மொத்தக் கொலைகாரர்கள்.
அமெரிக்காவில் கனெக்டிகட் மாநிலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் புகுந்த மாணவன் ஒருவன் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
இந்த சம்பவத்தில் 27 பேர் பலியானார்கள்.
இதே போல் சீனாவில் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ஹெனான் மாகாணத்தில் செங்பிங் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்கு நேற்று காலை குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பள்ளிக்கு வெளியே மின் யிங்ஜன் (வயது 36) என்ற வாலிபர் வயதான மூதாட்டியை முதலில் கத்தியால் குத்தினார்.
பின்னர் வரிசையாக வந்து கொண்டிருந்த 6 முதல் 11 வயது நிறைந்த பள்ளி சிறுவர்களை தொடர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தினான். இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவனை தடுத்து நிறுத்தினர். அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் இப்போது அதிகமாக உலக அளவில் நடந்து வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
காரணம் புதிய கலாச்சார மன அழுத்தம்தான் என் ஆய்வுகள் சொல்கின்றன.
போதை பழக்கம் அதிகரித்திருப்பதும் ஒரு காரணம்.
புதிய பழக்க வழக்கங்கள்,போதை பழக்கம்,வேலையின்மை பொன்றவை தான் இந்த மன அழுத்ததுக்கு முக்கிய காரணம்.சில திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்களும் மன அழுத்தக் காரர்களுக்கு தவறான வழியை காட்டி விடுகின்றனவாம்.
எப்படியோ உலகம் ஒரு கிராமம் அளவுக்கு சுருங்கும் போது இது போன்ற நிகழ்வுகள் இனி அடிக்கடி நடக்கும் என எதிர் பார்க்கலாம்.அது புதிய உலகமயமாக்கலுக்கு நாம் கொடுக்கும் விலைகளில் ஒன்று.
மொத்தமாக கொல்ல ஒவ்வொரு மனநிலை பாதிப்பாளருக்கும் ஒரு காரணம் இருக்கும்.மனதில் ஒட்டு மொத்தமாக பலி கேட்பது சிலருக்கு கடவுளாக கூட இருக்கலாம் .
அது அவரவர் நம்பிக்கையைப்பொறுத்து அமையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்க்கரை வள்ளி
சிலருக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பார்த்தால் கொஞ்சம் இளக்காரமாகத்தான் இருக்கும்.
கஞ்சிக்கத்தவன் சாப்பிடும் பொருள் என்ற நினைப்புதான் காரணம்.
ஆனால் அதன் மகத்துவம் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டால் நல்லது.உங்களுக்கு ருசிக்க தோன்றலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின்
செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய்
எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ்.
இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது
வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை,
கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை
வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70
முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது.
ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம்
உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.
எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு
வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை
இயற்கை நோய் எதிர் பொருட்களாகும்.
உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக
ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும். நுரையீரல்
மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு,
கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான
தாது உப்புக்களும் உள்ளது.
இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின்
வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும்
உதவும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. இலைகளை நாம் தின்ன இயலாது.அதை வெறு வழிகளில் பயன்படுத்தலாம்.
100 கிராம்
புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே,
பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------