சில பலாத்கார சிந்தனைகள்.



டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம்தான் இன்றைய முக்கிய தலைப்பு செய்தி.அந்நிய சில்லறை வர்த்தக அனுமதி ,லோக்பால்,நிலக்கரி  முறைகேடு போன்றவை பின் வாங்கி பொய் விட்டது.
டெல்லியில்  கற்பழிப்புகள் இதற்கு முன் நடக்கவே இல்லாதது போலும் அல்லது அடிக்கடி நடப்பதை தடுக்ககோரியும் நடப்பது போல் போராட்டக்காரகள் கோரிக்கைகள் வைத்தது போல் தெரியவில்லை.
ஏதோ எல்லோரும் பரபரப்பாக போகிறார்கள் நாமும் போய் போராடுவோம் என்பது போல் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த போராட்டம் நடப்பதில் இருந்து ஒன்று மட்டும் நன்கு புரிகிறது.இன்றைய நடுத்தர வர்க்கம் ஆட்சியாளர்கள் மீது கடுங் கோபத்தில் இருக்கிறர்கள்.அவர்கள் பிரதமர்,குடியரசுத்தலைவர் நாட்டின் சீரழிவுக்கு துணை போவதாக எண்ணுகிறார்கள்.
அதற்கு இது பொன்ற போராட்டங்களை வடிகாலாக வைத்துக்கொள்கிறார்கள்.
suran
இல்லை என்றால் ஒரு கற்பழிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பிரதமர்,குடியரசுத்தலைவர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டு கடுமையான தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணம் வேறு என்னவாக இருக்கும்.அவர்களா கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

ஒட்டு மொத்த இளைய,நடுத்தர வர்க்கம் இன்றைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் மக்களவையில் இரட்டை வேடம் பூட்டும் எதிர்கட்சிகள் மீதான கோபம் உள்ளூர கொதி நிலையில் இருப்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.
கற்பழிப்புக்கு பரிகாரம் என்பது அடுத்த கட்டம்தான்.
இந்த போராட்ட உணரவுகளை சில்லறை வணிகத்தில்  அனுமதி ,வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பது,180000கோடிகள் தனியார் முதலாளிகளுக்கு வரி விலக்கு ,விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் காட்டியிருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் இந்த ஆளுங்கட்சியினர் தங்கள் நாட்டை சீரழிக்கும் திட்டங்களில்கொஞ்சம் தயக்கம் காட்டியிருப்பார்கள்.
suran
அன்னாகசாரே யின் ஊழல் ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக குவிந்தனர்.ஆனால் அவரோ தனது வழித்திட்டத்தை குழப்பத்தின் மொத்த வடிவாக உருவாக்கி இந்த வர்க்கத்தின் நம்பிக்கையை பொய்த்து விட்டார்.
மொத்தத்தில் டெல்லி போராட்டம் வெறும் கற்பழிப்பு சம்பவத்துக்காக மட்டும் நடக்கும் போராட்டம் என்று நம்பமுடியவில்லை.மக்களின் பல்வெறு விடயங்களில் அரசுக்கு எதிரான குமுறலின் வடிவம்தான் இது.
 மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது.இந்த போராட்டத்தை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்பழிப்பு வழக்குகளுக்கு தூக்கு உடனேயே வழங்க வெண்டும் என்கிறார்கள்.
டெல்லி கற்பழிப்பு குற்றவாளி கூறிய சில வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும்.
suran
'இந்த குற்றத்துக்கு என்னை தூக்கில் போடுங்கள் .இந்த இரவில் வேறு ஆணுடன் தனியே சுற்றி வருவதுடன் நாங்கள் பேருந்தில் வர கூப்பிட்டதுடன் வரும் பெண் நல்லவளாக இருக்க மாட்டாள் என்றே நினைத்தோம்.மேலும் இந்த இரவில் எங்கே தனியே பொய்வருகிறீர்கள் என்று கேட்டதற்கு 'அதைப்பற்றி எதற்கு சொல்லவேண்டும்.என்று திமிராக பேசியதும்தான் எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது."
-என்று அவன் கூறியுள்ளான்.இந்த் எண்ணம் உருவாக அந்த பெண்ணும் ஒருவகையில் காரணமாகி விட்டாள்.
ஆ னால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  பள்ளி மாணவி கற்பழிப்பு மிகக்கொடுரமானது.வழக்கமாக கூட்டமாக செல்லும் மாணவி தேர்வுக்காக தனியே ரெயில் நிலையம் போக ஒற்றையடி பாதையில் செல்லும் போது கொடுரனால் மிகக்கொடுரமாக கற்பழிக்கப்பட்டு அவளின் துப்பட்டாவினாலேயே கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளாள்.நிச்சயம் இந்த திட்டமிடப்பட்ட பலாத்தகாரத்துக்கு தூக்கு அவசியம்.
டெல்லி,தூத்துக்குடி சிறுமி கற்பழிப்புகளுக்கு வேண்டுமானால் விசாரித்து தூக்கு தண்டனை வழங்கலாம் .
ஆனால் கற்பழிப்பு என்ற புகார்களுக்கெல்லாம் வழங்குவது சரியாகாது.
காரணம் காதலித்து அல்லது கள்ளக்காதல் வைத்திருக்கும் சில பெண்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டால் ஆண் தன்னை கற்பழித்துவிட்டதாக திசையை திருப்பி தன்னை கண்ணகியாக்கிக் கொள்கிறார்கள்.
ஆண் மட்டுமே குற்றவாளியாகிவிடுகிறான்.இது போன்ற கூட்டு களவாணித்தனத்துக்கு ஆணுக்கு தூக்கு சரிவருமா?பெண் குற்றவாளிக்கு தண்டனை என்ன?
பாரதி கூறியதுபொல் கற்பென்பதை பொதுவில் வைப்போம்.
suran
ஆண்கள் எல்லோருமேசமயம் கிடைத்தால்  கற்பழிப்பு எண்ணத்துடன் இருப்பது போல் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது அதை மாற்றிக்கொள்ள வேண்டும் .சமயம் கிடைத்தால் பெண்களிலும்  சிலர் அப்படித்தான் இருக்கிறா ர்கள்.ஆனால் மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள் மட்டுமே.இங்கு பெண் பாவம் சட்டத்தின் கண்ணை மறைத்து விடுகிறது.
இப்போது காவல்துறையினர் நகர ரோந்து வராததினாலும்,ஆட்சியாளர்களின் ஏவல் வேலைகளை மட்டும் செய்து கொண்டிரூப்பதால்தான்  இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன.
இது போன்ற பாலியல்,கொலை,கொள்ளைகளுக்கு மூலக்காரணம் காவல்துறையின் செயல்பாடுகள் சரிவர இல்லாததுதான்.
suran
அவர்கள் குற்றம் வந்தபின் வந்து பார்க்கவந்தவர்களிடம் தங்கள் வீரத்தை காட்டாமல்.
அவ்வப்போது நகர ரோந்து,சிறிய ரவுடியாக உருவெடுக்கும் போதே தலையில் தட்டி வைப்பது கட்சிக்காரர்களின் சொல்படி கண்டு கொள்ளாமல் இருப்பதை விட்டு விட்டால் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்துவிடும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?