டெங்கு - நில வேம்பு


இப்போது தமிழகம் முழுக்க பயமுறுத்திக்கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு குடி நீர் தான் கண்கண்ட மருந்தாக அனைவராலும் கூறப்படுகிறது.அரசே நில வேம்புக்குடி  நீரைத்தான் உபயோகித்து டெங்குவைவிரட்டக் கூறுகிறது.
அந்த நில வேம்பை பற்றி சில செய்திகள்:
இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும். இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் மருத்துவ குண நலன்களை பற்றி பார்ப்போம்.
சுரன்

வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.

உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
சுரன்

நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
----------------------------------------------------------
"சண்டை போடா ஜாக்கிசான்"
சுரன்
 ஜாக்கி சான். சண்டை காட்சிகளில் நகச்சுவையை கலந்து கட்டி தந்து உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பாதையில்தான் இப்போது பல நட்சத்திர நடிகர்கள் காமெடி, சண்டை என்று நடித்து வருகிறார்கள்.

58 வயதாகும் ஜாக்கி சானின் 101 வது படமான சிஇசட்12 படம் டிசம்பர் இறுதியில் வெளியாகிறது. ஜாக்கியின் புகழ்பெற்ற ஆமர் ஆஃப் காட் வரிசையில் 3 வது படம் இது. முதலிரண்டு பாகங்களும் உலக அளவில் சூப்பர்ஹிட். இதுவும் ஹிட்டாகும் என்பதை படத்தின் முன்னோட்டம் தெ‌ரிவிக்கிறது.

இந்தப் படத்துடன் தனது சண்டை காட்சிக்கு குட்பை சொல்லப்போவதாக ஜாக்கி சான் தெ‌ரிவித்துள்ளார்.
ஜாக்கிசானின் கடைசி ஆக் ஷன் படம் என்பதால் இந்தப் படத்துக்கு தனி எதிர்பார்ப்பு  கிடைத்திருக்கிறது.

சுரன்

இந்தியாவில் இந்தோ ஓவர்சீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
 இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் பெரோஸ் இலியாஸ் 
"ஜாக்கி சானின் 44 படங்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறோம். இது 45-வது படம். ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியிடுகிறோம். தமிழில் ‘இவன் நினைத்ததை முடிப்பவன்’ என்று பெயர் வைத்துள்ளோம். தமிழ்நாட்டு உரிமையை ஆர்ட் ஸ்டூடியோ பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 200 தியேட்டர்களில் திரையிடுகிறோம். அதில் 120 தியேட்டர்களில் தமிழ் டப்பிங்கில் வெளிவருகிறது."
 என்று தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐ.கே.குஜ்ரால் மறைவு
---------------------------------------
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 92.
சிறிது காலமாக நுரையீரல் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், 
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு டெல்லியை அடுத்துள்ள குர்காவ்னில் உள்ள  மருத்துவமனையில் காலமானார்.
சுரன்
அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்த குஜ்ரால், 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை 11 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து 1980-களின் மத்தியில் விலகிய குஜ்ரால், பின்னர் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.
முதலில், தேவே கவுடா தலைமையில் இருந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக காங்கிரஸ் கட்சி மிரட்டியதை அடுத்து, குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார். தேவே கவுடா அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குஜ்ரால், தகவல் தொழில்நுட்பம், செய்தி, ஒலிபரப்புத்துறை உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.
முதலில் 1964-ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
குஜ்ராலின் பெற்றோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களகுஜ்ரால் தனது 11-வது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?