நன்கொடை
நாட்டில் உள்ள 10 முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2
ஆயிரத்து 490 கோடிக்கு வரிவிலக்குடன் கூடிய நன்கொடை கிடைத்துள்ளது. இதில்
80 சதவீதம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சிக்கு கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ரூ.1385 கோடியே 36 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. பா.ஜ கட்சிக்கு ரூ.682 கோடி கிடைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.15.51 கோடி கிடைத்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.147.18 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.141.34 கோடி கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 85.61 கோடி கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.28.47 கோடி கிடைத்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7.16 கோடி கிடைத்துள்ளது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.55 கோடி கிடைத்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.85 கோடி கிடைத்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் குறைவான நன்கொடை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் அரசியல் கட்சிகளின் வருமானம் மேலும் பல ஆயிரம் கோடியாக இருக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு .
ரூ.20
ஆயிரத்துக்கும் மேல் அளிக்கப்படும் நன்கொடைகளை ஒவ்வொரு கட்சிகளும் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும் என்பது விதி.
மேற்கண்ட விபரங்கள் அரியானா ஹிசார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர், தகவல்
அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருமானவரித்துறையிடம் கேட்டு பெற்ற தகவல்கள்.._____________________________________________________________________________________________
வரலாறை மறந்தவர் அல்லது மறைத்தவர்.
====================================
""தமிழக சட்டசபை வைர விழாவில் பேசிய கவர்னர் ரோசையா, எனது பெயரை சொல்ல மறந்திருக்கலாம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
:தமிழக சட்டசபை வைர விழாவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு என, மாநிலத்தின் பெயர், 1968ல் மாற்றப்பட்டது எனக் குறிப்பிட்டார். ஆனால், அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்த, அப்போதைய முதல்வர் அண்ணாதுரையின் பெயரை குறிப்பிடவில்லை.
அவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழ்நாடு என பெயர் சூட்டியது அண்ணாதுரை தான் என, தெளிவாகக் குறிப்பிட்டார்.
அண்ணாதுரையின் பெயரை கூ ற மறந்துவிட்டாரா இல்லை கூறக்கூடாது என, ஜெயலலிதா விட்டுவிட்டாரா? என தெரியவில்லை.
கவர்னர் ரோசையா பேசுகையில், முதல்வராகப் பணியாற்றியவர்கள் பெயரை வரிசையாகக் கூறினஆனால் 5முறை முதல்வராக இருந்த என் பெயரை கூறவில்லை. அவர் ஏன் மறந்தார்
என்று தெரியவில்லை என்றும் வருந்தியுள்ளார்.
கருணாநிதியின் வருத்தம் சரியானதுதான்.
ஆளுநர் ரோசையா ஏன் கருணாநிதியின் பெயரை சொல்லவில்லை?அவர் ஜெ கட்சி ஆள் இல்லையே.அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவூம் என்ற பயம் அவருக்கு வர வேண்டியதில்லையே ?
முதல்வர்கள் பெயரை சொல்லும் போது கருணாநிதி பெயரை மறந்து விட்டார் என்றால் அது சரியான மரபில்லை.அது அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு அழகில்லை.சொல்லப் போனால் அது அவர் வகிக்கும் பதவிக்கு அவர் சரியானவர் அல்ல என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.
கருணாநிதி பெயர் தமிழக வரலாற்றில் நல்லவிதமாகவும்-அல்லாததாகவும் பதிவாகியுள்ள
மறக்க முடியாத,மறக்கக் கூடாத பெயர்.
60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்.இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியை காணாதவர்.
5 முறை முதல்வராக இருந்தவர்.இன்னமும் இருக்கப்போகும் கனவுகளுக்கு சொந்தக்காரர்.
சில முறை ஆட்சி கலைப்பில் சிக்கியவர்.
ராஜாஜி முதல் இன்றைய விஜய் வரை அரசியல் செய்து வரும் அரசியல் சாணக்கியர்.
அவரை ஆந்திராவில் இருந்து வந்தது ஆளுநர் பதவி வகிப்பவர் மறந்து விட்டார் என்றால்.அது தமிழக அரசியல் -ஆண்டவர்கள் தெரியாத அவர் இன்னமும் இங்கு பதவி வகிப்பது சரியாகுமா?
ஆட்சியில் உள்ளவர்கள் எழுதிக்கொடுத்ததை அப்படியே படிப்பதற்கும்,கையெழுத்திடவும்
" ஆட்டுக்கு தாடி போன்ற 'உவமானத்துக்கு சொந்தமான பதவி தேவைதானா?என்பதையே
இங்கு நாமும் யோசிக்க வேண்டியதுள்ளது .
ஆமாம் இந்த ஆளுநர் பதவி என்பது எதற்கு?மேல் சபையை ஒழித்தது போல் இதையும் கைவித்தூ விடலாமே.
மத்தியில் ஆளுங்கட்சிக் காரர்களை அமர்த்த ,மாநில ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க மட்டும்தான் இந்த பதவி பயன் படுகிறது.
அதை குடியரசுத்தலைவர் சேர்த்து பார்த்துக்கொள்ள மாட்டாரா என்ன?
அவர் போரடித்து வெளி நாடுகள் சுற்றுப்பயணம் போவது குறையுமே.நாட்டுக்கு பொருளாதார அளவிலும் சிக்கனமாயிற் றே ?
_____________________________________________________________________________________