருகே கூட வருவதில்லை. ஆனால் வரும் கட்சிகள் இவர்களுக்கு மட்டும்தான் சேவை புரிகிறது.இந்த அசிங்கமான நடமுறை மக்களுக்கு புரிந்தால் சரிதான்.
======================================================================
முகனூல் காட்டும் குற்றவாளிகள் முகம்.
-----------------------------------------------
சில நாடுகளில் புரட்சிகளையும்,சில நாடுகளில் கலவரங்களையும் உண்டாக்கப்பயன்பட்ட சமுக தளங்களால் சில பயன்களும் உண்டாகிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் பல குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற இணையதள நிறுவனங்களின் உதவியுடன் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் தலைமையிலான புலனாய்வு பிரிவினர் தீர்வு கண்டு வருகின்றனர்.
சமீபத்தில், உலகம் முழுவதும் 11 மில்லியன் கணினிகளை செயலிழக்கச் செய்து, 850 மில்லியன் டாலர் அளவுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்திய சர்வதேச குற்றவாளிகள் கும்பலை எஃப்.பி.ஐ. போலீசார் பிடித்தனர். இது சைபர்கிரைம் வரலாற்றில் மிக பெரிய வழக்காக கருதப்படுகிறது.
2010 முதல் அக்டோபர் 2012 வரை, பேஸ்புக் தனது சமூக வலைப்பின்னலில் இக்குற்றவாளிகள் உபயோகித்த பேஸ்புக் கணக்குகளைப் பாதுகாப்பு குழு கண்டறிந்து, இவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் எஃப்.பி.ஐ. கண்டறிவதற்கு உதவியது. பாதிக்கப்பட்ட கணக்குகளை கண்டறியவும், இந்த அச்சுறுத்தல்களை நீக்கும் அளவுக்கு பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகள் பல்வேறு திறனுடைய கருவிகள் கொண்டிருந்தது என அமெரிக்க மத்திய பாதுகாப்பு நிறுவனம் இன்று தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்தது.
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, குரோஷியா, மாசிடோனியா, நியூசிலாந்து, பெரு, பிரிட்டன், மற்றும் அமெரிக்காவிலிருந்து 10 பேரை கைது செய்ய பேஸ்புக் இணையதளத்தின் உதவி மூலம் ஆணைகள் பெறப்பட்டுள்ளன” என எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பில் சிங்களர்கள் குறைய காரணம்?
விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய
திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25
சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள
இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கனடா மற்றும் பிரித்தானியா போன்ற
நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில்
வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி
வீடுகளை நிர்மாணித்தன.
இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய
புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின்
நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. வன்னி இராணுவ
நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன்,
புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன.
விடுதலைப்புலிகளின் நிறுவனங்கள்
இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள
வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை
பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத
தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக
தெரியவந்துள்ளது.-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2012 இல் அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்பட்டவை.