போலி கால்சென்டர்கள் 10 ஆயிரம்  

 ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த இளைஞர் கள் தாங்கள் வேலை செய் யத்தேர்ந்தெடுக்கும் முதல் இடம் கால்சென்டர்கள்.
 வெளிநாடுகளிலோ அல் லது உள்நாடுகளிலோ இருக் கும் சில பெரும் நிறுவனங்க ளின் பொருட்கள் குறித்து அல்லது வாடிக்கையாளர்க ளுக்குத் தேவையான தகவல் களை வழங்கும் பணியை கால்சென்டர்கள் செய்து வருகின்றன.
 இந்தியாவின் பெருநகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைத ராபாத், சென்னை உள் ளிட்ட நகரங்களில் ஏராள மான கால்சென்டர்கள் இயங்கி வருகின்றன. 
நல்ல சம்பளம், வாரம் இரண்டு நாள் விடுமுறை, வார இறுதி நாட்களில் கேளிக்கை என்ற சொகுசு வாழ்க்கை இருப்ப தால் இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த கால்சென்டர்களில் பணி யாற்றவே முன்னுரிமைய ளிக்கின்றனர்.
 இந்நிலையில், டெல்லியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கால்சென் டர்களில் சுமார் 10 ஆயிரம் கால்சென்டர்கள் போலியா னவை என்பது டெல்லி போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. 
இந்த கால்சென்டர்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகள் உள்நாடு மற் றும் வெளிநாட்டிற்கு செய் யப்படுகின்றன. 
இந்த கால் சென்டர்கள் முறையாக பதிவு செய்யப்படாதவை. மேலும் சில நிறுவனங்கள் வேலைக்கு வருவோர்களிடம் காப்புப் பணத்தை பெற்று, சிறிது காலத்திற்குப் பிறகு அவற்றை சுருட்டிச் செல் லும் நிலையும் உள்ளது.
 இந்த நிறுவனங்கள் கணக் கில் கட்டாத கோடிக்க ணக்கான பணத்தையும் வைத்திருப்பதாக போலீ சார் தெரிவிக்கின்றனர். 
இது போன்ற போலி கால் செண்டர் நடத்திய  ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?