நல்லுறவுக்கு 205 கோடிகள்,



 பிரதிபா பாட்டில் .நமது முன்னாள் குடியரசுத் தலைவரை மறந்திருக்க மாட்டீர்கள்.தனது உலகளாவிய பயணத்தினால் இந்திய மக்களின்  வரிப்பணத்தில் 205 கோடிகளை ஒரு வழி செய்தவர்.
அத்துடன் விடவில்லை .
இந்த சுற்றுப்பயணத்திலும்,பல்வெறு சந்திப்புகளிலும் இந்திய குடியரசுத் தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட பல கொடிகள் பெறுமான அன்பளிப்பு-பரிசுப் பொருட்களை பதவி காலம் முடி ந்ததும் இதுவரை எந்த கு.த-,வும் செய்யாத மாதிரியில் தன்னுடன் மூட்டைக்கட்டி எடுத்து சென்றார்.பின் அது பிரச்னையை கிளப்பியதும் சில நாட்கள் தனது பங்களாவில் காட்சிக்கு வைத்து விட்டு திருப்பித்தருவதாக கூறினார்.
இன்றுவரை தரவில்லை.
இவர் மகன் மும்பை தேர்தலில் காங்கிரசு வேட்பாளருக்காக தனது காரில் கோடிக்கணக்கில் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி மாட்டிக்கொண்டவர்.
பிரதிபா தனது பதவி காலம் முடிந்ததும் தான் குடியிருக்க டெல்லியில் விலை மதிப்பான் பகுதியில் ஏக்கர் கணக்கில் வீடு கட்ட இடம் கேட்டு அதுவும் கண்டனங்களை எழுப்பி,முறையான் செயல் அல்ல.என்று அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்படி தனது பதவி காலத்தை சுயநலத்துடன் செயல்பட்டு பெயரைக்கேடுத்துக் கொண்ட முதல் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இப்போதும் தனது சுற்றுப்பயண செலவிற்காக செய்திகளில் அடிபடுகிறார்.
குடும்பத்துடன் தனி ராணுவ விமானத்தில் சுற்றுப்பயணங்களை இதுவரை இருந்த கு.த,க்கள் யாரும் செல்லாத அளவில் அதிக முறைகள் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
பத்திரிக்கைகள் இது பற்றி கேட்டதற்கு 'தான் இந்தியாவுடன் மற்ற நாடுகள் நல்லுறவுடன் இருப்பது தொடர்பாக சென்று வந்ததாக" நகைச்சுவையுடன் கூறி னார் .
இப்போதுகடந்தாண்டு ஏப்., 29ம் தேதி முதல், மே, 8ம் தேதி வரை, தென் ஆப்ரிக்கா மற்றும் செசல்ஸ் தீவுகளில் பயணம் மேற்கொண்டார். 
இதற்காக, தனி ராணுவ விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.அதில் குடும்பத்துடன் சென்று வந்ததற்கு 18 கோடிகள் செலவாகியுள்ளதாம்.

குடும்பத்தினர் சென்ற விமானம்-பாதுகாப்பு  செலவு மட்டும், 16.38 கோடி ரூபாய்.மீதமுள்ள தொகை, இரண்டு நாடுகளில் தங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் செலவிடப்பட்டவை.

10 நாட்கள் சாப்பாடு போன்றவைகளுக்கு 1.62 கோடிகளா?

இந்த செலவு கணக்கு தகவல் உரிமை சட்டத்தின் படி கேட்டு அரசு கொடுத்த பதிலாகும்.
பிரதிபா பாட்டீல்  தனது பதவி காலத்தில்  பல முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். அவர் 22 நாடுகளுக்கு சென்றதில், 205 கோடி ரூபாய்கள்  அரசுக்கு  செலவானதாக பதில் வந்துள்ளது.

 எப்படியோ இந்தியாவுடன் அவர் அந்த நாடுகளை நல்லுறவுடன் வைத்து விட்டார்.
அதற்காகத்தானே தனது உடலைப் பாராமல் அரசின் செலவையும் பாராமல் குடும்பத்துடன் அத்தனை நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று வந்தார்.
________________________________________________________________________________________________
2012ல் அதிக பாடல்களை   எழுதிய நா.முத்துக்குமார்!  
 
தமிழ்த்திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி கவனத்தை ஈர்த்தவர்கள் ஏராளமானோர். தியாகராஜ பாகவதர் தொடங்கி கண்ணதாசன், வாலி, நாமக்கல் கவிஞர், வைரமுத்து என பாட
லாசிரியர்கள் மற்றும் கவிஞர்க ளின் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்
துள்ளது. 
அந்த வரிசையில் உணர்வுகளை பாடல்கள் மூலம் தெளிவாகக் கூறி வரு வோர் பட்டியலில் கவிஞர் நா. முத்துக்குமாருக் கென்று தனி இடம் உண்டு. அவர் திரையிசைக்க வந் தது முதல் சிறந்த பாடல்களைத் தந்து வருகிறார். இத னால் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்திரைப்படங்க ளுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்ற பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரு கிறார். 
2012ம் ஆண்டு வெளிவந்த படங்களில் 32 படங் களுக்கு மொத்தம் 103 பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.
உறவுகளின் உணர்வை எடுத்துக் கூறுவதாக இருந் தாலும் சரி காதலின் வலியை, இன்பத்தை கூறு வதாகவும் இருந்தாலும் சரி, நட்பின் ஆழத்தை புலப் படுத்துவதாக இருந்தாலும் சரி அனைத்து விதமான உணர்ச்சிகளையும் தனது பாடல் வரிகளால் ரசிகர்க ளின் மனதில் பதிந்து விடுகிறார்.
இசையமைப்பாளர்களின் இசைக்கு ஏற்பவும், இசையின்றி வெறும் வரிகள் வரும் பாடல்களையும் தனது வரிகளால் அலங்கரிக்கும் ஆற்றல் பெற்றவராக திகழ்கிறார்.
கடந்த ஆண்டு அவர் எழுதி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களின் வரி சையில், வழக்கு எண் 18/9, ஒரு கல் ஒரு கண்ணாடி, நீ தானே என் பொன்வசந்தம், வேட்டை, தாண்டம், நண்பன், மாற்றான் போன்ற படங்களும் அடங்கும். இது தவிர 70ற்கும் மேற்பட்ட படங்களுக்கு முழுப் பாடல்களையும், ஒரு சில பாடல்களையும் அவர் எழுதி வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?