ஜனவரி -முக்கிய நிகழ்வுகள்

1-1-1862 - , நீக்ரோ மக்களுக்கு விடுதலை அளித்தார்.
1-1-1862 - மணியார்டர் (பணவிடை) அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.
1-1-1942 - ஐ.நா.சபை அமைக்கப்பட்டது.
1-1-1923 - சோவியத் குடியரசு தோன்றியது.
1-1-1901 - ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்றது.
1-1-1985 - லண்டனில் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.
2-1-2012 - தமிழகத்தில் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டது.
3-1-1968 - இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

10-1-1610 - கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை விஞ்ஞானப்பூர்வமாக வெளியிட்டார்.

14-1-1969 - தமிழ்நாடாக சென்னை மாநிலம் பெயர் மாற்றம் பெற்றது.

24-1-1966 - இந்திரா காந்தி பாரதப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
26-1-1929 - சுதந்திரம் பெற்றதும் குடியரசு தினமாகத் தேர்வு செய்தனர்.
26-1-1950 - இந்திய குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.
30-1-1948 -  காந்தி  கொல்லப்பட்டார்.
முக்கிய தினங்கள்

1. ஆங்கிலப் புத்தாண்டு
4. டென்மார்க் சுதந்திர தினம்
12. தேசிய இளைஞர் தினம்
15. ராணுவ தினம்
16. திருவள்ளுவர் தினம்
25. தேசிய வாக்காளர் தினம்
26. இந்தியக் குடியரசு தினம்
26. ஆஸ்திரேலியா சுதந்திர தினம்
30 தியாகிகள் தினம்
30. காந்திஜி நினைவு நாள்
30. தொழுநோய் ஒழிப்பு தினம்
பிரபல பிறந்த தினங்கள்

1-1-1578 வில்லியம் ஹார்வி - இதய ஆராய்ச்சியாளர்
1-1-1894 சத்தியேந்தரநாத் போஸ் - இந்திய விஞ்ஞானி
4-1-1892 ஜே.சி.குமரப்பா - சுதந்திரப் போராட்ட வீரர்
10-1-1896 சலீம் அலி - பறவைகள் ஆராய்ச்சியாளர்
10-1-1931 ஆர்.சூடாமணி - பெண் எழுத்தாளர்
11-1-1973 ராகுல் திராவிட் - இந்தியக் கிரிக்கெட் வீரர்
12-1-1863 சுவாமி விவேகானந்தர், சமயத் துறவி
13-1-1949 ராகேஷ் சர்மா - இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
15-1-1821 ஜான் பென்னி குவிக் - முல்லைப் பெரியாறு
 அணை கட்டிய பொறியாளர்
16-1-1412 ஜோன் ஆஃப் ஆர்க் -
17-1-1917 எம்.ஜி.ராமச்சந்திரன் - தமிழக முன்னாள் முதல்வர்
18-11912 நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்
23-1-1897 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்

27-1-1926 வைத்யா - இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி
27-1-1935 கோமல் சுவாமிநாதன் - நாடக ஆசிரியர்
30-1-1910 சி.சுப்ரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்
30-1-1882 ரூஸ்வெல்ட் - அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்
நினைவு தினங்கள்

4-1-1974 ஜி.டி.நாயுடு - தமிழக விஞ்ஞானி
6-1-1847 தியாகராஜர் - மும்மூர்த்திகளில் ஒருவர், இசையறிஞர்
8-1-1994 காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார் - துறவி
8-1-1642 கலிலியோ - தொலைநோக்கி கண்டுபிடித்த விஞ்ஞானி
11-1-1932 திருப்பூர் குமரன் - கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர்
11-1-1966 லால் பகதூர் சாஸ்திரி - முன்னாள் பாரதப் பிரதமர்
16-1 1954 பாபுராவ் பெயிண்டர் - புதிய வகை கேமரா கண்டுபிடித்த வ ர்
17-1-2010 ஜோதிபாசு - மேற்கு வங்க முன்னாள் முதல்வர்
18-1- 1963 ப.ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட் தலைவர்
21-1-1924 லெனின் - ரஷ்ய குடியரசுத் தலைவர்
26-1-1823 எட்வர்ட் ஜென்னர் - பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்தவர்
27-1- 2009 ஆர்.வெங்கட்ராமன் - இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்
30-1-1874 ராமலிங்க அடிகளார் -
30-1-1948 காந்தி -
------------------------------------------------------------------------
ஆலோசகர்  ?
 ==========
2011 மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,தேவேந்திரநாத் சாரங்கி  தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து 31.12.2012 திங்கள்கிழமை மாலை அவர் ஓய்வு பெற்றார்.
அவரை அதே பணியில் நீடிக்க வைக்க மத்திய அரசிடம் ஜெயலலிதா அனுமதி கேட்டார் .ஆனால் மத்திய அரசு தனது புதிய கொள்கைபடி வழங்க முடியாது என்று மறுத்து விட்டது.
ஆனால் ஜெயலலிதா விடுவாரா?

 தமிழக அரசின் ஆலோசகராக தாற்காலிக அடிப்படையில் ஓராண்டுக்கு அவர் திங்கள்கிழமை நியமித்துவிட்டார்.
முன்பு 1989-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் தனது ஆலோசகராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ். குகனை நியமனம் செய்திருந்தார்.
தேவேந்திரநாத் சாரங்கிக்கும் அதே பதவி தலைமைச் செயலர் அந்தஸ்தில் இப்போது வழங்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அவர் ஆலோசனைகளை வழங்குவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இவரின் ஆலோசனைகள் தமிழ் நாட்டுக்கு நல்லவிதமாக அமையும் என்று தெரியவில்லை.இவரின் பதவி காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசை தவறான வழிக்கே கொண்டு சென்றுள்ளது.
தனது சுலாபத்திற்காக அதிகாரிகள் மீது தவறான நடவடிக்கைகளை எடுத்து நீதிமன்றத்தில் அரசுக்கு கொட்டு வாங்கிக்கொடுத்த்வர் இவர்.மின் பிரச்னைக்கு இவர் எந்த தீர்வையும் உருப்படியாக தனது ஆலோ சனையாக கூறவில்லை.
ஆனால் ஜெயலலிதாவுக்கு பக்க வாத்தியமாக நல்ல முறையில் செயல்படுவதாக தெரிகிறது.அதுதானே இப்போதைய தகுதி.தேவை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வருங்கால பிரதமர்?

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டத்தில்  பேசிய ஜெயலலிதா
", எம்ஜிஆர் காலத்தில் கட்சியில் இருந்த நிதி ரூ.1 லட்சம், இன்று கட்சியின் நிதி ரூ.118 கோடி.
அப்போது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம். தற்போது உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம்.
மேலும் ஜெயலலிதா பேசுகையில், காலம் நமக்கு கனிந்து வந்துள்ளது. வரலாறு நமக்கு வழிவிட்டிருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் காங்கிரசுடனும் சேர முடியாது. பாஜகவுடனும் சேர முடியாது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அப்போது தான் நாம் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும். மேலும் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் "என்று பேசினார்.
 இவர் பிரதமராவதிலேயே குறியாயிருக்கிறார்.முதலில் இவரின் கனவுப்படி 40க்கு 40 கிடைக்கிறதா என்று பார்ப்போம்.சென்ற சட்டப்பேரவை தேர்தலில் மிருக பலம் அதிமுகவுக்கு கிடைத்தது இப்போதும் தொடருமா? 
இவற்றின் ஒன்றரை ஆண்டு ஆட்சி மக்களின் மனதில் என்ன விளைவுகளை தோன்றியிருக்க செய்துள்ளது என தெரிய வெண்டாமா?
விலைவாசிகளை கூட்டாமலெயெ,பேருந்து-பால் விலைகளை கூட்டாமலெயெ சாதிக்கலவரங்கள் இல்லாமல் ஆட்சி நடத்திய இவரின் முன்னவர் கருணாநிதிக்கு  சாதாரண இரண்டு மணி நேர மின்தடை  ஆட்சியில் மட்டுமல்ல-எதிர்கட்சி தலைவராக கூட அமர  தடை விதித்து விட்டதே.அது இவரி 18 மணி நேர சாதனைக்கு ஏதாவது பரிசு தராமாலா போய்விடும்.
ஆனால் ஜெயலலிதா  புத்திசாலி[என்று நினைக்கிறேன்]தேர்தல் நேரம் மட்டும் மின் தடையை மக்கள் மனதில் இருந்தும் தமிழகத்திலும் நீக்கிவிட்டால் போதும் வாக்குகளை அள்ளி விடலாம் .மக்கள் எப்போதும் ஏமாந்தவர்கள்தானே ?
_____________________________________________________________________________________________________________
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?