காலாவதி..........,


suran

தாராபுரம் அம்பானி எண்ணை சுத்திகரிப்பு ஆலை ,லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கனவு  பகல் கனவுதான்.
கடலை வியாபாரி ராமலிங்கத்தின் அமெரிக்க பத்திரங்கள் போலி என்று தெரிகிறது.
ரூ 28,000கோடி கள்  புஸ்வானம்தான்.
இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து ஆயிரம் கோடி வாங்கித் தருவதாக ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திடம் கூறி, அதற்கு முன் பணமாக  ரூ.2 கோடியை பெற்றுள்ளார்.அப்படியே நண்பர் மூலம் அமெரிக்க வங்கி வெளியிட்டு காலாவதியான இந்த பத்திரங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு சிலரை இதை காட்டி ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.பிறரை ஏமாற்றும்  ஒரு வழிதான் இந்த எண்ணை சுத்திகரிப்பு ஆலை .
தொண்டி பக்கம் வருவதாக இடத்தை ராமலிங்கம் காட்டியுள்ளார்.அதிகாரிகள் அங்கு பதிவாளர் அலுவலகங்களில் அலைந்து ராமலிங்கம் குடும்பத்தில் உள்ள 18 பேர்களின் பெயரில் பத்திரங்கள் இடம் வாங்கியதில் உள்ளதா என்று கண்வலிக்க தேடியதுதான் மிச்சம்.
அப்படி ஒரு பெயர்கூட பத்திரப்பதிவில் இல்லை.
அங்குள்ள நில தரகர்களிடம் யாராவது அதிக அளவில் இடம் வாங்கி குவித்துள்ளா ர்களா?என்ற கேள்விக்கும் இல்லை பதில்தான் கிடைத்துள்ளது.
மொத்தத்தில் பரபரப்பான தாராபுரம் அம்பானி கதை விரைவிலேயே காமெடி கலாட்டாவாக முடிவுக்கு வந்து விடும் போல் தெரிகிறது.
தமிழ் நாட்டில் இருந்து அம்பானிக்கு போட்டியாக ஒருவர் வருவார் என்று எதிர்பார்த்து அது நடக்காமல் போனதில் நமக்கு கொஞ்சம் வருத்தம்தான். 
___________________________________________________________________________________

Adobe CS2 இலவசம்.
___________________________
மல்டிமீடியா மென்பொருள் வடிவமைப்பில் முன்னணியில் திகழும் Adobe நிறுவனம்  தனது Adobe CS2 இன் முழுமையான பதிப்புக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது.
Windows மற்றும் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு 2005ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட Photoshop CS2, Illustrator CS2, Adobe Premier Pro 2, InDesign CS2 போன்ற இப்பதிப்புக்களுக்கான Serial Number போன்றவற்றினையும் Adobe நிறுவனம் இலவசமாக தருகின்றது.

இவை Windows vista, Windows 7 ஆகிய இயங்குதளங்கள் அறிமுகப்படுத்த முன்னர் காணப்பட்ட Windows XP, Mac OS X v.10.3.8 ஆகியவற்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது அவற்றை பயன் படுத்துவோர் குறைந்து வருகிதால்  தனது CS2 பதிப்புக்களை இலவசமாக நிறுவனம் Adobe தந்து தனது நிலையை உறுதியாக்க முயல்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------
அல்லா 
--------
  மலேசியாவில் முஸ்லிம் இல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
malesiya
மலேசியாவின் செலாங்கர் மாநில இஸ்லாமிய விவகாரங்கள் கவுன்சில் செயலர் முகமது மிஸ்ரி இத்ரிஸ் அறிவித்திருப்பதாவது : 
" முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அந்த சொல் புனிதமானது. முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன சொல். அதை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது என்று கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கெசட்டில் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது."
என்றுள்ளார்.
இது மிகக்கொடுமையான செயல்.

   இது பற்றி கிறிஸ்தவர்கள் கூறுகையில்," பல நூற்றாண்டுகளாக பைபிளில் இடம்பெற்றுள்ள அல்லா என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். இப்போது தடை விதிப்பது சரியல்ல. " என்று தெரிவித்துள்ளனர்.
அல்லா என்பது ஆண்டவனை குறிக்கும் சொல்தானே .அதை உச்சரிக்க கூடாது என்பது சரியானதா?
ஏற்கனவே அல்லா,முகமது நபி என்று படங்கள் வரையக்கூடாது என்று இருக்கிறது.அதை விந்து விட்டு சிலர் பட்டப்பாட்டையும் மறக்கவில்லை.
அல்லா என்ற சொல்லை அவதூறாக ,அசிங்கமாக பயன்படுத்துவதை தடை செய்யலாம்.இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு சொல்லை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது என்பது கடைசியில் கலவரத்தில்தான் போய் முடியும்.அனைத்து மதங்களுமே மனிதர்களிடம் அன்பையும்-சமத்துவத்தையும்தானே போதிக்கிறது .இதில் மலேசியா ஏன் இன்னும் பின்  நோக்கி போகிறது.?
_______________________________________________________

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?