போர் ஆரம்பமா ?



இன்றைய நிலவரங்களைப் பார்க்கையில் இந்தியா-பாகிஸ்தானிடையே அறிவிக்கப் படாத போர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிகி றது.
முதலில் எல்லைப்பகுதியில் துப்பாக்கி சுடுதல்களுடன் பாகிஸ்தான் வழக்கமான வேலையை ஆரம்பித்த போது இந்திய படையினர் வழமையான ஒன்று என்று தங்கள் துப்பாக்கியையும் சுடவைத்து ஒதுங்கி யுள்ளனர்.ஆனால் பின்னர்தான் இரண்டு இந்தியாவீரர்கள் கொல்லப்பட்டதும்.அவர்கள் இறந்தபின்னரும் உடலை சிதைத்து ஒருவரின் தலையை கையோடுபாகிஸ்தான் படையினர் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
வழக்கம் போல் பாகிஸ்தான் இதுதான் உலகமா என்ற பாணியில் பதில் சொன்னதுடன்.யார் தலையையும் எடுக்கவில்லை என்றது.
"வீரர்களின் தலைகள் துண்டிக்கப்படவில்லை' என்று இந்திய ராணுவத்தின் வடபகுதி செய்தித் தொடர்பாளர் கடந்த 8ஆம் தேதி கூறியிருந்ததை ஆதாரமாக கூறியிருந்தது.
http://suransukumaran.blogspot.in/i.p/
ஆனால் அதன் பின் அந்த இந்திய ராணுவ செய்தியாளர் நிலைமையை அந்த இடம் சென்று விசாரித்து உடல்களைப்பார்த்து தலையை காணோம் .பாகிஸ்தான் படையினர் கொண்டு சென்றது உண்மை என்று செய்தி வெளியிட்டுள்ளார்.அதை பபாக் கண்டு கொள்ளவில்லை.
 இங்கு இந்திய ராணுவம் நடந்து கொண்ட முறை பொறுப்பற்றதாகவே உள்ளதாக தெரிகிறது.இது போன்ற உணர்ச்சிமயமான நிகழ்வுகளில் உண்மையை விசாரித்து செய்திகளை வெளியிட வேண்டாமா?
இப்படி தேவையற்ற -பொறுப்பற்ற செய்திகளால் பாகிஸ்தானின் கொடுர செயல்கள் உண்மையிலேயே நடந்ததா என்று உலக நாடுகளுக்கு சந்தேகம் வரும் என்பது புரியாத நிலையிலா நாட்டைக்காக்கும் அமைப்பு இருப்பது?
இது போன்ற செய்திகள் பாகிஸ்தான் தனது கொடுரங்களில் இருந்து தப்பிக்கொள்ள வழி செய்யும் என்பதை உணரமுடியாதவர்களா?
இப்போது இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. 
 நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது.
இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், 
ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவநிர்வாகத்திற்கு  இந்தியா அழைப்பு அனுப்பியது.
 ஆனால்  பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எதையும் கண்டு கொள்ள வில்லை.
ஆனால்  எல்லைப் பகுதி பாதுகாப்பு பணியில் இருந்து விடுப்பில் சென்ற வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது .
இதனால் இந்தியா தனது  எல்லைப் பகுதியில் பாதுகாப்பிறகாக பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில், ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் நிலைமையை  கண்காணித்து  வருகிறது .
இன்னும் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வருகிறது.
இப்போது போர் ஆரம்பிக்க என்ன காரணம்  என்பதுதான் தெரியவில்லை.
மற்றொரு எல்லைபகுதியில் தீவிரவாதிகளை இந்தியாவினுள் அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதிதான் இதுவாக இருக்கும் .
ARMY_3_1329035g
---------------------------------------------------------------------------------------------------------------
 கணினி கோப்புகளின் அளவை சுருக்கிட.
 -------------------------------------------------
 
 உங்கள் கணினியில்  அதிக இடம் பிடிக்கும்  அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. 
KGB Archiver மென்பொருளானது இலவசமாக கிடைக்கக் கூடிய  மென்பொருள் .
KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து MB ஆக மாற்றுகின்றது. 
இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும் முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. 
இந்த மென்பொருளை கணினி யில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணினி யே  போதுமானது.
KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த file format ஆகும். மேலதிகமாக  விரும்பிய Compression Algorithm யும் தெரிவு செய்ய முடியும்.
Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக இந்த 
KGB Archiver மாற்றிக்காட்டியுள்ளது.
தரவிறக்க  அழுத்தவும்: KGB Archiver

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?