முதன் முறையாக திரைக்கு வராத
"நான் நேற்று இரவு மலேசியா சென்று இந்த படத்தை பார்த்து விட்டேன். ரொம்ப
நல்லா இருக்கு.
இதுல யாரையும் புன்படுத்த இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த
கோமாளிகளுக்காக அரசு தடை செய்து இருக்கிறது. முஸ்லிம் நாடான மலேசியாவில்
கூட தடை இல்லை.
ஆனால் இந்தியாவில்?
இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சி
நடக்கவில்லை என்று பலமுறை தினமலரில் நான் கருத்து எழுதி இருக்கிறேன்.
அதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. இங்கு சில சுயநலம் கொண்ட கும்பல்கள்தான்
ஆட்சி மற்றும் அதிகாரம் செலுத்துகின்றன. மக்கள் கருத்துக்கும் மதிப்பு
கிடையாது. மக்களுக்கும் மரியாதை கிடையாது. ஒரு சாதாரண சினிமா வை பிரச்சினை
ஆக்கியது இந்த சினிமா அல்ல. சுயநலம் கொண்ட கும்பல் தான் காரணம். இந்த
சினிமா பத்தி யாரும் கண்டுகொள்ளவே இல்லை நேற்று வரைக்கும். எந்த
பிரச்சினையும் இல்லை நேற்று வரைக்கும். ஆனால் இன்று? காரணம் யார்? இந்த
சினிமா வா அல்லது இந்த இந்த சுயநல கும்பலா? இதிலிருந்தே தெரிகிறது
பிரச்சினையை தூண்டி விடுவது இந்த சுயநல கும்பல் என்று. ஏராளமான
சினமாக்களில் திருநெல்வேலிகாரன் ரொம்ப மோசமானவங்கடா என்று வசனம்
இருக்கிறது. அதற்காக திருநெல்வேலி மக்களுக்கு இந்த திரைபடத்தை
காண்பித்துவிட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம்
இல்லையா? ஒரு ஜாதியினரை பல திரைப்படங்களில் நாட்டாமையாக காண்பித்து
இருக்கிறார்கள்.
அதற்காக மற்ற ஜாதியினர் அனைவரும் என் ஜாதியினை எப்படி நீ
இரண்டாம்பட்சமாக படம் எடுக்கிறாய் என்று புகார் செய்து வெளியிட முடியாமல்
செய்தால் முட்டாள்தனம் இல்லையா? பல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி
தொடர்களிலும் அண்ணாச்சியை வில்லனாக காண்பிக்கிறார்கள். அன்னாசிமார்களுக்கு
திரையிட்டு விட்டு ஓசியில் படம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்த படம்
வெளியிட கூடாது என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? சின்ன கவுண்டர் என்று
எப்படி நீ தலைப்பு வைக்கலாம் என்று கவுண்டர் ஜாதியினர் அனைவருக்கும்
ஓசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியிட கூடாது என்று சொன்னால் முட்டாள்தான்
இல்லையா?
இது திரைப்பட துறையினருக்கு ஒரு வெட்ககேடு. சும்மா சும்மா
போராடும் இந்த திரைப்பட மகா நடிகர்கள் ஒரு உண்மையான கலைஞனுக்காக
மட்டுமின்றி சினிமாவின் மைய வேருக்கு வந்த பிரச்சினை என்று என் போராட
வில்லை? இந்த சிறுமான்மை கும்பல் என்றாவது தங்கள் மத மக்களின் ஜீவாராதன
பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? தங்கள் மத வழிபாட்டுக்கு
அருகில் இருக்கும் சாராய கடையை மூட கூட துப்பு இல்லை உங்களுக்கு.
அவர்களுக்கு தேவையான கல்வியை குடுக்க உங்களுக்கு துப்பு இல்லை. உங்களை நம்ப
கூட உங்கள் மத மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு சுயநலவாதிகள்.
"
"
Indsing Guy"
25-ஜன-2013 10:07:13 IST
தினமலரில் வெளியான வாசகர்
Indsing Guy ன் கருத்து.
இனி நமது கருத்து: -
டிடிஎச் படம் வெளியிட முயன்று அதை திரையரங்கினர் எதிர்ப்பால் திரையரங்க்குக்குப்பின் இரு நாட்களுக்குப்பின் என்று ஆக்கிய டிடிஎச் பண வருமானத்தை இழந்த கமல்ஹாசனுக்கு இப்போது இசுலாமியர்கள் எதிர்ப்பு ஒரு விளம்பர வாய்ப்பாகி விட்டது.
கமலுக்கு தான் போட்ட பணம் 90 கோடிகளை விரைவிலேயே அள்ள இந்த பரபரப்பு உதவும்.
கேரளா சென்று படம் பார்த்த கமலின் விசிறி காலையிலேயே அலைபேசியில் பேசினார்.
படத்தில் கமல்ஹாசனே அதாவது கதையின் நாயகனே முஸ்லீம்.
ஆப்கன் முஸ்லிம்கள் -அமெரிக்க மோதலே கதையின் கரு.இதில் இசுலாமை இழிவு படுத்த வாய்ப்பே இல்லை.இழிவு படுத்தி காட்சிகளும் இல்லை.
பின் எதற்கு இந்த எதிர்ப்பு என்பது மர்மாமாக இருக்கிறது என்றார்.
காரணம் என்னவாயிருக்கும்?
முன்பே பட முன்னோட்டம் காட்சியாக மலேசியாவில் படம் பார்த்ததாக கூறிய இசுலாமிய சகோதரர் ஒருவர் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவோ-ஆட்சபகரமான கட்டங்களோ-வசனங்களோ இல்லை என்று கூறியும் கூட இந்த எதிர்ப்பை இங்குள்ளவர்கள் காட்டும் எதிர்ப்பு கமலின் விஸ்வரூபம் பட பிரமோசனுக்கான உத்திகளில் ஒன்றாக இருக்கலாமோ ?
ஆப்கனில் நடக்கும் கதையில் அமெரிக்கா அங்கு நடத்தும் தீவிரவாத செயல்களை காட்டியிருப்பதாக படத்தை பார்த்தவர் கூறுகையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் அது முஸ்லீம் எதிர்பாகத் தோன்றுவது ஏன் ?
'துப்பாக்கி 'படத்துக்கு வெறும் ஆர்ப்பாட்டத்தோடு களைந்து சென்றவர்கள் இதற்கு முழுக்கத்தடை போடக் கூறுவது புரியாத புதிர்.
அவர்கள் மனு கொடுத்த உடனேயே ஜெயா அரசு தடை போட்டதும் புதிர்களில் ஒன்றுதானோ?
ஜெயா டிவிதான் படத்தை வாங்கியுள்ளது .திரையரங்குகளில் வராவிட்டால்.
என்று வெளியிட்டு விளம்பரங்களில் காசு பார்க்கலாம் என்றிருக்குமோ?
கமல்ஹாசன் எப்போதுமே இசுலாமியர்கள் ஆதரவை பெற்றவர்.அவர்களுக்கு ஆதரவானவர்.பெயரிலேயே ஹாசனை வைத்துக்கொண்டிருப்பவர்.
எப்படியோ.படம் பார்க்க எண்ணாதவர்களையும் விஸ்வரூபம் படத்தை பார்க்க வெண்டும் என்ற ஆவலைத்தூண்டி விட்டார்கள்.
இதன் மூலம் படத்துக்கு நல்ல விளம்பரம் செய்த இசுலாமிய அமைப்புகளுக்கு வசூலை அள்ளப் போகும் கமல்ஹாசன் நன்றி கூறித்தான் ஆக வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
101 வயதான' பாவ்ஜா சிங் ' அடுத்த மாதம் ஹாங்காங்கில் நடக்கும் மாரத்தானில் ஒடி விட்டுஒய்வு பெறப் போகிறாராம்.