சாதி சான்று

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு அரசு கொஞ்சம்  விழித்துக்கொண்டுள்ளது.பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை போட்டுள்ளது.
இது முன்பே செய்ய வேண்டிய வேலை.
இன்று நடக்கும் பல கலவரங்களின் மூலக் காரணமே இந்த சிலைகளாலும்,சாதி-மத விளம்பரங்களாலும் தான் .
சிலைகளை அவமரியாதை செய்து விட்டதே பல கலவரங்களை தூண்டி விட்டுள்ளது.
தலைவர்களை மதிக்க-அவர்களை நாம்  அவ்வப்போது நினைவில் கொள்ள தான் சிலை கலாச்சாரம் உருவானது.ஆனால் அது சாத்திய,மத தலைவர்களுக்கு சிலை என்று கிழிறங்கியதாலே  கலவர கலாச்சாரமாகி போனது.
தலைவர்கள் பெயரில் தமிழ் நாட்டில் போக்குவரத்துக்கழகத்திற்கு பெயர் வைத்து விட்டு பின் 
விளைவுகளால் தமிழ் நாட்டு ஆட்சியாளர்களும்.சாதிக்கலவரங்களால் மக்களும் பட்ட அவதிகளும்  மறந்திருக்காது.
அரசு பேருந்துகளாக பார்க்காமல் போட்டி சாதிக்கார வாகனங்களாக பேருந்துகள் பார்க்கப்பட்ட அவல நாட்கள் அது. 
இந்திய விடுதலைக்கு,சமூக மாற்றத்திற்கு பாடுபட்டவர்கள் இன்று குறுகிய சாதிய அடையாளங்களாக மாறி விட்டனர்.மாற்றப்பட்டு விட்டனர்.
அவர்கள்  படங்களை வீட்டில் வைத்திருப்பதே இவர் இன்ன சாதிக்காரர் என்று அடை யாளம் காட்டும் சின்னமாகி விட்டது.
இது என் உயிர் நண்பன் "சுக்கு" கூறிய உண்மை கதை.
"காமராசர் மீதான மரியாதை காரணமாக எனக்கு கிடைத்த படத்தை வீட்டில் வாசலுக்கெதிரெ மாட்டி வைத்தேன்.
வந்தவர்கள் என்னை நீங்கள் நாடாரா? என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.
"இல்லையே."
இல்லை.காமராசர் படம் மாட்டி வைத்திருக்கிறீர்களே?அதான் கேட்டேன்."
"அடப்பாவிகளா.காமராசர் ஒரு மக்கள் தலைவர்.வறுமையை உணர்ந்து 
அதற்கான பணிகளை செய்தவர்.மக்களிடம் கல்வியறிவு உண்டாக்க பல திட்டங்களை தீட்டியவர்.முன்னாள் தமிழக முதல்வர்.இதை எல்லாம் மறந்து விட்டு சாதி அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே ."
என்று புலம்பமட்டும் செய்தேன்.அவர்கள்  என்னை காங்கிரசுக்காரரா? என்று கேட்டால் கூட பரவாயில்லை.
தலைவர்களின் பொது நல சேவைகள் அனைத்தும் பின்னுக்குத்தள்ளப் பட்டு விட்டன .
இந்நிலைக்கு காரணம்.அரசுதான்.
சாதியை காட்டாமல் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லையே.
"உங்கள் சலுகைகள் ஒரு மண்ணும் வேண்டாம்.என் குழந்தைக்கு சாதீய அடையாளம் வேண்டாம்" 
என்று நான் போட்ட சண்டையால் எந்த பயனும் இல்லை.கண்டிப்பாக சாதிச் சான்று கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் சேர்க்க முடியாது.இது அரசு ஆணை.என்று திட்ட வட்டமாக கூறியதால் வெறு வழி இல்லாமல் எனது குழந்தைகளுக்கு சாதி சான்று எடுத்தேன்.
சாதி சான்றுக்கு நான் பட்ட பாடு .
எனக்கு நான் வேளையில் சேரும் வரை சாதி சான்று கர்மம் தேவைப்படவில்லை.அதானால் நான் அதை எடுக்கவே இல்லை.எனது மனைவி மற்ற யாருக்கும் சாதி சான்று அதுவரை தேவை இல்லை.ஆனால் எனது குழந்தைகளுக்கு கண்டிப்பாக அம்மா,அப்பா  சாதி சான்று முன்மாதிரி காட்டினால்தான் அந்த சாதிக்குரிய சான்று தர முடியும் என்று கூறி விட்டார்கள்.
மாதக்கணக்கில் அலைந்தும் பயனில்லை.பள்ளியில் பின்னாள் தருகிறேன் என்று சேர்த்தாகி விட்டது.அவர்களோ சான்று என்னவாயிற்று என்று அரிக்க ஆரம்பித்து விட்டனர்.
கடைசியாக வேறு வழியில்லாமல்  கடைசி ஆயுதத்தை பிரயோகித்து சாதி சான்றை ஒரே நாளில் வாங்கிவிட்டேன்.
அது ஒரு ஆளுங்கட்சி தரகரை பார்த்து அன்பளிப்பை அழுததுதான் அந்த ஆயுதம்.
100 நாட்களுக்கும் மேல் அலைந்தும் கிடைக்காத சான்று அன்பளிப்பு என்று அன்பாக அழைக்கப்படும் லஞ்சத்தை அழுததும் ஒரே நாளில் கிடைத்து விட்டது.
அப்போது முன்னோர்கள் சான்று ,அடையாளங்கள் எதுமே கேட்கப்படவில்லை.
எல்லாம் லஞ்சத்தின் பெருமை.மகிமை.
அதனால்தான் அண்ணன் பிரபாகரன் ,முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் பெயரில் எல்லாம் ஓட்டுனர் உரிமம் எடுக்க முடிந்தது.
இவர்களை தெரியாதவராகவா ஒரு அதிகாரி இருப்பார்?பணம் கண்ணை மறைத்து விடுகிறது.லஞ்சம் கொடுத்தால் தனக்கே இறப்புச்  சான்றும் ,தனது மனைவிக்கு வாரிசு சான்றும் கொடுக்கும் உத்தமர்கள் நிறைந்த அரசு அலுவலர்கள் இப்போது அதிகரித்து விட்டனர் .
பள்ளியில் கொடுக்கும் போது அவர்கள் கேட்ட கேள்விதான் என் கையாலாகாத நிலையை உணர்த்தியது .
"இங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் உங்களாலேயே சாதிச் சான்று இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கவேண்டி இருக்கே?"

அதற்கு காரணம் இருக்கிறது.


எதற்கெடுத்தாலும் சட்டம்,நியாயம் பேசும் இவனிடம் இருந்து எப்படி அன்பளிப்பு வரும். என்று எனது சக உழைப்பாளி எண்ணியதுதான் அந்த காரணம்.
ஆனால் அதன் பின்னர் நான் அந்த சான்றைக் காட்டி அவர்களை அசிங்கப்படுத்தியது தனிக்கதை.பணத்துக்காக யாருக்கு அது வழங்கப்படுகிறது என்று கவனிக்காததற்கு அவர் நொந்து போயிருந்தார்."
இதற்கு என்ன சொல்லுவது.
அரசுதான் சாதியையும் ,அதற்கு அவ்வப்போது சலுகைகளை அளித்தும் -சார்பாக நடந்தும்  சாதிக்கலவரங்களையும் உருவாக்கிறது . 
அதில் சிலதான் சிலைகளை வைப்பதும்,கட்டிடங்கள்-மாவட்டங்கள்-பேருந்துகளுக்கு சிலர் பெயர்களை வைப்பதும்.

-----------------------------------------------------------------------------------------------
தவணை முறையில்   இந்தியா  ஏலம் .
 --------------------------------------------------------------------------------------

மத்திய அரசு டீசல் விலையை தீர்மானிக்கும் தனது அதிகாரத்தை படிப்படியாக கைவிடுவது என்று கொள்கை முடிவு செய்துள்ளது. எண் ணெய் நிறுவனங்களே டீசல் விலையை தீர்மா னித்துக் கொள்ள அனுமதியளித்திருக்கிறது. மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்வை அறிவிக்கும் போது, ஒவ்வொரு முறையும் அரசுக்கு நெருக்கடி, நெருக்கடி என அரசு கூக்குரல் எழுப்புகிறது. அரசு கஜானா வுக்கு வரவேண்டிய நிதிக்குவியல் ஆட்சியாளர்க ளின் தயவால் ஊழல் பெருச்சாளிகளின் வயிற் றுக்குக் போகிறது. அலைக்கற்றை ஊழல், சுரங் கங்கள் மற்றும் கனிமத்துறை சூறையாடல் ஆகி யவற்றில் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கூறும் நெருக்கடி என்பது திட்டமிட்டு திணிக்கப்பட் டதே தவிர, இயற்கையாக உருவானதல்ல.

தற்போது இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய்க்கு 2.5 சதவிகிதம் வரி விதித்திருக் கிறது. இதன் மூலம் உணவு எண்ணெய்க்கான விலையும் உயர்ந்துள்ளது. 1990 கால கட்டங்க ளில் உணவுதானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நிலையிலேயே இருந்தது. அப்போது உணவு எண்ணெய் முழுக்க முழுக்க உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுதானிய வித்துக்களில் இருந்தே உற்பத்தி செய்யப்பட் டது. அது தன்னிறைவாகவே இருந்தது.

ஆனால் உலகமயம் வந்த பின்னால் இந்திய விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக உணவு தானியப் பொருட்கள் உற்பத்தியில் இருந்து பணப் பயிருக்கு மாற்றப்பட்டது. அதனால் இன்று உருளைக்கிழங்கு உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிட்டு வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் நாம் இன்று உணவு எண்ணெய்க்காக வெளிநாடுகளில் கையேந்தி வருகிறோம். இது முழுக்க முழுக்க அரசின் கேடுகெட்ட கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஒன்றுதானே.
மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு, ஏற்று மதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்க னவே வழங்கி வந்த சலுகைகளை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிட்டது. ஏற்றுமதிக் கான வட்டியையும் தள்ளுபடி செய்யும் புதிய சலுகையையும் அறிவித்தது. இதெல்லாம் அர சுக்கு நெருக்கடி இல்லையாம். ஆனால் சாதாரண மக்களுக்கு வழங்கி வரும் சிறு அளவிலான மானியம் மட்டும் நெருக்கடியை ஏற்படுத்துகிற தாம். 2011-12ம் நிதியாண்டில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு வசூலிக்காமல் விட்ட வரி மட்டும் ரூ. 5,294.32 கோடியாகும். இதனை ஏன் வசூலிக்கக் கூடாது. இங்கு யார் கொடுக்கும் நெருக்கடி தடுக்கிறது? எனவே டீசல் மற்றும் உணவு எண்ணெய்யின் விலை உயர்வை திரும் பப் பெறுவதே மத்திய அரசின் நேர்மைக்கு அழ காகும்.

உலகமயம் உள்ளூர்மயமாகி, ஊழல்மயமாக வும் ஆனது. படிப்படியாக ஊழல் கார்ப்பரேட்மய மாகி அரசு நிர்வாகத்தையும் தனதாக்கியிருக்கிறது. இது போதாதென்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்களின் கோரப்பசிக்கு இந்தியாவே பகுதிபகுதியாக பந்தி வைக்கப்பட்டு வருகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?