தூ ......க்கம்...,
தூக்கமே வராமல் இருப்பவர்கள் பலர்.ஆனால் அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.பணக்கவலை முதல் மனக்கவலை வரை தூக்கம் வர மறுப்பதற்கு காரணமாக அமைந்து விடும்.
காதல் கவலை கூட தூக்கத்தை கெடுத்து விடும்.
தூ க்கம் வர ஆட்டுமந்தையை நினைத்து ஆடுகளை எண்ண ஆரம்பித்தால் சிறிது நேரத்தில் தூக்கம் கண்களைத் தழுவி விடும் என்று கேள்விப்பட்டு விட்டால் வரை எண்ணியும் தூக்கமும் ஆடுகளின் கணக்கும் சரியாக வராமல் முழித்தவர்கள் பலர்.
தூக்கம் ஒவ்வொருத்தருக்கும் அவசியம்.
பகலெல்லாம் உழைத்த உடலுக்கு அதுதானே ஒய்வு.மறுபடியும் உழைக்க சக்தியை உடலுக்கு புதுப்பிக்கும் வாய்ப்பு.
தூக்கம் வராமல் புலம்பிக்கொண்டிருக்கும் சிலர் மத்தியில் எப்போதும் தூங்கி வழியும் நபர்களும் இருக்கிறார்கள் .
தூங்க்கிக்கொண்டிருக்கும் நோயும் சிலருக்கு உள்ளது.ஒருமாதம் தூங்கியே கழிக்கும் பெண்ணைப்பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அவர் 30 நாட்கள் தூக்கத்தில் இருமுறைதான் எழுந்தாராம்.ஒருமுறை சாப்பிட.மற்றோர் முறை கழிப்பறை செல்ல.அதுவும் துங்கி வழிந்து கொண்டெதானாம் .
மருத்துவர்கள் அதை இப்போதைக்கு சரி செய்ய இயலா வியாதி என்று கையை விரித்து விட்டார்களாம்.
அதே நேரம் தமிழ்த் திரையுல கவிஞர் முத்துலிங்கம் இரவில் தூங்கியே பல ஆண்டுகளாயிற்றாம் .
"அதனால் உடலில் தனக்கு சோர்வு எதுவும் உண்டாக வில்லை . எப்போதும் போல்தான் உணருகின்றேன் "என்கிறார்.
ஆனால் இரவில் எல்லாரும் தூங்கிகொண்டிருக்கும் போது .உலகே அமைதியாக இருக்கும் பொது தான் மட்டும் விழித்துக்கொண்டிருப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம்.
மருத்துவர்கள் ஒவ்வொரு வயதினருக்கும் இவ்வளவு நேரம் தூங்குவது உடல் நலனுக்கு நல்லது என்று கணித்திருக்கிறார்கள் .
அதன் விபரம்:
- 3-11 மாதக்குழந்தைகள் 14-15 மணி நேரம் .[இந்த நேரம்தான் அவர்கள் உடல் வளர்ச்சி அடைகிறதாம்.]
- 12-35 மாதக் குழந்தைகள் 12-14 மணிகள்.
- 3-6 வயதினர் 11-13 மணிகள்.
- 6-10 வயதினர் 10-11மணிகள்.
- 11-18 வயதினர் 9 மணி நேரம்.
இதை கண்டிப்பாக கடை பிடித்தால் ஆரோக்கிய சுறு,சுறுப்பு கிடைக்கும்.
பகல் நேரம் சிலருக்கு சாப்பிட்டதும் தூக்கம் கண்களை கட்டிப்போடும்.அவர்கள் சிறிது ஓய்வெடுப்பதில் தவறில்லை.
அது உடலில் ஆங்காங்கே கொழுப்பை சேர்த்து உடலை பருக்க வைக்கும்.
தொந்தி வரக்காரணமாக அமைந்து விடும்.கெட்ட கனவுகளை வரச்செய்து மனதை பாதிக்கும்.
இரவு தூக்கம் வர சிலருக்கு புத்தகத்தை விரித்தாலே போதும்.அதுவும் பாடப்புத்தகம் என்றால் தூக்கம் நிச்சயம்.
முகம்,கைகால்களை நன்கு கழுவி துடைத்து விட்டு முடிந்தால் குளித்து விட்டு படுத்தால் சிலருக்கு தூக்கம் கிடைக்கலாம்.தண்ணீர் கிடைக்காத நேரம் என்ன செய்வது?
இரவில் இதை தட்டச்சு செய்வதால் தூக்கம் வருகிறது .
முடிக்கும் முன் சின்ன யோசனை.
கட்டிலுக்கு அடியில் எதையோ தேடுவது போல் முழங்காலில் சிறிது சென்று வந்தால் தூக்கம் வரும் என்று ஒரு மருத்துவ இதழில் படித்தேன்.ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
அதை சோதிக்க முடியவில்லை.காரணம் இரண்டு மட்டும்தான்.
ஒன்று படுக்கையில் படுத்து சில நிமிடங்களில் துங்கி விடும் பழக்கம் .
மற்றொன்று முக்கியமானது.என்னிடம் கட்டில் இல்லை.
____________________________________________________________________________________________