தடைக்கு தடை ...,
விஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம்.
இசுலாமிய இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை.
முன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது.
தற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம்.
அரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல.
படத்தை அவர் பார்த்திருக்க வெண்டும்.
அல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று விசாரித்திருக்கலாம்.எந்த நடைமுறையும் இந்த விஸ்வரூபத்தில் கடை பிடிக்கப்படவில்லை.இது அரசின் தடையில் உள்நோக்கம் கற்பிக்க வைக்கிறது.
தங்களுக்கு பிடிக்காதவர்களின் படத்துக்கு கூட்டமாக வந்து மனு கொடுத்தால் அதற்கெல்லாம் தடை விதித்து விடுவார்களா?
தோட்டத்தின் தலையீட்டால்தான் இந்ததடை அவசரமாக விதிக்கப்பட்டுள்ளது.
இசுலாமிய சகோதரர்களின் வாக்கு வங்கி மட்டுமல்ல.
ஜெயா டி . வி.க்கு படத்தை வாங்கியும் படம் டிடி எச் களில் ஒளிபரப்பினால் தனது வருமானம் பாதிக்கும் என்ற காரணம்.சன் டிடி எச் படம் ஒளிபரப்ப வாங்கியுள்ளது.
உதய நிதி ஸ்டாலின் உட்பட சில திமுகவினர் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.போன்ற கண்ணூறுத்தல்கள் .
அதுமட்டுமல்ல கமல்ஹாசன் தன்னை சந்தித்த கையோடு கருணாநிதி கலந்து கொண்ட சிதம்பரம் விழாவில் தனது பிரதமர் கனவை கலைக்கும்படி வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரத்துக்குத்தான் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பேசிய கருணாநிதியின் வார்த்தைகளை ஆமோதித்து மேடையில் கைதட்டியது. போதாதா விஸ்வரூபத்துக்கு தடை விதிக்க காரணங்கள்.? இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பு மனு ஒரு பிடியாக கிடைத்துவிட்டது.
இடையில் விளம்பரப்போராளி சீமான் தனது வழக்கமான அவல வாயைத்திறந்துள்ளார்.படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை சரிதான் என்று முழங்கியுள்ளார்.ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமாக அறிக்கை படத்தை பார்க்காமலேயே விடுகிறார் சீமான் .
ஈழத்தமிழர்களை வைத்து நடத்திய அரசியல் கட்சிக்கடை வியாபாரம் இல்லாததால் இப்போது வேறு திசைகளில் திருப்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.அம்மாவுக்கு சிங்கியும் அடிக்க வேண்டியிருக்கிறது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வே ண்டிய அரசே ஒரு சார்பாக தடை விதித்தது அரசியல் காரனங்களால்தான்.
இப்போது விஸ்வரூபம் நீதிமன்றம் போய்விட்டது.
நீதிபதி படத்தை பார்த்து விட்டு தடைக்கு தடை பற்றி பார்க்கலாம் என்றுள்ளார்.
அதுதானே முறையாக இருக்கவும் செய்கிறது.
கமலஹாசன் அரசை எதிர்த்து நீதிமன்றம் போவது தோட்டத்தை கொஞ்சம் அல்ல ரொம்பவே கோபப்படுத்தும்.
திரையரங்கு,விநியோகத்தர்கள்,இசுலாமியர்களுடன் பிரச்னைகளை சந்தித்த கமலுக்கு இப்போது அரசுடனும் போராட்டமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கமல்ஹாசனின் அறிக்கை:---------------------------------------------------------
'என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசார தீவிரவாதம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்'
எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இசு லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.
அச் சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுகள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக எது மனிதாபிமானமோ அதற்காக நான் பலபடி மேலே போய் குரல்கொடுத்துள்ளேன்.
மேலும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தைத் தொடர்ந்து குறி வைத்து இப்படிக் காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.
இப்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன்.
இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இணையத்தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------