கமலுக்கு வெற்றியே !

மல்ஹாசனின் விஸ்வரூபம் இப்போது ஒரு முடிவை நோக்கி வந்துள்ளது.
முதலில் டிடிஎச் ஒளிபரப்பு ஒரு முடிவாக இருந்தாலும் அதில் கமல்ஹாசன் வெற்றி பெறவில்லை.
ஆனால் ஒரு புதிய வழியை தமிழ்த் திரை உலகிற்கு காட்டி விட்டாரா.
கமல்ஹாசன் எப்போதும் தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு முன்னாள் நிற்பவர்.தனது படங்களில் செய்து பார்ப்பவர்.
அதில் அவர் வெற்றியும் அடைந்துள்ளார்.பொருளாதார அளவில் சரிவையும் சந்தித்துள்ளார்.
ஆனால் புதிய முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பதில் மட்டும் அவர் போராளியாகத்தான் இன்றுவரை அவர் போராடிக்கொண்டிருக்கிறார்.இனியும் அப்படித்தான் இருப்பார்.
இந்தமுறை புதிய திரைப்படம் வெளியிடும் முன் டிடிஎச் சில் வெளியிட்டால் அதன் மூலம் படத்தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்கும்.திருட்டு விசிடி தாக்குதல் குறையும்.நல்ல படங்களுக்கு அது பணக்காரர்களை திரையரங்குக்கு வர வழைக்கும் ஒரு விளம்பரம் போல் அமையும்.அதுதான்  கமல்ஹாசனின் எண்ணமாக இருந்தது.
அதற்காக தான் பலகோடிகளை கொட்டி எடுத்த விஸ்வரூபத்தை முதலீடாக -பணயமாக வைத்து முயற்சித்தார்.அவரின் இப்புதிய முயற்சிக்கு வழமை போல் எதிர்ப்புகள்,கண்டனங்கள்.
திரையரங்கு உரிமையாளர்களின் பயமும் நியாயமானதுதான்.
டிடிஎச் மூலம் ஒளிபரப்பினால் திரையரங்கு பக்கம் பலர் வரமாட்டார்களே என்ற பயமும்,ஒளிபரப்பின் போதே படத்தை பத்தி செய்து திரும்ப பார்த்தால் என்ன செய்வது 
என்ற கவலையும் நியாயமாக வரக்கூடியதே .வந்தது.அது விஸ்வரூபத்தின் பிரச்னையை விஸ்வரூபப்படுத்தியது.
கமலை எப்போதும் சீண்டியே பார்க்கும் சிலருக்கு அது மிக வசதியாக அவதூறுகளை பேசவும் -அரசியல் செய்யவும் வாய்ப்பாக அமைந்தும் விட்டது.
ஆனால் உறுதியாக நின்ற கமல் ஹாசன் கடைசியில் பல்முனைத்தாக்குதல்கள்,நலம் விரும்பிகளின் வேண்டுகோள்களால் இப்போது டிடிஎச் முயற்சியில் கொஞ்சம் பின் தங்கியுள்ளார்.
ஆனால் அதை விட்டுவிடவில்லை.
25-ல்  திரையரங்குகள்.28- -ல்  டிடிஎச் என்பது இப்போதைய நிலை.
கமல்ஹாசன் இப்போ து தொற்று விட்டார்.என்று சிலர் வரிந்து கட்டிக்கொண்டு கூறி வருகிறார்கள்.அவர் தோற்கவில்லை.அதுதான் உண்மை.ரூ புதிய வழியை திரையுலக வணிகத்திற்கு காட்டியுள்ளார்.
கேயார் கூறியது போல் வெளி நாட்டு உரிமை த மிழ் படங்களுக்கு இல்லாமல் இருந்தபோது அதற்கு முதலில் வழிகாட்டியவர்-பாதை போட்டு தந்தவர் கமல்தான்.அது போல் இது ஒரு வழி.
இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை இது ஒரு பொது வழிதான்.
கமல்ஹாசன் கூறுவதும் அதைத்தான்.
முதலில் கூறும் புதுமையான கருத்துக்கள் விமர்சனங்களை உருவாக்கும்.
கேலி செய்யப்படக்கூடும்.தோல்வியை கூட தழுவும்.
கலீலியோ-சாக்ரடீஸ் காலம் முதல் இதுதான் உலக இயற்கை.மனித மனதின் வழமை.காலப்போக்கில் அதை உலகம்  ஏற்றுக்கொண்டுதான்  இருக்கிறது.

டிடிஎச் இல்  மட்டும் படம் வெளியாகும் காலமும் வரத்தான் போகிறது.திரையரங்கு கிடைக்காத சின்ன தயாரிப்பு படங்களுக்கு அதுதான் வடிகாலாக அமையவும் போகிறது.அதற்கு கமல்ஹாசன் வழி காட்டி விட்டார்.அந்த வகையில் கமலுக்கு வெற்றியே.
_____________________________________________________________
மன அழுத்த பானம்.
_______________________________
suran

க லோரி குறைவாக இருக்கின்ற உணவு வகைகளோ, மென் பான வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு  தராத உணவுகள் என்று இனியும் நம்ப முடியாது.இது  தற்போது செய்யப்பட்ட ஆய்வின்மூலம் இது வெளியிடப்பட்டுள்ளது. “diet பழவகை குடிபானங்கள், diet சோடா என்பவற்றை அதிகம் அருந்துவது கலோரிகளை குறைத்தாலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என இந்த ஆய்வு மூலம் தெரிகின்றது. இந்த ஆய்வு  50 - 71 வயதிற்குட் பட்ட 2,63,900 அமெரிக்கர்களை ஆய்வு செய்து பின்னர்  இந்த முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வானத்து  1995 - 2006 வரையான காலப்பகுதியிலும் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு நாளும் நாலோ அல்லது அதிலும் கூடவோ இவ்வகையான கான்களில் அடைக்கப்பட்ட சோடா அல்லது பானங்களை அருந்துபவர்கள் அவற்றை அருந்தாத மக்களிலும்பார்க்க 30 சதவீததிற்குமதிகமாக் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
குறிப்பாக diet சோடா அருந்பவர்களில் கிட்டத்தட்ட 31 சதவீதத்தினரும், சாதாரண சோடா அருந்துபவர்களில் 22 சதவீதத்தினரும் அன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றாகள்.
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் diet பழப் பானங்களை அருந்துபவர்களில் 51 சதவீதமானோர் மனஅழுத்தத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும் அவ்வறிக்கை மூலம் தெரியவருகின்றது.
தவிர, நான்கு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அளவுகளில் கோப்பி அருந்துபவர்கள் கோப்பி குடிக்காக மக்களுடன் ஓப்பிட்டு 10 சதவீதமளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றார்கள் என அந்த ஆய்வு வெளியிட்டிருக்கின்றது.
ஆனால் இவ்வாய்வானது டயத சோடா, டயட்  பழபானங்கள்  அருந்துவதால்  மன அழுத்தம் உண்டாவதற்கு காரணம் என்ன  என அறி விக்கவில்லை. ஆனாலும் இந்தக் கண்டுபிடிப்புகள் முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளுடன் ஒத்துப்போகின்றன.
ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் அடிக்கடி இவ்வகைப் பானங்களை அருந்துபவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள் என்பதை தெரிவித்துள்ளது.
______________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?