செவ்வாய், 22 ஜனவரி, 2013

உன்னால் முடியும் தம்பி


தான் எழுதிய புத்தகங்கள் மூலம் இளைஞர்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்த்து பிரபலமான m.s.உதயமூர்த்தி காலமானார்.
தன்னம்பிக்கை தரும் நூல்கள் வரிசையில் தமிழத்தில் புது ஆரம்பத்தை தந்தவர்  உதயமூர்த்தி 
suran
இன்று மத்திய வயதை தொட்டவர்களில்  அவரின் தன் னம்பிக்கை பத்தகங்களை படிக்காதவர்கள் சிலரே இருப்பார்.
தமிழக பிரபல  இதழ்களில் அவர் கட்டு ரை வராத காலமே இல்லை என்றிருந்தது.
"எண்ணங்கள், நெஞ்சமே அஞ்சாதிரு நீ, தட்டுங்கள் திறக்கப்படும், உன்னால் முடியும் தம்பி, நம்பு நீதான் அடுத்த முதலமைச்சர்" உள்ளிட்ட புத்தகங்கள் அவர் எழுதியதில் குறிப்பிடத்தக்கவை.
இவரால் எழூ தப்பட்ட  அக்கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவர்களால் உருவானது தான் மக்கள் சக்தி இயக்கம்.
இவர் பாதிப்பால்தான் "உன்னால் முடியும் தம்பி"படத்தில் பாலச்சந்தர் கமல்ஹாசன் எற்ற கதாநாயகன் பாத்திரத்துக்கு உதய மூர்த்தி என்று பெயர் வைத்தார்.
மயிலாடுதுறை விலா நகரில் 1928ல் பிறந்தவர்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப்பட்டமும்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.பின் அமேரிக்கா சென்று  விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ரசாயனத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். 
அமெரிக்காவிலேயே  10 ஆண்டுகள்  வேலை செய்து வந்தார்.

 பார்க்லே கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி நடத்தி வந்தார். அமெரிக்காவின் சுய தொழில் நிறுவனங்கள் பட்டியலில் இவரது நிறுவனம்  இடம்பெற்றுள்ள து.
இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.
பல்வேறு தன்னம்பிக்கை  கட்டுரைகளை கடந்த 30 ஆண்டுகளாக இவர் எழுதியுள்ளார். . 
அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு 1987-ல் வந்த பின் 1989 -ல் மக்கள் சக்தி இயக்கத்தைத் தொடங்கியவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு உள்ளிட்டவற்றிலும்  தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.
இப்போது  வயது 85.
அவரின் சுவடுகளாக அவரின் தன்னம்பிக்கை எழுத்துக்கள்  நம்மூடன் இருக்கும்.
suran
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அரசியல் வாதிகளான அரசு அலுவலர்கள்.
இது போன்றவர்கள் துணை வேந்தர்களானால் பல்கலை உருப்பிட்ட மாதிரிதான்.தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் "அம்மா"ஆசியுடன் மாத நாட்காட்டி புரட்சித்தலைவி படத்துடன் புரட்சித்தலைவி வழி நடப்போம் என வெளியிட்டுள்ளனர்.ஒரு நீதிபதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் 3 மணி நேரம் கு ந்தியிருந்து விட்டு இப்போது இடை நீக்கத்தில் வீட்டில் குந்தியிருக்கிறார்.
_______________________________________________________________________________________________
suran