அந்த 18 வது மனிதன்

------------------------- 
இது இந்தியர்கள் பெருமைப்படும் மிகப்பெரிய விடயம்.
நகர் புறத்தில் 35 ரூபாயிலும் ,கிராமங்களில் 28 ரூபாயிலும் வாழ்ந்தால் அவர்கள் வசதி படைத்தவர்கள் என்று நிரணயிக்கப்பட்ட இந்தியாவில் 24.7 பில்லியன் டாலர்களுடன் ஒருவர் 18 வதாக உலகிலேயே இருப்பது சாமாநியப்பட்டதா?
600 ரூபாயில் ஒரு குடும்பத்தையே நடத்தி விடலாம் என்று அறிவுரை கூறப்படும் தேசத்தில் இது எம்மாம் பெரிய சாதனை .
தனது அனல் மின் நிலையத்துக்கு பிரதமரின் துறையான நிலக்கரித்துறையையெ கொள்ளையிட்டு முறைகீடு செய்து லட்சம் கொடிகள்,கேஜி படுகை பெட்ரோல்,எரிவாயு முறைகேடுகளில் பல லட்சம் கோடி,ரிலையன்ஸ் செல்பேசியில் வெளினாட்டு அழைப்புகளை உள்னாட்டு அழைப்பாக நாட்டை எமாற்றியதி 1400 கோடிகள் இது பொன்ற பல்வெறு வகைகளில் வருமானம் செய்ததில்தான் அம்பானி இப்படி 18ஆக உயர்ந்துள்ளார்.
இவர் சாதனையை இவர் மட்டுமே மன்மோகன் ,சிதம்பரம்,சோனியா காங்கிரசு இல்லாவிட்டால் செய்திருக்க முடியுமா?அது போக இந்த அம்பானி வகையறாக்களுக்கு13,800 லட்சம் கோடி [எத்தனை முட்டை போடனும்?]வரியை தள்ளுபடி செய்து இது போன்று உச்சத்தில் வைத்து இந்திய நாட்டின் பெருமையை உலகிற்கு உயர்த்தி பிடித்த மன்மூகன்,சிதம்பரம் கூட்டத்துக்கு நியாய விலைக்கடையில் வரிசையில் நிற்கும் பாமரனின் வாழ்த்துக்கள்.
விடயம் இதுதாங்க, 2012-ஆம் ஆண்டில்  உலகின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை வணிக  பத்திரிகையான "ஃபுளூம்பெர்க்' வெளியிட்டுள்ளது.

இதில், 2011-ஆம் ஆண்டைப் போலவே இப்போதும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை மெக்ஸிகோவின் தொலைத்தொடர்புத்துறை நிறுவனத் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், ஆடை அலங்கார நிறுவனமான ஜாராவின் தலைவர் அமான்சியோ ஓர்டேகா, பிரபல முதலீட்டாளர் வாரன் ஃபபெட் ஆகியோர் பிடித்துள்ளனர்.
 ஐ.கே.இ.ஏ. நிறுவனத்தின் நிறுவனர் இங்வார் கம்ப்ராட் 5-ஆவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இப்பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 24.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2011-ஆம் ஆண்டு 21 பில்லியனுடன் 19-ஆவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, இப்போது ஓரிடம் முன்னேறி 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 6 ஆண்டுகளா உலகின் மிகப்பெரிய இந்தியப் பணக்காரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2011-ஆம் ஆண்டைவிட 2012-ஆம் ஆண்டு 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக "ஃபுளூம்பெர்க்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வயித்தெரிச்சல் போதாது என்று  இது வேறு -_
சவுதி அரேபியா இளவரசருக்கு ரூ.2770 கோடி செலவில் அரண்மனை வடிவில்  விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 எண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் தலால். இவர் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய  கோடீசுவரர் ஆவார்.
suran
இவர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதை அரண்மனை போன்று சகல வசதிகளுடன் மிக பிரமாண்டமாக மாற்றியமைத்து வருகிறார். அதற்கான செலவு ரூ.2770 கோடி. 
இதை பறக்கும் அரண்மனை என்று அழைக்கின்றனர்.
இந்த விமானம் கடந்த 2009-ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டு அரண்மனை போன்று மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு (2013) டெலிவரி எடுக்கப்படுகிறது. 
பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன.
_____________________________________________________________________________
 fox brothers

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?