பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!
"முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வந்தால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். விடிவு காலம் பிறக்கும். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைப்பார் என டெல்லியில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் சொல்கின்றன. முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா அந்த அளவுக்கு செல்வாக்குடன் விளங்குகிறார். "
-இது தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேச்சு.
தமிழ் நாட்டில் உள்ள மின்வெட்டு பிரச்னையை தீர்க்க முடியாமல் விழி பிதுங்கி போயுள்ளவர் இந்திய பிரச்னைகளை எல்லாம் தீர்த்து விடுவாராமா?
ஓ .பன்னீர்செல்வம் டெல்லியில் எந்த பத்திரிக்கையை படித்துவிட்டு சொல்லுகிறார்.அங்கு போயும் "நமது எம்ஜிஆரை "மட்டும் படித்து விட்டு இப்படி எல்லாம் பொதுக்கூட்ட மேடையில் கூச்சம் இல்லாமல் பேசுகிறாரோ?
இதை விட அம்மாவிடம் பாராட்டு பெற இப்படியும் பேசியுள்ளார்.
"முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர். 11 ஆண்டுகள்தான் முதல்வராக இருந்தார். முதல்வர் ஜெயலலிதாவோ 12 வது ஆண்டாக முதல்வரா இருக்கிறார். நல்லாட்சி தருகிறார்"
அம்மாவின் புகழ் பாட தங்கள் கட்சியை ஆரம்பித்து காபிக்கடைக்காரர்கள் எல்லாம் முதல்வராக சில காலம் இருக்க வழி தந்தவரையே குத்திக்காட்டும் பெரும்தன்மை வாழ்க.
எம்ஜிஆர் 11 ஆண்டுகளுக்குப்பின் முதல்வராக இறந்து விட்டார்.உயிருடன் இருந்தால் நிலைமை மாறியிருக்கும்,இவர் துதிக்கும் அம்மாவும் தேடி பார்க்க வேண்டிய நிலையில்தான் இருந்திருப்பார்கள்.இவரோ காப்பி ஆற்றியபடி வந்தவர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்திருப்பார்
--------------------------------------------------------------
பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசால் வழங்கப்படும் மானியங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக உள்ளது. புதுடில்லியில் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித்
"நான்கு பேர் கொண்ட ஏழை குடும்பம் ஒன்றிற்கான ஒரு மாத உணவுத்தேவையை சமாளிக்க ரொட்டி ,பருப்பு போன்றவை வாங்குவதற்கு ரூ.600 போதுமானது"
என பொருளாதார குறிப்பை புள்ளி விபரமில்லாமல் பேசி மக்களை அதிர வைத்துள்ளார்.
காங்க்கிரசார்களுக்கு என்ன ஆயிற்று .
கடைகளில் சென்று சாமான்கள் வாங்கி வந்தால் தானே அவர்களுக்கு நாட்டின் விலைவாசி புரியும்.மக்கள் துன்பம் தெரியும்.
எல்லாவற்றையும் அந்நியர்களிடமும் ,தனியாரிடும் கொடுத்து விட்டு லட்சக் கோடிகளில் பணத்தை முறை கேடாக சம்பாதித்தவர்களுக்கு இந்திய மக்களின் வாழ்வு முறை எப்படி தெரியும்.?
மக்களை தெரியாவிட்டாலும் பரவாயில்லை.தங்கள் வாயை திறக்காமல் இருந்தாலே போதும்.
முதலில் இவர் தனது குடும்ப மாத செலவை கணக்கிடட்டும்.
இது அதிமுக புது வரவு நாஞ்சில் சம்பத்தின் பேச்சு:
"கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன். இனி எதையும் சாதிக்கப் போவதில்லை என ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.
[கொஞ்சம் முன்பு வந்திருந்தால் கார் ,40 வழக்குகளில் விடுவிப்பு,கூட்டத்துக்கு 30000 கிடைத்திருக்குமா?]
2001-06 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 500 மெகாவாட் உபரியாக இருந்தது. அதை பிற மாநிலங்களுக்கு விற்று அந்தப் பணத்தை சேர்த்தவர் ஜெயலலிதா.
2006- 11-ல் ஆட்சியில் இருந்த கருணாநிதியால், மின் வாரியத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கருணாநிதி 5 ஆண்டுகளில் கூடுதலாக உற்பத்தி செய்தது 360 மெகாவாட் மின்சாரம் மட்டுமே.
முதல்வர் ஜெயலலிதாவால் 3300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த பணிகள் எங்கே அறிவிக்கப் பட்டது?எங்கே நடந்து கொண்டிருக்கிறது .அவை என்ன திட்டங்கள் என்று ஏன் சம்பத்தார் குறிப்பிடவில்லை?
அப்படி ஏதாவது திட்டம் அறிவிக்கப் பட்டிருந்தால் தானே சொல்வார்.
நமக்கும் 3300 மெகாவாட் திட்ட அறிவிப்பு பற்றி முதலவர் தெரிவித்ததாக ,அது பத்திரிக்கைகளில் வந்ததாக தெரியவில்லை.
நாஞ்சில் சம்பத்திடம் கார் சாவியை கொடுக்கும் பொது சொல்லியிருக்கலாம் .
கருணாநிதி போட்ட திட்டங்களை கூட குப்பையில் போட்டுவிட்டார்.உடன்குடி திட்டத்தை தமிழக அரசே நடத்தும் என்றும் அதற்கு 800 கோடிகள் தருவதாகவும் சொல்லி ஓராண்டாகிறது .இதுவரை நிதி ஒதுக் கீடே செய்யப்படவில்லை.நடந்த பணிகளும் நிறுத்தப்பட்டு நிலமெல்லாம் உடை மரம் வளர்ந்துள்ளது.
அது சரி நாஞ்சிலாரெ மதிமுகவினர் வழங்கிய வீடு,கார் எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விட்டீரா?
கருப்பு துண்டு காணோமே.துவைத்தது இன்னமும் காய வில்லையா?
இது அண்ணன் ரஜினி :
"1996ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, சில கருத்துக்களை நான்
தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்துக்கு உதவியது.
தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல்
தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.
1996
தேர்தல்ல, நீங்க,சொல்லி தான், தமிழகத்துல ஆட்சி மாற்றம்
நடந்துன்னு சொல்வது சரி அல்ல.இப்பொது அதிமுக வந்ததற்கு திமுக மீதான கோபம்போல் அப்போது அதிமுக மீதான மக்கள் கோபம் தான் காரணம் .குமரி முத்து தேர்தல் வேலை செய்தார்.ஆனால் அவர் தன்னால்தான் என்று சொல்லவே இல்லை.1996 தேர்தலில் உங்கள் வாய்ஸ் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் .
2004 லோக்சபா தேர்தல்ல, பா.ம.க., போட்டியிட்ட, ஆறு தொகுதிகள் அந்த கட்சியை தோற்க நீங்க செஞ்ச வேலை எடுபடலையே?பாஜக ,அதிமுகவுக்கு நீங்கள் ஆதரவாக சொல்லியும் ,நீங்கள் வாக்களிக்கும்பொது இரு விரலை காட்டியும் கூட 40-40 உங்கள் எதிர் கோஷ்டிதான் வென்றது.உங்கள் அறிக்கை என்னவானது?
--------------------------------------------------------------------------------------------------------------