கும்பமேளா
உலகின் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் ஒன்று கும்பமேளா
.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளா .உலக அளவில் புகழ் பெற்றது.
கங்கை- யமுனை நதிகள் அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில்
நடைபெறும் இவ்விழா தற்பொது துவங்கியுள்ளது..
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அங்குள்ள நதியில் நீராடுவார்கள் .வெளி நாடுகளில் இருந்து இதை வேடிக்கை பார்க்க மட்டும் 10 லட்சத்தி ற்கும் அதிமானோர் வந்துள்ளதாக தெரிகிறது.
இத்திருவிழாவின் முதல் நாளான நே ற் று(14.1.13) மட்டும் ஒரு கோடி பேர் இச் சங்கமத்தின் நீராடியுள்ளனர்.
வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது .ஆனாலும்
ஆயிரக்கணக்கான சாமியார்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் நீராடி னர்.
உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை
மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள் இங்கு புனித நீராட வருவது,
கும்பமேளாவின் போது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக கருதப்படும் என
செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வண்ணமயமான ஒரு ஊர்வலத்தில் வந்த நிர்வாண நாகா
சாதுக்கள் மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே கங்கை யமுனை சங்கமத்தில்
குதித்து நீராடினர்.
கும்பமேளா காலத்தில்கங்கை-யமுனை சங்கமத்தில் குளித்தால் தாங்கள் செய்த பாவங்கள் ஆற்றோடு போய் விடும் என்று நம்புகிறார்கள்.
ஆறு நாட்கள் கங்கை- யமுனை சங்கமத்தில்
நீராடும் மக்களுக்கு உதவ நதிகளுக்கு மேலேயுள்ள அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது .
இந்த கும்பமேளாக்காக அரசு மட்டும் 1150 கோடி இந்திய ரூபாய்களை செலவு செய்வதாக தெரிகிறது.
ஆனால் இந்த கும்பமேளா வில் திரளும் மக்கள் மூலம் இங்கு இந்த 10 நாட்களில் மட்டும் 12,000 கோடி ரூபாய்கள்
அளவுக்கு வியாபாரம் இருக்கும் என்று தெரிகிறது.
30,000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு
பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பதினான்கு இடங்களில் தற்காலிக
மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூடும் மக்களின் அவசரத்
தேவைக்காக 40,000 க்கும் அதிகமான கழிப்பிடங்கள் அரசாலும்,தனிப்பட்டவர்களாலும் கட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை கோடி பேர்கள் கூடும் விழாவில் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதும்,விழா முடிவில் மக்கள் விட்டுச் செல்லும் கழிவுகளை அகற்றுவதும் தான் தங்களின் மிக கடுமையான கவலையாக இருப்பதாக அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.
சென்ற முறை இந்த கும்பமேளா கழிவுகளை அகற்றிட ஒரு மாதம் ஆனதை கவலையுடன் அவர்கள் கூறுகின்றனர்.பிளாஸ்டிக் பைகளை கொண்டுவரக்கூடாது என்று கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.ஆனால் இத்தனை மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பது நடக்கிற காரியமாகத்தெ ரிய வில்லை.
__படங்கள் நன்றி;பிபிசி.
____________________________________________________________________________________________
வான் புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள்.!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
72 ஆயிரம் பேர்கள்
2012-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை ராணுவ
வீரர்கள் கணக்கெடுப்பு இலங்கை அரசால் நடத்தப்பட்டது.
அப்போது விடுமுறையில்
சென்று பணிக்கு திரும்பாதவர்கள் 72 ஆயிரம் பேர்கள் என்று தெரிய வந்துள்ளது .
சென்ற ஆண்டில் மட்டும் 71 ஆயிரத்து 458 வீரர்கள் ராணுவத்தில்
இருந்து தப்பி ஓடியதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவர்களில் 33 ஆயிரத்து
532 பேர் வயது காரணமாகவும்-உடல் தகுதி காரணமாகவும் கீழ் ராணுவத்தை விட்டு நீக்கப்பட்டள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தளி மறைவான மற்ற படை வீரர்களை தேடிப் பிடித்து கைது செய்ய இலங்கை ராணுவம் நடவடிக்கை
எடுத்துவருகிறது.
__________________________________________________________________________
ஒசாமா வசூலில் தூள்கிளப்புகிறார்.
பாகிஸ்தானில் 2011,மே மாதம் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது பற்றிய களத்தை வைத்து எடுக்கப் பட்ட படம் " Zero Dark Thirty"இதை Kathryn Bigelow என்பவர் எடுத்துள்ளார்.
இத் திரைப்படம் அமெரிக்காவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும், கனடாவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்துக்கு
வந்துள்ளது.
படம் வெளியான மூன்று நாட்களுக்குள் 24
மில்லியன் டாலர்களை உலக திரையரங்குகளில் அள்ளியுள்ளது.
வசூலை மட்டுமல்ல , கடும் விமர்சனத்தையும் இப்படம் பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் இந்தப் படம் வெளியாகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------