இல்லாதவர்கள்

ஒரு பக்கம் மக்களுக்கான மானியங்கள் வெட்டு.அரசின் எல்லா சேவை வகைகளுக்கும் சேவை வரை.
நியாய விலை கடைகளை-குடும்ப அட்டைகளை மூடிவிட முதல் கட்டமாக மானியங்களை பொருட்களின் விலையில் கழிக்காமல் தனியே வழங்கும் திட்டம் என வாக்களித்த நடுத்தர,ஏழை மக்களை மத்திய அரசு கசக்கிப்பிழிகிறது.
மறு பக்கம் வாக்குசாவடி பக்கமே வராத கூட்டத்துக்கு வரி சலுகைகள் ,தனியார் மாயம்,அரசு நிறுவனங்கல் பங்குகளை விற்றல் ,பிணம் எரிப்பது வரை அந்நிய முதலீடு ,அம்பானி,எஸ்ஸார்,டாடா ,பிர்லா,வகையறாக்களுக்கு 1,30,000/-கொடிகள் வரை விலக்கு என புதிய பொருளாதாரபுலிகள் இந்தியாவை சின்னா பின்னமாக்கி வருகின்றனர்.இந்தியாவில் ஏழைகளுக்கு ம் -பணக்காரர்களுக்குமான  பொருளாதார இடைவெளி மிக அதிகமாகி விட்டதாக அரசின் புள்ளி விபரங்களே கூறுகின்றன.அம்பானி  மாளிகை விலை என்ன என்று தெரியும்தானே ?
அதே இந்தியாவில்  வீதியில் கோணிப்பையில் குடித்தனம் நடத்தும் கூட்டம்  உள்ளது என்பதையும் லட்சம் கோடிகளில் முறைகீடுகள் புரியும் நமது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆனால் அவர்களோ ஒரு நாள் குடும்பத்துக்கு 35 ரூபாய் போதும் .600 ரூபாயில் அட்டகாசமாக குடும்பம் நடத்தலாம் என்று மக்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.இந்த கும்பல்தான் பயணிகள் விமானத்தில் எக்னாமிக் வகுப்பில் வருவதை கால்நடைகளுடன் வர என்னால் முடியாது என்றவர்களை கொண்ட அமைச்சரவை வைத்திருக்கிறது.
அவர்கள காணாத இந்தியாவின் உண்மை முகம்தான் கீழ்காணும் படங்கள்.
இதை அவர்கள் பார்க்கப்போவதில்லைதான்.

 


 
வருவது வரி விலக்கை அள்ளி பெற்ற சாமானியர்களின் குடிசைகள் 
அம்பானி  ,அமைச்சர்கள் ,மக்கள் தொண்டர்களின் குடிசைகள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?